Herbs To Boost Collagen: பளபளப்பான, பொலிவான மற்றும் இளமையான சருமத்திற்கு கொலாஜன் தேவை. கொலாஜன் இயற்கையாகவே சருமத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் வயது அதிகரிக்கும் போது, சருமத்தின் கொலாஜன் உற்பத்தி குறையத் தொடங்குகிறது. சருமத்தை உறுதியாகவும், மென்மையாகவும், இறுக்கமாகவும், இளமையாகவும் வைத்திருக்க கொலாஜன் அவசியம்.
கொலாஜன் பற்றக்குறை ஏற்பட்டால், சருமம் தொய்வடையத் தொடங்குகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், உடலுக்கு போதுமான அளவு கொலாஜன் கிடைக்கவும், சருமம் சுருக்கங்கள் அல்லது நேர்த்தியான கோடுகள் தோன்றாமல் இருக்கவும் கொலாஜன் நிறைந்த பொருட்களை உணவில் சேர்க்க வேண்டும். ஆயுர்வேத நிபுணர் டாக்டர் மனிஷா மிஸ்ரா, கொலாஜனைப் பெற என்னென்ன பொருட்களை உட்கொள்ள வேண்டும் என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறுகிறார். மனிஷா எந்த ஆயுர்வேத மூலிகைகளை குறிப்பிட்டுள்ளார் என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.
கொலாஜனை அதிகரிக்க உதவும் சில மூலிகைகள்
வல்லாரை கீரை
வல்லாரை கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதில் பயனுள்ளதாக இருக்கும். இது காயங்களை விரைவாக குணப்படுத்த உதவுகிறது மற்றும் திசு மீளுருவாக்கத்திற்கும் உதவுகிறது. மூளை செயல்பாட்டை மேம்படுத்துகிறது, நினைவாற்றலை அதிகரிக்கிறது, மன அழுத்தத்தைக் குறைக்கிறது, மற்றும் சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்தை (Health Tips) மேம்படுத்துகிறது.
நெல்லிக்காய்
நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. கொலாஜனை அதிகரிப்பதில் ஆண்டி ஆக்ஸிடெண்ட் நிறைந்த நெல்லிக்காய் அற்புதமான பலனைக் கொடுக்கிறது. ஏனெனில் கொலாஜன் உற்பத்திக்கு வைட்டமின் சி அவசியம்.
அதிமதுரம்
ஆயுர்வேத நிபுணர்கள், அதிமதுரம் ஒரு வேதிப்பொருள் என்றும், அது திசுக்களை குணப்படுத்த உதவுகிறது என்றும் கூறினார்கள். இது காயங்களை விரைவாக குணப்படுத்துகிறது மற்றும் கொலாஜனை உடல் தக்க வைத்துக் கொள்ள உதவுகிது.அதிமதுரம் அஜீரணம், அமிலத்தன்மை போன்ற பல்வேறு சிகிச்சைகளுக்கும் பயன்படுத்த ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது
அஸ்வகந்தா
அஸ்வகந்தா நாம் அனைவருக்கும் தெரிந்த மிகவும் பிரபலமான மருத்துவ மூலிகையில் ஒன்று. அஸ்வகந்தா மன அழுத்தத்தையும் கார்டிசோல் ஹார்மோனையும் குறைத்து, கார்டிசோலால் ஏற்படும் கொலாஜன் சேதத்தைத் தடுக்கிறது.அகிட்டத்தட்ட 6,000 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் பழமையான மூலிகை பொருட்களில் ஒன்று.
உலர் பழங்கள் மற்றும் விதைகள்
துத்தநாகம் மற்றும் வைட்டமின் ஈ நிறைந்த உலர் பழங்கள் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், உலர் பழங்களை சிற்றுண்டிகளாக சாப்பிடலாம் பாதம், பூசணி விதைகள், பேரீச்சம்பழம் ஆகியவை சிறந்த தேர்வுகளாக இருக்கும்.
தண்ணீர் விட்டான் கிழங்கு
தண்ணீர் விட்டான் கிழங்கு ஒரு நல்ல வேதிப்பொருள். இதை சாப்பிடுவது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இதை சாப்பிடுவதன் மூலம், சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மை மற்றும் கொலாஜன் இரண்டும் அதிகரிக்கிறது.தண்ணீர் விட்டான் கிழங்கில் உள்ள பல வகையான பைட்டோநியூட்ரியன்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
மேலே குறிப்பிட்டுள்ள மூலிகை பொருட்களை உட்கொள்ளும் முறை
மேலே குறிப்பிட்டுள்ள மூலிகைகளை பொடி வடிவில், தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் சாப்பிடலாம் என்று ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த பொடியை 1 முதல் 3 மாதங்கள் வரை உட்கொள்ளலாம்.
மேலும் படிங்க |15 கிலோவை குறைக்கும்..எளிமையான டயட்! இதை ஃபாலோ பண்ணுங்க போதும்
மேலும் படிங்க | முதுகு வலியை முற்றிலும் நீக்கும் சிம்பிள் உடற்பயிற்சிகள்! என்னென்ன தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









