Infant Feeding Tips: குழந்தை வளர்ப்பில், இந்த குறிப்பிட்ட மாதத்தில்தான் திட உணவு தர வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. குழந்தையின் பசியைத் தீர்க்கப் போதுமான பால் கிடைக்காதபோது குழந்தைக்கு திட உணவுகள் கொடுக்க ஆரம்பிக்கலாம். ஆறு மாதத்தின்போது பொதுவாக திட உணவுகளை ஆரம்பிக்கிற கட்டாயம் நிச்சயம் உண்டு. ஏனென்றால், பிறந்த குழந்தைக்கு தேவையான இரும்புச்சத்து ஆறு மாதம் வரை குழந்தையின் உடலில் வைக்கப்பட்டிருக்கிறது. ஆறாவது மாதத்தில் இருந்து நாம் கொடுக்கிற திட உணவிலிருந்துதான் இரும்புச் சத்தைப் பெற வேண்டிய கட்டாயம் குழந்தைக்கு இருக்கிறது.
எனினும் குழந்தையின் முதல் வருடம் முடிந்த பிறகு அவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சி மிகவும் முக்கியமானது. இந்த காலகட்டத்தில், உணவுமுறை மட்டுமே வளர்ச்சிக்கு பங்களிக்க உதவும். தாய்ப்பாலானது குழந்தைக்கு மிகவும் நன்மை பயக்கும் அதே வேளையில், சில பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் பற்கள் தோன்ற ஆரம்பித்தவுடன் அனைத்து வகையான உணவுப் பொருட்களையும் கொடுக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், சரியான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது முக்கியமாகும். முதல் வருடத்தில் குழந்தைக்கு எந்தெந்த உணவுகளை கொடுக்கக் கூடாது என்பதை கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எனவே அப்படி எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதை இப்போது அறிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | அதிகாலை திடீரென தூக்கம் கலைகிறதா? ஆய்வில் தெரியவந்த அதிர்ச்சிகரமான உண்மை
தேன்: சிறு குழந்தைகளுக்கு தேன் மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது, ஆனால் அது தவறு. ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தேன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் தேனில் ஒரு வகை பாக்டீரியா (க்ளோஸ்ட்ரிடியம் போட்யூலினம்) உள்ளதால், இவை குழந்தையின் செரிமான அமைப்பில் பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடலாம். இந்த பாக்டீரியா குழந்தைகளுக்கு போட்யூலிசம் எனப்படும் நோயை ஏற்படுத்தலாம்.
பழச்சாறு: அதேபோல் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பழச்சாறுகளை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் பழச்சாறில் அதிக அளவு சர்க்கரை நிறைந்துள்ளது, இவை குழந்தையின் பற்களுக்கு தீங்கு விளைவிக்கும். மேலும் சில சமயங்களில் வயிற்று பிரச்சினைகளையும் ஏற்படுத்தக்கூடலாம். குழந்தைகளுக்கு பழச்சாறு கொடுப்பதற்கு பதிலாக பழங்களை அப்படியே கொடுக்கவும்.
உப்பு மற்றும் சர்க்கரை: அதிகப்படியான உப்பு மற்றும் சர்க்கரை குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானதாகும். இவை இது சிறுநீரகங்கள் மற்றும் இதயத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தலாம். இது தவிர, இவை குழந்தைகளின் சுவை மொட்டுகளையும் பாதிக்கலாம்.
பச்சையான அல்லது சரியாக சமைக்கப்படாத உணவுகள்: ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பச்சையாகவோ அல்லது சரியாக சமைக்காத உணவுகளையோ கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இது உணவு விஷத்தின் அபாயத்தை அதிகரிக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | குறட்டையால் அவதிப்படுகிறீர்களா? இதை மட்டும் செய்யுங்கள்.. உடனடி தீர்வு கிடைக்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









