வீட்டுத் தோட்டங்களில் பூத்துக் குலுங்கும் செம்பருத்தி, உடலின் பல பிரச்சனைகளை நீக்குவது மட்டுமின்றி, பல நோய்களை ஓட விரட்டும் ஆற்றல் கொண்டது. இது மனித உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என ஆயுர்வேத நிபுணர்கள் கூறுகின்றனர். தினமும் இதனை சாப்பிடுவதன் மூலம் பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம் என்று நம்புகின்றனர்.
மருத்துவ குணங்கள் நிறைந்த செம்பருத்தி
பஞ்சாப் மாநிலத்தின் பாபா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் பி.ஏ.எம்.எஸ்., டாக்டர் பிரமோத் ஆனந்த் திவாரி (எம்.டி.), செம்பருத்தி பூக்கள் மருத்துவ குணங்கள் நிறைந்தவை என்று கூறினார். இவை ஹைபிஸ்கஸ் என்று அழைக்கப்படுகின்றன. சிவப்பு, வெள்ளை, இளஞ்சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் ஆகிய நிறங்களில் காணப்படும் செம்பருத்தி, பார்ப்பதற்கு அழகாகவும், கடவுளுக்குப் பிடித்தமான மலராக உள்ளதோடு, மருத்துவக் குணங்கள் நிறைந்ததாகவும் உள்ளது என்றார் அவர். செம்பருத்தி டீயை குடிப்பதை வழக்கமாக கொண்டால், கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம்.
கூந்தலுக்கு நன்மை பயக்கும் செம்பருத்தி பூ
செம்பருத்தியின் சிறப்பியல்புகளைப் பற்றி விரிவாகப் பேசிய அவர், " செம்பருத்திக்கு ஆயுர்வேதத்தில் ஜபம் என்ற பெயரும் உண்டு. செம்பருத்திப் பூக்கள் பல நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. நீண்ட காலத்திற்கு முடி கருமையாக இருக்க இது உதவும்" என்கிறார்
தூக்கமின்மை பிரச்சனைக்கு தீர்வைத் தரும் பூ
இன்றைய டென்ஷன் மிகுந்த வாழ்க்கை முறையில் பெரும்பாலான பிரச்சனைகள் தூக்கமின்மையால் ஏற்படுவதாக ஆயுர்வேதாச்சாரியார் கூறினார். அத்தகைய சூழ்நிலையில், தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செம்பருத்தி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். செம்பருத்திப் பூக்களால் செய்யப்பட்ட டீ அல்லது சர்பத்தை அருந்தினால் தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து விடுபடலாம். பூக்களை சர்க்கரை மிட்டாய் கலந்து சர்பத் தயாரிக்க வேண்டும். இருப்பினும் எப்போதும் புதிய பூக்களையே பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
பெண்களுக்கு நன்மை பயக்கும்
ஆயுர்வேத மருத்துவர் பெண்களுக்கு ஏற்படும் லுகோரோயா பிரச்சனை பற்றியும் பேசினார். செம்பருத்தி மொட்டை இடித்து அருந்தினால் வெண்புள்ளி பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்றார். செம்பருத்திப் பூவைப் பொடி செய்து தினமும் காலை, மாலை பாலுடன் சேர்த்துக் குடித்து வர உடலில் உள்ள ரத்த சோகை நீங்கி நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும். லுகோரியாவுடன், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் செம்பருத்தி ஒரு எதிரி என்ற அவர், இதை உட்கொள்வது நோய்கள் வராமல் தடுக்கிறது என்றார்.
வயிறு தொடர்பான பிரச்சனைகள்
வயிற்றில் சேரும் நச்சுக்களை நீக்கி சுத்தம் செய்யாவிட்டால், அதன் வெப்பத்தால் வாயில் புண்கள் ஏற்படுவதால், உணவு, தண்ணீர் அல்லது எதையும் சாப்பிடுவது கடினம் என்று மருத்துவர் திவாரி கூறினார். "வாய்ப்புண் குணமாக செம்பருத்தி வேரை சாப்பிட வேண்டும். வேரை சுத்தம் செய்த பின் சிறு துண்டுகளாக நறுக்கி வெற்றிலை போல் வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும். வாய் புண்கள் குணமாகும். பூக்களை சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும். செம்பருத்தி இதய நோய்களைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | முருங்கை இலையை தினமும் சவைத்து சாப்பிட்டால்... இந்த 5 நன்மைகள் தேடி வரும்!
மேலும் படிக்க | கல்லீரலில் சேரும் நச்சுக்களையும் கொழுப்பையும் நீக்கும் சிறந்த... டீடாக்ஸ் உணவுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









