காலை உணவிற்கு அவல் உப்புமா சிறந்த தேர்வு.... உணவியல் நிபுணர்கள் அட்வைஸ்

காலையில் நாம் உண்ணும் உணவு அன்றைய நாளின் ஆற்றலை செயல்திறனை தீர்மானிக்கக் கூடியதாக உள்ளது என்பதால், காலை உணவை புறக்கணிப்பது என்பதே கூடாது என்கின்றனனர் நிபுணர்கள்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 25, 2025, 04:48 PM IST
  • அரிசியை தட்டையாக்கி அதனை இடித்து அவல் தயாரிக்கப்படுகிறது.
  • சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கும் சிறந்த காலை உணவு.
  • காலை உணவாக அவல் உப்புமா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.
காலை உணவிற்கு அவல் உப்புமா சிறந்த தேர்வு.... உணவியல் நிபுணர்கள் அட்வைஸ்

காலையில் நாம் உண்ணும் உணவு அன்றைய நாளின் ஆற்றலை செயல்திறனை தீர்மானிக்கக் கூடியதாக உள்ளது என்பதால், காலை உணவை புறக்கணிப்பது என்பதே கூடாது என்கின்றனனர் நிபுணர்கள். இதனால், காலையில் சாப்பிடாமல் தவிர்ப்பது உடல்நலக்குறைப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகிறது. ஆற்றல் அளவு குறையாமல் இருக்க காலை உணவு அவசியம்.

Add Zee News as a Preferred Source

அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்ட சமசீர் உணவை நீங்கள் காலை உணவாக எடுத்துக்கொள்வதன் மூலம், நாள் முழுவதும் முழுமையான செயல்திறனுடன் வேலை செய்யலாம் என்பதோடு, ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். அடிக்கடி பசியெடுக்காது. எனவே, காலை உணவில் கூடுதல் கவனம் செலுத்தி சிறந்த உணவை தேர்வு செய்ய வேண்டும்.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த அவல்

அரிசியை தட்டையாக்கி அதனை இடித்து அவல் தயாரிக்கப்படுகிறது. இந்தியர்களுக்கு மிகவும் பிடித்தமான மற்றும் பாரம்பரிய காலை உணவான இது சுவையானதாகவும் ஆரோக்கியமானதாகவும் கருதப்படுகிறது. அதிலும் பழுப்பு அவல் அதிக ஊட்டச்சத்து (Health Tips) கொண்டது. அதிலும் இதில் காய்கறிகள் சேர்த்து தயாரிப்பதால், ஊட்டச்சத்து மதிப்பு பல மடங்கு அதிகரிக்கிறது.

சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கும் சிறந்த காலை உணவு

பெரும்பாலான சுகாதார நிபுணர்கள் இதை காலையில் சாப்பிட பரிந்துரைக்கின்றனர். இந்தியாவின் பிரபல டயட்டீஷியன் ஆயுஷி யாதவ், நீங்கள் தினமும் காலை உணவாக அவல் உப்புமா சாப்பிட்டால், அது எப்படி ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார்.

காலை உணவாக அவல் உப்புமா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

1. ஊட்டச்சத்து நிறைந்தது

அவல் உப்புமா ஒரு சிறந்த காலை உணவாகும். இதில் கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை உட்கொள்வது உங்களுக்கு ஆற்றலை அளிக்கிறது மற்றும் நாள் முழுவதும் செல்ல உங்களை தயார்படுத்துகிறது.

2. உடல் எடை கட்டுப்பாடு

அவல் உப்புமா என்பது குறைந்த கலோரிகளைக் கொண்ட, எளிஹ்டாக ஜீரணிக்கக் கூடிய சத்தான காலை உணவாகும். இதை தொடர்ந்து உட்கொள்வது எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. சமச்சீரான உணவின் பலனைப் பெறலாம். இது உங்கள் வயிறு மற்றும் இடுப்பை சுற்றி சேர்ந்துள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது.

மேலும் படிக்க | உடல் பருமன் மளமளவென்று குறைய உதவும்... புரதம் நிறைந்த சில சாலட் வகைகள்

3. செரிமானத்தை மேம்படுத்துகிறது

அவல் உப்புமாவில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்த உதவுகின்றன. இது உங்கள் வயிற்றை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது மற்றும் பசியை கட்டுப்படுத்த உதவுகிறது.

4. கொலஸ்ட்ரால் அபாயத்தைக் குறைக்கிறது

அவல் உப்புமாவில் எண்ணெய் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை, இதன் காரணமாக உங்கள் இரத்த நாளங்களில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் அபாயம் குறைகிறது. ஏற்கனவே LDL அதிகமாக உள்ளவர்கள் இந்த உணவை தாரளமக உண்ணலாம்.

5. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் 

அவல் உப்புமா சாப்பிடுவது கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் அபாயத்தைக் குறைப்பதால், இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. அத்தகைய சூழ்நிலையில், இதய நோய்களின் அபாயத்தை குறைக்கும் வாய்ப்பு உள்ளது.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ மருத்துவ நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், குடும்ப மருத்துவர் அல்லது மருத்துவ நிபுணரை அணுகி ஆலோசனை பெறும் படி கேட்டுக் கொள்கிறோம். எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | உடல் எடையை கட்டுப்படுத்தனுமா? இரவு உணவுக்கு பின் இதை செய்யுங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News