Instagram Influncer Pranjal Pandey Weight Loss Tips : இன்ஸ்டாகிராம் தளத்தில் பிரபலமான பெண்ணாக இருக்கிறார், பிராஞ்சள் பாண்டே. இளம் பெண்ணான இவர், தனது இணையதள பக்கத்தில், 154 கிலோவில் இருந்து எப்படி 65 கிலோவாக இளைத்தார் என்பது குறித்து பகிர்ந்திருக்கிறார். இவர், தனக்கு உடல் எடையை இழக்க எந்தெந்த டிப்ஸ்களை பின்பற்றினார் என்பது குறிந்து பகிர்ந்திருக்கிறார்.
இந்த பெண், பிறரை போல பெரிதாக ஜிம்மிற்கெல்லாம் செல்லவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், இந்த ஃபிட்னஸ் பயணத்தில் தன்னுடைய உணவு பழக்கத்தை தனது உடலுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டதாகவும், வாழ்க்கை முறைகளை கொஞ்சம் மாற்றிக்கொண்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
சரியான உணவு:
பலர், உடல் எடையை குறைக்க நம்மை நாமே பட்டினி போட்டுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால், எப்போதும் அது உண்மை கிடையாது. இதைத்தான் பிராஞ்சலும் கூறுகிறார். உடல் எடை குறைப்பு என்பது நீங்கள் எதை சாப்பிடுகிறீர்கள் என்பதை பொறுத்துதான் இருக்கிறது என்று கூறும் அவர், அதுதான் ஃபிட்னஸ் ஜர்னியில் வெற்றிக்கான ஒரே வழி என்கிறார்.
புரதம் மற்றும் ஃபைபர்:
பிராஞ்சள், புரதத்தையும் ஃபைபரையும் உடல் எடை குறைப்பிற்கு உதவும் ஹீரோக்கள் என்கிறார். இவை இரண்டும் சேர்ந்து, அவருக்கு அதிகமான பசியுணர்வு ஏற்படாமல் செய்ததாகவும், அடிக்கடி வெளி உணவு சாப்பிடும் உணர்வை தவிர்க்க உதவியதாகவும் கூறியிருக்கிறார். பருப்பு, பனீர், முட்டை தாவர காய்கறிகள், பீன்ஸ் மற்றும் கேரட் ஆகியவை இதற்காக தனக்கு உதவியதாக கூறியிருக்கிறார். புரதங்கள், நம் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவுவதாகவும், தசை வளர்ச்சிக்கு உதவி, உடல் எடை இழப்பிற்கும் இவை உதவுவதாக கூறியிருக்கிறார்.
வெயிட் ட்ரைனிங்:
பிராஞ்சள், தினமும் 45-60 நிமிடங்கள் வெயிட் ட்ரைனிங் செய்திருக்கிறார். அதன் பின்பு, 15-30 நிமிடங்கள் வரை குறைந்த அளவு கார்டியோ ட்ரைனிங் செய்திருக்கிறார். அவர் இதற்கு மேல் குதித்து செய்யும் வர்க்-அவுட்களையோ, அதிகமாக ட்ரைனிங் செய்வதையோ அவர் விரும்பவில்லை.
கார்டியோ ட்ரைனிங், இதய நலனுக்கு உகந்ததாக இருக்கும் என்பது மருத்துவர்களின் கருத்து. ஆனால், கொழுப்பை குறைத்து தசை வளர்ச்சியில் ஈடுபட வேண்டும் என்றால், அதற்கு வெயிட் ட்ரைனிங்கும் உதவுவதாக பிராஞ்சல் தெரிவித்திருக்கிறார். HIIT உடற்பயிற்சிகள், உடலுக்கு சரியானவை என்றாலும் கூட, அதை அதிகமாக செய்தால் நமக்கு வாந்தி-மயக்கம் ஆகியவை வரலாம். அதே போல இதனால் பலருக்கும் அடிபடவும் வாய்ப்பை ஏற்படுத்தும். எனவே இவை அனைவருக்கும் உகந்ததாக இருக்காது என்கிறார் பிராஞ்சல்.
5 சிறிய மாறுதல்கள்:
பிரஞ்சாலுக்கு உடல் எடையை குறைக்க 5 சிறிய மாறுதல்கள் உதவி இருக்கிறது. அவை அனைத்தும் தினசரி செய்யக்கூடிய சிறிய மாறுதல்களாக இருக்கின்றன.
>தினமும் ஒரு டம்ளர் வென்னீர் குடித்திருக்கிறார். அதில் ஆப்பிள் சைடர் வினீகர் அல்லது எலுமிச்சை சேர்த்து குடித்திருக்கிறார். தினமும் காலையில் வென்னீரை அவர் குடித்திருக்கிறார்.
>சமைக்காத கேரட்டை உணவுக்கு முன் எடுத்துக்கொண்டிருக்கிறார்.
>தினமும் ஒரு டீஸ்பூன் துளசி விதைகளை சாப்பிட்டீருக்கிறார். இது செரிமானத்திற்கு உதவும் என்றும் ரத்தத்தின் சர்க்கரை அளவை பேலன்ஸ் செய்ய உதவும் என்றும் கூறுகிறார்.
>தினமும் சாப்பிடுவதற்கு முன்பு செரிமானத்திற்காக 15 நிமிடம் நடைப்பயிற்சி செய்திருக்கிறார். அப்படி நடைப்பயிற்சி செய்யவில்லை என்றால் அவர் 10 ஸ்குவாட்ஸ் பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்.
>தன் வாழ்வில், தனக்கு கிடைத்த பரிசாக நினைக்கும் விஷயங்களை தினமும் ஒரு ஜர்னலில் எழுது வந்திருக்கிறார். இது, அவரது வெயிட் லாஸ் இலக்குகளை அடைய உதவி இருக்கிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பிராஞ்சலின் தனிப்பட்ட கருத்து ஆகும். இவை நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலும் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | உடல் எடை உடனே குறைய இலவங்கப்பட்டையை இப்படி சாப்பிடுங்க போதும்
மேலும் படிக்க | 34 கிலோவை குறைத்த 26 வயது இளைஞன்! கொழுப்பை குறைக்க உதவிய டயட் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









