Health Benefits of Triphala: இந்த நவீன காலத்தில் பல வகையான நோய்கள் நம்மை ஆட்கொள்கின்றன. இவற்றிலிருந்து நிவரணம் பெற நாம் பல வித மருந்துகளை உட்கொள்கிறோம். ஆனால், இயற்கையான வழிகளில் நோய்களுக்கு தீர்வு காண்பது சிறந்ததாக கருதப்படுகின்றது. ஏனெனில், இதன் மூலம் பக்கவிளைவுகள் இல்லாமல் நோய்களுக்கு நிவாரணம் காணலாம்.
இயற்கையான மருத்துவ முறையில் ஆயுர்வேதத்திற்கு முக்கிய பங்குள்ளது. இதில் உள்ள பல மருந்துகள் பல வகையான நோய்களையும் உடல் நல பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகின்றன. பல வகை திறன் கொண்ட ஆயுர்வேத மருந்துகளில் திரிபலாவும் ஒரு முக்கியமான மருந்தாகக் கருதப்படுகிறது.
திரிபலா கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகிய மூன்று மூலிகைகளின் கலவையாகும். திரிபலாவில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. மேலும் பண்டைய காலங்களிலிருந்து பல்வேறு நோய்களுக்கான சிகிச்சையில் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
Digestion: செரிமானம்
செரிமான அமைப்பு பிரச்சினைகளுக்கு, குறிப்பாக மலச்சிக்கலுக்கு சிகிச்சையளிப்பதில் திரிபலா மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது குடல்களை சுத்தப்படுத்தி செரிமானத்தை மேம்படுத்துகிறது. மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு வாரங்களுக்கு திரிபலாவை எடுத்துக் கொண்ட பிறகு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
Immunity: நோய் எதிர்ப்பு சக்தி
தேசிய மருத்துவ நூலகத்தின் ஆகஸ்ட் 2017 அறிக்கை, திரிபலா ஆண்டிஆக்சிடெண்ட் பண்புகளைக் கொண்டுள்ளதாகவும், இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் உதவியாக இருக்கும் என்று கூறுகிறது. இது தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.
Eye Sight: கண் பார்வை
கண் பார்வையை மேம்படுத்துவதிலும், கண்கள் தொடர்பான கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதிலும் திரிபலா பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. திரிபலா நீர் கொண்டு கண்களைத் தொடர்ந்து கழுவுவது பார்வையை மேம்படுத்தி கண் எரிச்சலைக் குறைக்கும்.
Skin Care, Hair Care: சரும பாதுகாப்பு, கூந்தல் பாதுகாப்பு
திரிபலா சருமப் பளபளப்பை அதிகரிக்கவும், முடி உதிர்தலைக் குறைக்கவும் உதவுகிறது என்று பல ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. இது இரத்தத்தை சுத்தப்படுத்தி, சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது. மேலும் முடி வேர்களையும் திரிபலா வலுப்படுத்துகிறது. இது கூந்தலை அடர்த்தியாகவும் வலுவாகவும் ஆக்குகிறது.
Weight Loss: எடை இழப்பு
திரிபலா வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கொழுப்பை கரைக்க உதவுகிறது. இதன் மூலம் எடை கட்டுப்பாட்டில் இது உதவுகிறது. இதை தொடர்ந்து சாப்பிட்டால், பசி கட்டுப்படுவதோடு செரிமானமும் மேம்படுகிறது. இது ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவுகிறது.
Cancer: புற்றுநோய் எதிர்ப்பு
திரிபலா புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கலாம் என ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. இது கட்டி செல்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.
திரிபலா பண்டைய காலங்களிலிருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், நவீன ஆராய்ச்சிகளும் திரிபலாவின் ஆரோக்கிய நன்மைகளை உறுதிப்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சீரகம் முதல் ஏலக்காய் வரை... நலம் தரும் மசாலாக்களின் மருத்துவ பண்புகள்
மேலும் படிக்க | கை, கால்களில் தெரியும் இந்த புற்றுநோய் அறிகுறிகள்; புறக்கணிப்பது ஆபத்தானது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ








