வெயிட் லாஸ் முதல் டீடாக்ஸ் வரை.... ஆப்பிள் சீடர் வினிகரை இப்படி அருந்தினால் போதும்

ACV என்றும் அழைக்கப்படும் ஆப்பிள் சீடர் வினிகர் உடல் ஆரோக்கியத்திற்கு வியக்கத்தக்க வகையில் மிகவும் நன்மை பயக்கும். பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேதத்தில் இயற்கை மருந்தாகப் பயன்படுத்தப்படும் ஒரு இயற்கை பானம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 15, 2025, 02:59 PM IST
  • பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேதத்தில் இயற்கை மருந்தாகப் பயன்படுத்தப்படும் ஒரு இயற்கை பானம்.
  • ஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள்.
  • செரிமான பிரச்சனைகளை தீர்க்கும் அருமருந்தாக ஆப்பிள் சீடர் வினிகர் இருக்கும்.
வெயிட் லாஸ் முதல் டீடாக்ஸ் வரை.... ஆப்பிள் சீடர் வினிகரை இப்படி அருந்தினால் போதும்

ACV என்றும் அழைக்கப்படும் ஆப்பிள் சீடர் வினிகர் உடல் ஆரோக்கியத்திற்கு வியக்கத்தக்க வகையில் மிகவும் நன்மை பயக்கும். பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேதத்தில் இயற்கை மருந்தாகப் பயன்படுத்தப்படும் ஒரு இயற்கை பானம். இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் ஆரோக்கியத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது. உடல் பருமனை குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த வெயிட் லாஸ் பானமாக இருக்கும். இதை சரியான அளவு மற்றும் சரியான முறையில் பயன்படுத்துவதால், ஆரோக்கிய நன்மைகளை முழுமையாக பெறலாம். 

Add Zee News as a Preferred Source

ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

தினமும் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை தண்ணீரில் கலந்து குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் (Health Tips) கிடைக்கும் என ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். ஆப்பிள் சீடர் வினிகர் ஆரோக்கியத்திற்கு எந்த வகையில் நன்மை பயக்கும், அதன் ஆரோக்கிய நன்மைகளை முழுமையாக பெற, எந்த அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி இந்த கட்டுரையில் அறிந்து கொள்ளலாம்.

ஆப்பிள் சீடர் வினிகரின் நன்மைகள் (Apple Cider Vinegar ACV Health Benefits)

எடை இழப்பில் நன்மை பயக்கும்: இதில் உள்ள அசிட்டிக் அமிலம் கொழுப்பை எரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுவதோடு, பசியையும் கட்டுப்படுத்துகிறது. எனவே எடை இழப்புக்கு சிறந்த பானமாக (Weight Loss Drink) இருக்கும்.

செரிமான அமைப்பு வலுவடையும்: அமிலத்தன்மை, மலச்சிக்கல் அல்லது வாயு போன்ற பிரச்சனைகளை தீர்க்கும் அருமருந்தாக ஆப்பிள் சீடர் வினிகர் இருக்கும். இது செரிமான நொதிகளை தூண்டி, குடலில் நல்ல பாக்டீரியாக்கள் அதிகரிக்க உதவும். 

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்: ஆப்பிள் சீடர் வினிகர் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.

சிறந்த டீடாக்ஸ் பானம்: இது உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தப்படுத்துகிறது. உடலின் இயற்கையான டீடாக்ஸ் செயல்முறையை மேம்படுத்துகிறது. 

நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்: ஆப்பிள் சீடர் வினிகரில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பு உள்ளதால், பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதன் மூலம் நோயெதிர்ப்பு மண்டலம் வலுவடைந்து, தொற்றுநோயிலிருந்து தப்பிக்க உதவுகிறது.

இதய ஆரோக்கியம் மேம்படும்: ஆப்பிள் சைடர் வினிகர் கொலஸ்ட்ராலை எரிப்பதுடன் இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் இதய நோய்களின் அபாயம் பெருமளவு குறைகிறது.

ஆப்பிள் சைடர் வினிகரை எடுத்துக் கொள்ளும் சரியான முறை

காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து குடிக்கலாம் என்கின்றனர் ஆயுர்வேத நிபுணர்கள். இதற்கு, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1-2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை கலக்கவும். சுவையை அதிகரிக்க, நீங்கள் அதில் தேன் அல்லது எலுமிச்சை சாறு சேர்க்கலாம். நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் அல்லது சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு இதை உட்கொள்ளலாம்.

மேலும் படிக்க | இளமையை காக்கும் கொலாஜன் என்னும் புரதம்... உடலில் குறையாமல் இருக்க செய்ய வேண்டியவை

மேலும் படிக்க | 145 கிலோவில் இருந்த இன்ஸ்டா பிரபலம்... 75 கிலோவுக்கு குறைத்தது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News