Health Tips: இந்திய குடும்பங்களின் உணவுப் பட்டியலில், தவறாமல் இடம்பெறுவது என்னவென்று கேட்டால் அதில் அப்பளத்தை (Papads) நிச்சயம் குறிப்பிடாமல் இருக்க முடியாது. முன்பெல்லாம் அப்பளத்தை வீட்டிலேயே தயார் செய்வார்கள், ஆனால் தற்போது வீட்டில் அப்பளம் செய்யும் பழக்கம் படிப்படியாக குறைந்து விட்டது எனலாம்.
Health Tips: அனைவருக்கும் பிடித்தமான அப்பளம்
நாட்டில் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப அப்பளங்கள் வேறுபடும். கேரளாவின் அப்பளத்திற்கும் (பப்படம்) தமிழ்நாட்டில் அப்பளத்திற்கும் கூட பெரிய வித்தியாசங்கள் இருக்கும். சாம்பார் சாதம், ரசம் சாதம் என மதிய உணவுக்கு அப்பளம் இல்லாமல் பலரும் சாப்பிடவே மாட்டார்கள் எனலாம்.
அப்பளம் அனைவருக்கும் பிடித்த உணவு என்றாலும் இது ஆரோக்கியமானதா இல்லையா என்ற சந்தேகம் எப்போதும் பலருக்கும் இருந்து கொண்டே இருக்கும். அந்த வகையில், அப்பளத்தை தினமும் சாப்பிடுவது நல்லதா இல்லை கெட்டதா என்பது குறித்து இங்கு காணலாம்.
Health Tips: அப்பளத்தில் இருக்கும் சத்துக்கள்
13 கிராம் எடை கொண்ட ஒரு அப்பளத்தில் 35 - 40 கலோரிகள் இருக்கிறது. இதில் 3.3 கிராம் புரதச்சத்து, 0.42 கிராம் கொழுப்புச்சத்து, 7.8 கிராம் கார்போஹைட்ரேட்ஸ், 226 மில்லி கிராம் சோடியம் இருக்கும் என கணக்கிடப்படுகிறது. அதாவது ஒரு இது ஒரு அப்பளத்தில் இருக்கும் ஊட்டச்சத்து அளவுகள் எனலாம்.
Health Tips: 3 ஆபத்துகள்
குறைந்தது ஒரு நாளைக்கு பலரும் இரண்டு அப்பளங்களை சாப்பிடுவார்கள். அந்த வகையில் அப்பளத்தை தினமும் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு தீமையே விளையும் என கூறப்படுகிறது. தினமும் அப்பளத்தை சாப்பிடுவதால் ஏற்படும் 3 ஆபத்துகள் என்னென்ன என்பது குறித்து இங்கு காணலாம்.
Health Tips: சுவையூட்டிகளால் வரும் ஆபத்து
முன்னர் கூறியது போல், வீட்டில் தயாரிக்கப்படும் அப்பளங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. வணிக ரீதியாக பேக் செய்யப்பட்ட பல அப்பளங்களில் பல்வேறு செயற்கை சுவையூட்டிகள் மற்றும் கெடாமல் இருப்பதற்கான இரசாயனங்கள் சேர்க்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
அவை செரிமானத்தை சீர்குலைத்து அமிலத்தன்மைக்கு பங்களிக்கக்கூடும். சுவையை அதிகரிப்பதற்காக சோடியம் கார்பனேட் போன்ற சோடியம் உப்புகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இது சோடியம் உட்கொள்ளலை கணிசமாக அதிகரிக்கும்.
Health Tips: அதீத சோடியம் உட்கொள்ளல்
வணிக ரீதியில் தயாரிக்கப்படும் அப்பளங்களில் பெரும்பாலும் அதிக அளவு உப்பு மற்றும் சோடியம் சார்ந்த சோடியம் கார்பனேட் மற்றும் சோடியம் பைகார்பனேட் . அதிகப்படியான சோடியம் உட்கொள்ளல் உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறுகள், இதய நோய்களுக்கு வழிவகுக்கலாம்.
அதிக சோடியம் அளவுகளை கொண்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடல்நலத்தில் நீண்டகால அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக உயர் ரத்த அழுத்தம், இருதய நோய் உள்ளவர்களுக்கு ஆபத்துகளை விளைவிக்கவும் வாய்ப்புள்ளது.
Health Tips: அக்ரிலாமைடு
சர்க்கரை மற்றும் அஸ்பாரகின் எனும் அமினோ அமிலம் கொண்ட உணவுகள் 120 டிகிரி செல்ஷியஸிற்க மேல் சூடாக்கும்போது, அக்ரிலாமைடு என்பது உருவாக வாய்ப்புள்ளது, இது அப்பளத்திற்கும் பொருந்தும். அப்பளத்தை பொரிக்கும்போது, வறுக்கும்போது அக்ரிலாமைடு உருவாகலாம். இது ஒரு நியூரோடாக்சின் ஆகும். இது புற்றுநோயை கூட உண்டாக்கத்தக்கது. இதனால் புற்றுநோய் மட்டுமின்றி இதய நோய் அபாயமும் அதிகரிக்கக்கூடும்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவை. இவற்றை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இவற்றை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)
மேலும் படிக்க | வெறும் வயிற்றில் வாக்கிங், உடற்பயிற்சி செய்தால்... இந்த 4 நோய்கள் வரலாம்
மேலும் படிக்க | தயிரை ஒருபோதும் இந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட வேண்டாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ