கொலாஜன் என்பது உடலின் முக்கிய புரதப் பகுதி. இது சருமம், எலும்பு, தசைகள், கூந்தல் மற்றும் நகங்கள் போன்ற உறுப்புகளின் கட்டமைப்புக்கு உதவுகிறது. புரதத்தால் ஆன மனித உடலில், மூன்றில் ஒரு பங்கில் கொலாஜன் என்று சொல்லப்படும் முக்கிய புரதம் உள்ளது. இளமையை பாதுகாக்க கொலாஜன் மிக அவசியம். இது உடலை வலிமையாகவும் நெகிழ்வாகவும் ஆக்குகிறது. கொலாஜன் சரும ஆரோக்கியத்திற்கு 75% பங்கு வகிக்கிறது. உடலில் எப்பொழுது கொலாஜன் அளவு குறைகிறதோ அப்பொழுது சருமம் தொய்வடைந்து சுருக்கங்கள் விழ ஆரம்பித்துவிடும்.
கொலாஜன் குறைப்பாடு
கொலாஜன் நமது சருமம் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்க உதவும் நிலையில், உடலில் கொலாஜன் பற்றாக்குறை இருக்கும்போது, முதுமை மட்டுமல்ல பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். நம்மில் பெரும்பாலானோர், கொலாஜன் குறைப்பாடு குறித்து கவனம் செலுத்துவதில்லை. இதன் காரணமாக முதுமையில் மோசமான சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள். பலருக்கு கொலாஜன் குறைபாட்டின் அறிகுறிகளை பற்றியும் தெரிவதில்லை. இதன் காரணமாக அவர்களால் அதை அடையாளம் காண முடிவதில்லை. கொலாஜன் இல்லாததால் ஏற்படும் இந்த பிரச்சனைகள் (Health Tips) மற்றும் இயற்கையாகவே கொலாஜனை அதிகரிக்கும் வழிகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
உடலில் கொலாஜன் இல்லாததால் ஏற்படும் பிரச்சனைகள்
1. தளர்வான சருமம்: கொலாஜன் இல்லாததால், சருமம் அதன் நெகிழ்ச்சித்தன்மையை இழந்து, சுருக்கங்கள் அதிகமாக தோன்றத் தொடங்கும். சருமம் வறண்டு, ஆரோக்கியமற்றதாகத் தோன்றத் தொடங்குகிறது.
2. மூட்டு வலி மற்றும் விறைப்பு: கொலாஜன் எலும்புகள் மற்றும் மூட்டுகளை உயவூட்டுகிறது. இதன் குறைபாடு மூட்டுகளில் வலி மற்றும் விறைப்பை ஏற்படுத்தும். கீல்வாதம் போன்ற பிரச்சனைகளும் அதிகரிக்கலாம்.
3. கூந்தல் மற்றும் நகங்களின் பலவீனம்: கொலாஜன் இல்லாததால், முடி பலவீனமடைந்து உடைகிறது. நகங்களும் சட்டென்று உடையத் தொடங்கி பொலிவிழந்து காணப்படும்.
4. எலும்பு பலவீனம்: கொலாஜன் எலும்புகளை பலப்படுத்துகிறது. இதன் குறைபாடு எலும்புகளை பலவீனப்படுத்தி எலும்பு முறிவு அபாயத்தை அதிகரிக்கும்.
5. காயம் குணமடைவதை தாமதப்படுத்துகிறது: கொலாஜன் காயங்களை குணப்படுத்த உதவுகிறது. இதன் குறைபாடு காரணமாக, காயங்கள் குணமடைய அதிக நேரம் ஆகலாம்.
கொலாஜனை இயற்கையாகவே அதிகரிப்பதற்கான வழிமுறைகள்
1. வைட்டமின் சி நிறைந்த உணவுகள்
நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் குடைமிளகாய் போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளை தினமும் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
2. புரதம் நிறைந்த உணவுமுறை
முட்டை, மீன், பால் மற்றும் சீஸ் போன்ற புரோட்டீன் உணவுகளை தினமும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
3. ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த உணவு
அவுரிநெல்லிகள், கிரீன் டீ, கீரை போன்ற ஆக்ஸிஜனேற்றம் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்.
4. வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள்
கேரட் மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்ற வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுதல்
5. சூரிய ஒளியில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுதல்
சூரிய ஒளி உடலில் படுவது மிக அவசியம் என்றாலும், மிகவும் வலுவான சூரிய கதிர்கள் கொலாஜனை அழிக்கக்கூடும். எனவே, கடும் கோடையில் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தி உங்கள் சருமத்தைப் பாதுகாக்கவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | சாப்பாட்டில் கவனமாக இருந்து... 12 வாரங்களில் கொழுப்பை குறைத்த பெண்!
மேலும் படிக்க | கெட்ட கொழுப்பை இயற்கையான வழியில் காலி செய்யும் டாப் 9 உணவுகள்: லிஸ்ட் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









