நகம் கடிப்பவரா நீங்கள்? அப்போ இந்த ஆபத்து உங்களுக்கு தான்!

நகங்களை கடிப்பதால் பற்கள் ஈறுகளில் உள்ள திசுக்கள் சேதமடையும் வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 12, 2022, 06:25 PM IST
  • நகங்களை மெல்லும் செயல் மன அழுத்தம், பதற்றம் இவற்றை நீக்குகிறது.
  • நகத்தை சுற்றி இருக்கும் அழுக்குகள் வயிற்றுக்குள் செல்வதால் உடலுக்கு தீங்கு ஏற்படும்.
நகம் கடிப்பவரா நீங்கள்? அப்போ இந்த ஆபத்து உங்களுக்கு தான்! title=

பெரும்பாலான மக்கள் அவர்கள் கைகளில் உள்ள நகங்களை கடிக்கின்றனர், இவ்வாறு மக்கள் நகங்களை கடிப்பது மருத்துவத்தில் ஓனிகோபாகியா என்று அழைக்கப்படுகிறது. மருத்துவர்களின் கூற்றுப்படி யாருக்கேனும் தேவையற்ற எண்ணங்கள், யோசனைகள் அல்லது உணர்வுகள் இருக்கும்பட்சத்தில், அவர்களுக்கு மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு செயலை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் உருவாகும் இதன் காரணமாக கூட சிலர் நகம் கடிக்கலாம் என்று கூறுகின்றனர்.

மேலும் படிக்க | நரை முடியை கருப்பாக மாற்ற இந்த பொருட்களை ஷாம்பூவுடன் கலக்கவும்

மேலும் மருத்துவர்கள் கூறுகையில், அடிக்கடி நகம் கடிப்பது என்பது பயத்துடன் தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது.  ஏனெனில் நகங்களை மெல்லும் செயல் மன அழுத்தம், பதற்றம் இவற்றை நீக்குகிறது. வழக்கமாக நகங்களைக் கடிப்பவர்கள் பதட்டமாகவோ, தனிமையாகவோ அல்லது பசியாகவோ உணரும் நேரத்தில் தான் இவ்வாறு அடிக்கடி நகம் கண்டிக்கின்றனர்.  மேலும் நகம் குடிப்பதன் மூலம் நகத்தை சுற்றி இருக்கும் திசுக்களில் உள்ள தொற்று, ஆணி துகள்கள் மற்றும் அழுக்குகள் வயிற்றுக்குள் செல்வதால் உடலுக்கு தீங்கு ஏற்படும்.

nail

பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ்கள் போன்றவை அதிகரித்து உடலில் நோய்த்தொற்று ஏற்படுவதுடன் நகங்களை சேதப்படுத்துவதுடன் க்யூட்டிகல் மற்றும் சுற்றியுள்ள தோலையும் சேதப்படுத்துகிறது. நகங்களைக் கடிப்பதால் நகங்களைச் சுற்றி இரத்தப்போக்கு, வீக்கம், வலி, தோல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.  இது பற்கள், ஈறுகளில் உள்ள திசுக்களுக்கு சேதம் ஏற்படுத்தும்.  இந்த பழக்கத்திலிருந்து விடுபட, நகங்களில் கசப்பான நெயில் பாலிஷை பூசலாம், நகங்களை வெட்டி குட்டையாக வைத்திருப்பது அல்லது கசப்பான எண்ணெயை நகங்களில் தடவுவது போன்றவற்றை  செய்யலாம்.

nail

மேலும் இரவில் இரவில் அல்லது நீங்கள் தனியாக இருக்கும்போது கைகளில் கையுறைகளை அணியலாம், இதனால் நீங்கள் நகம் கடிப்பது தடைபடும்.  நகங்களை மெல்லுவதற்குப் பதிலாக, சூயிங் கம் அல்லது பெருஞ்சீரகத்தை மெல்லலாம்.  மேலும் இந்த ஓனிகோபேஜியாவிற்கு பல சிகிச்சைகள் உள்ளன, இதிலிருந்து நிரந்தரமாக குணமடைய மருத்துவரிடம் செல்லலாம்.

மேலும் படிக்க | வெள்ளரிக்காய் சாப்பிடும் போது செய்யும் ‘இந்த’ தவறினால் ஏற்படும் பக்க விளைவுகள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News