தீராத நோய்களுக்கு அருகம்புல் மருந்தாகும் என ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றன. அருகம்புல் உடலின் வாத பித்த கப தோஷங்களை சமநிலைப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அருகம் புல் என்னும் அற்புத மூலிகையை ஜூஸ் போட்டு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் ஜூஸ் அருந்துவதால் ஏற்படும் நன்மைகளை இங்கு அறிந்து கொள்ளலாம்.
அருகம்புல் ஜூஸை தினமும் அருந்துவதால் கிடைக்கும் பலன்கள்
சிறந்த டீடாக்ஸ் பானம்
சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள நச்சுக்கள் மற்றும் கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற கொழுப்பு கரைந்து (Health Tips) விடும். இது உடல் வெப்பத்தையும் சீராக வைக்கிறது.
நீரிழிவு
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை சத்துக்கள் குறைவாக கொண்ட உணவுகளை உண்ண வேண்டும் எனப்தோடு, சுகர் லெவலை கட்டுப்படுத்தும் பானத்தை தினந்தோறும் காலையில் அருந்துவது பலன் தரும். அந்த வகையில் அருகம்புல் ஜூஸ் அவர்களின் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது.
சிறுநீரக ஆரோக்கியம்
சிறுநீரகத்தில் கற்கள் பிரச்சனை இருப்பவர்கள் அருகம்புல் ஜூஸ் அருந்தலாம். அருகம்புல் ஜூஸ் சிறுநீரகங்களில் கற்கள் உண்டாவதை தடுப்பதோடு சிறுநீரை பெருக்கும் ஆற்றல் கொண்டது.
உடல் எடை
அவசர கதியிலான வாழ்க்கை முறை மற்றும் கட்டுப்பாடுகளில்லாத உணவு முறை காரணமாக பலருக்கும் உடல் பருமன் பிரச்சனை ஏற்படுகிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினந்தோறும் காலை உணவு உண்பதற்கு முன்பு அருகம்புல்ஜூஸ் அருந்தி வந்தால் உடல் பருமன் குறையும்.
வயிறு சம்பந்தமான பிரச்சனைகள்
வயிற்றில் இருக்கும் செரிமான அமிலங்களின் சமச்சீரற்ற தன்மையால் சாப்பிடும் உணவுகள் சரியாக ஜீரணம் ஆகாமல் வாயுத் தொந்தரவுகள், வயிற்று வலி ஆகியவை ஏற்படும். இதற்கு தீர்வை பெற காலையில் அருகம்புல் ஜூஸ் அருந்த வேண்டும்.
சுவாச பிரச்சனைகள்
ஆஸ்துமா, சுவாச பிரச்சனை போன்றவை நுரையீரல் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அருகம்புல் அருமருந்தாக இருக்கும். இவர்கள் அருகம்புல் ஜூஸ் அருந்துவதால் நுரையீரல் வலுப்பெறுவதோடு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
சரும பிரச்சனை
சரும பிரச்சனை உள்ளவர்கள் தினமும் காலை மாலை சுடுநீரில் அரை தேக்கரண்டி அருகம்புல் பொடி சேர்த்து குடித்து வந்தால் தீர்வைப் பெறலாம்.
நரம்புத் தளர்ச்சி
உடலின் இரத்த சுத்திகரிப்புக்கு உதவுவதோடு, நரம்புத் தளர்ச்சி பிரச்சனைகளுக்கு அருகம்புல் சாறு மிகச் சிறந்த தீர்வாக இருக்கும் என்கின்றனர் ஆயுர்வேத நிபுணர்கள்
அருகம்புல் ஜூஸ் தயாரிக்கும் முறை
முதலில் அருகம்புல்லை தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின் அதனை சிறிதாக நறுக்கி மிக்ஸியில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து, அரைத்து எடுக்கவும். பின் அதனை வடிகட்டிக் கொள்ளுங்கள். இதில் இனிப்புக்கு தேன் அல்லது பனங்கருப்பட்டி கலந்து குடிக்கலாம். இனிப்பு வேண்டாம் என்றால், மிளகு த்தூள், உப்பு சேர்த்தும் குடிக்கலாம். இதனை ப்ரெஷ்ஷாக தயாரித்து அருந்துவது நல்லது. தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் பல் துலக்கிய பிறகு ஒரு டம்ளர் அருகம்புல் ஜூஸ் குடிக்கலாம். ஜுஸ் செய்ய இயலாதவர்கள், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அருகம்புல் பொடியை வாங்கி வந்து காலையில் இந்த பொடியை சிறிதளவு வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | DengiAll: டெங்கு நோயை ஒழித்துக் கட்ட... டெங்கிஆல் தடுப்பூசியை தயாரிக்கிறது இந்தியா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









