Army Men Weight Loss Diet Exercise Tips : ஒரு சில வேலையை பொருத்தவரை, அந்த வேலையை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றால் உடலையும் கச்சிதமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ராணுவ வீரர்களும் அப்படிப்பட்ட ஒரு வேலையைதான் செய்கின்றனர். அவர்கள் பின்பற்றும் சில பழக்கங்களால் தங்கள் உடலில் வெயிட் ஏறாமல் பார்த்துக் கொள்கின்றனர்.
அளவு சாப்பாடு:
ராணுவ வீரர்கள் எதையெதையோ சாப்பிடுவதில்லை. உடலுக்கு சத்து தரும், புரதம் மற்றும் கார்ப்ஸ் நிறைந்த உணவுகளையை எடுத்துக் கொள்கின்றனர். அவற்றில் ஆரோக்கிய கொழுப்புகள் மட்டுமே உள்ளன. இவர்கள், பதப்படுத்தப்பட்ட அல்லது துரித உணவுகளை சாப்பிடுவதில்லை. ராணுவ தளங்களில் அவர்களுக்கு பெரும்பாலும், அளவு சாப்பாடுகள் மட்டுமே கொடுக்கப்படும். இதை நாமும் வீட்டிலேயே செய்யலாம். அளவு சாப்பாடு சாப்பிட்டு வெயிட் ஏறாமல் தடுக்கலாம்.
வொர்க் அவுட்:
ராணுவ வீரர்கள் தினந்தோறும் வொர்க் அவுட் செய்து, உடலை ஆக்டிவாக வைத்துக் கொள்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் HIIT ட்ரெயினிங் தான் செய்கின்றனர். இந்தளவிற்கு சாதாரண மக்களால் செய்ய முடியாது. அவர்களைப் போல வெயிட்டும் தூக்க முடியாது. எனவே சிம்பிளாக வீட்டுக்குள் ஸ்குவாட்ஸ், லஞ்சஸ், புஷ் அப் போன்ற உடற்பயிற்சிகளை செய்யலாம். கூடவே நடைப்பயிற்சியையும் மேற்கொள்ளலாம்.
தினசரி வழக்கங்கள்:
ராணுவ வீரர்களை பொறுத்தவரை அவர்கள் நேரத்திற்கு தூங்கி எழுந்து கொள்ள வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கும். இதனால் இரவில் யாரும் விழித்துக் கொண்டு கொண்டே இருக்க மாட்டார்கள். காலையில், லேட்டாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இப்படி இவர்கள் சரியாக தூங்குவதால் உடலில் மெட்டபாலிசம் அதிகரிக்கிறது. இதே போல நீங்களும் ஒரு வழக்கத்தை மேற்கொள்ளலாம். இரவில் தினமும் ஒரே நேரத்திற்கு தூங்க சென்று காலையில் ஒரே நேரத்திற்கு எழுந்து கொள்ளலாம்.
துரித உணவுகள்:
ராணுவ தளங்களில் அதிக கொழுப்பு நிறைந்த ஸ்நாக்ஸ்களுக்கு இடம் கிடையாது. எனவே அவர்களால் இதனை சாப்பிட முடியாது. அதேபோல மது குடிப்பதற்கும் பெரும்பாலான நேரங்களில் தடை விதிக்கப்படும். இதை நீங்களும் வீட்டில் பாலோ செய்யலாம். இதனால் உடலில் எக்ஸ்ட்ரா கொழுப்பு சேருவதை தடுப்பதோடு, சுய ஒழுக்கத்துடன் இருப்பீர்கள்.
நீர்ச்சத்து:
ராணுவ வீரர்கள் தங்களின் உடலில் எப்போதும் நீர்ச்சத்து இருப்பதை சரிபார்த்துக் கொள்வர். நீங்களும் தினமும் 2.5 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கலாம். தினமும் காலையில் விழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கலாம்.
வெயிட் பராமரிப்பது:
ராணுவ தளங்களில் எப்போதும் ராணுவ வீரர்களின் உடல் எடையை சரிபார்த்துக் கொண்டே இருப்பர். அப்போதுதான் அவர்கள் உடலில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கிறதா, மருத்துவ கண்காணிப்பு வேண்டுமா என்பது அவர்களுக்கு தெரியும். ராணுவ வீரர்களுக்கு என்று சில தகுதிகள் இருக்கிறது, இந்த தகுதியில் இருந்தால்தான் அவர்களால் அந்த வேலையில் நிலைக்க முடியும். அதேபோல நீங்களும் அடிக்கடி பிட்னஸ் டெஸ்ட் எடுத்துக் கொள்ளலாம். அதில் வாரத்திற்கு ஒரு முறை வெயிட்டை சரி பார்த்து உடல் எடையை குறைக்கிறீர்களா இல்லையா என்பதை பார்த்துக் கொள்ளலாம்.
சுய ஒழுக்கம்:
ராணுவ வீரர்கள், சுய ஒழுக்கத்துடன் இருப்பதாலும், அவர்களால் வெயிட் ஏறாமல் பார்த்துக்கொள்ள முடிகிறது. எனவே, நீங்கள் 7 நாட்களுக்கு சர்க்கரை உணவுகளை எடுத்துக்கொள்ள மாட்டேன், அல்லது வாரத்தின் 4 நாட்கள் வர்க்-அவுட் செய்வேன் என்று சத்தியம் செய்து கொண்டு அதனை பின்பற்றுங்கள்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | தண்ணீர் மட்டுமே குடித்து உடல் எடையை குறைக்கலாம்! எப்படி தெரியுமா?
மேலும் படிக்க | வெயிட் லாஸ் செய்ய உதவும் 4 விஷயங்கள்! 9 மணிக்குள் செய்ய வேண்டும்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









