மன அழுத்தம் முதல் உடல் சோர்வு வரை... தினம் இரவில் கிராம்பு சேர்த்த பால் அளிக்கும் நன்மைகள் பல

Clove Milk Benefits: தினமும் இரவில், இரண்டு அல்லது மூன்று கிராம்புகள் சேர்த்த பாலை அருந்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 14, 2025, 03:02 PM IST
  • இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில், டென்ஷனுக்கும் மன அழுத்தத்திற்கும் குறைவில்லை.
  • கிராம்பு பாலில் உள்ள சத்துக்கள் மனதை அமைதிப்படுத்த உதவும்.
  • உணவை ஆற்றல் ஆக மாற்ற, சிறந்த செரிமான அமைப்பு தேவை.
மன அழுத்தம் முதல் உடல் சோர்வு வரை... தினம் இரவில் கிராம்பு சேர்த்த பால் அளிக்கும் நன்மைகள் பல

இந்திய உணவு மற்றும் ஆயுர்வேதத்தில், கிராம்புக்கு மிகவும் முக்கியத்துவம் உண்டு. இது உணவிற்கு மனத்தையும் சுவையையும் கொடுப்பதோடு, எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை கொண்டுள்ளது. பிரியாணி குருமா போன்ற உணவு வகைகளில், சோம்பு பட்டை போல, அவசியம் தேவைப்படும் மசாலாக்களில் கிராம்பும் ஒன்று.

Add Zee News as a Preferred Source

 கிராம்பு பாலை அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் 

தினமும் இரண்டு கிராம்பு சாப்பிட்டால் போதும், எண்ணற்ற அற்புத நன்மைகளை பெறலாம் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் தினமும் இரவில், இரண்டு அல்லது மூன்று கிராம்புகள் சேர்த்த பாலை அருந்துவதால் என்னென்ன நன்மைகள் (Health Tips) கிடைக்கும் என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.

மன அழுத்தம்

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில், டென்ஷனுக்கும் மன அழுத்தத்திற்கும் குறைவில்லை. இந்நிலையில் மன அழுத்தத்தை போக்க, தினமும் இரவில் கிராம்பு பால் அருந்துவது சிறந்த பலன் கொடுக்கும். கிராம்பு பாலில் உள்ள துத்தநாகம், தாமிரச்சத்து, மெக்னீசியம் ஆகியவை மனதை அமைதிப்படுத்த உதவும்.

தூக்கமின்மை

நல்ல ஆரோக்கியமான உடலுக்கு நல்ல தூக்கம் மிக அவசியம். தூக்கமின்மை பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது என்பதை மறுக்க இயலாது. இந்த பிரச்சனையை தீர்க்க, இரவு தூங்கும் முன் கிராம்பு பாலை அருந்துவதால் நல்ல ஆழ்ந்த தூக்கத்தை பெறலாம்.

செரிமான ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியமாக இருக்க செரிமான சக்தி சிறப்பாக இருக்க வேண்டும். உணவை ஆற்றல் ஆக மாற்றவும், ஊட்டச்சத்துக்கள் உடலில் நன்றாக உறிஞ்சப்படுவதற்கும் சிறந்த செரிமான அமைப்பு தேவை. இதற்கு கிராம்பு பால் உதவும். வயிறு தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். செரிமானத்திற்கு தேவையான நொதிகள் சுரப்பை தூண்டுவதால், ஜீரணம் சிறப்பாக இருக்கும்.

நோய்களிலிருந்து பாதுகாப்பு

கிராம்பில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள், ஃப்ரீ ரேடிக்கல்களால், உடலின் செல்களுக்கு ஏற்படும் சேதத்தை தவிர்த்து, புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான நோய்கள் ஏற்படும் வாய்ப்பை பெறுவது குறைக்கிறது.

அழற்சி எதிர்ப்பு பண்புகள்

கிராம்பில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், உடலில் உள்ள வீக்கத்தை போக்கி கீல்வாதம் மூட்டு வலி ஆகிய பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெற உதவுகிறது. அதோடு இதய நோய், எலும்பு பலவீனம், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். 

இரத்த சர்க்கரை அளவு

நீரழிவு நோயாளிகளுக்கு எகிரும் சர்க்கரை அளவை குறைக்க உதவும் மசாலாக்களில் கிராம்பும் அடங்கும். இது வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டி நீரழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் உடல் எடையையும் சிறப்பாக குறைக்கலாம்.

இதய ஆரோக்கியம்

கிராம்பில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், இரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும் கிராம்பு சேர்த்த பால் உதவும்.

இயற்கை வலி நிவாரணி

கிராம்புகளில் உள்ள யுஜினால் என்ற எண்ணை சிறந்த வழி நிவாரணி. எனவே உடலில் வலி இருந்தால், கிராம்பு சேர்த்த பாலை அருந்துவது பலன் கொடுக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

தினமும் இரவு கிராம்பு பால் குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் உள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட்கள் பருவ கால நோய்கள் மற்றும் தொற்று நோய்களிலிருந்து உடலை காக்கிறது.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | கொழுப்பை எரிக்க... தொப்பை கரைய... கடைபிடிக்க வேண்டிய 7 எளிய கட்டளைகள்

மேலும் படிக்க | மூளையை சூப்பர் கம்ப்யூட்டர் போல் வேலை செய்ய வைக்கும் வால்நட்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News