World Oral Health Day 2025: பொதுவாக சில தாய்மார்கள் அவர்களின் சிறு குழந்தைகளுக்கு பாட்டிலில் பால், கஞ்சி, ஜூஸ் போன்றவற்றை கொடுப்பார்கள். இந்த குழந்தைகள் மணிக்கணக்கில் பாட்டில்களில் இருந்து பால், பழச்சாறு போன்ற இனிப்பு திரவங்களை குடித்துக்கொண்டே இருப்பார்கள். குறிப்பாக இரவில் தூங்கிக்கொண்டே இருக்கும் போது, குழந்தைகள் பாட்டிலில் குடிப்பார்கள். இதன் காரணமாக, திரவங்களில் உள்ள சர்க்கரை பல மணி நேரம் பற்களில் இருக்கும், இதனால் பற்களில் பாக்டீரியா ஏற்படக்கூடும். இது பேபி பாட்டில் சிண்ட்ரோம் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் இது குறித்த விழிப்புணர்வைப் பரப்பும் விதமாக ஃபோர்டிஸ் மருத்துவமனையின் முதன்மை இயக்குநரும், புதிதாகப் பிறந்த குழந்தைகளின் நோய்கள் மற்றும் குழந்தை மருத்துவத் துறையின் தலைவர் டாக்டர் ராகுல் நாக்பால், குழந்தைகளின் நல்ல வாய்வழி ஆரோக்கியத்திற்கான சில முக்கியமான வழிமுறைகளை பரிந்துரைத்துள்ளார். இதை முழு விவரத்தை இங்கே காணலாம்.
1. பாட்டில்களில் இனிப்பு திரவங்களை குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்:
தூங்கும் முன்பு குழந்தைக்கு பாட்டிலில் பால் கொடுப்பதைத் தவிர்க்கவும், குறிப்பாக அதில் ஃபார்முலா பால், ஜூஸ் அல்லது கஞ்சி போன்றவற்றை தவிர்க்கவும். இந்த திரவங்களில் உள்ள சர்க்கரை பல மணி நேரம் பற்களில் இருக்கும், இதனால் பற்களில் பாக்டீரியா ஏற்படக்கூடும்.
2. கப்பில் உணவை சாப்பிட வைக்கத் தொடங்குங்கள்:
உங்களின் குழந்தைக்கு 6 மாத நிறைவு பெற்றுவிட்டால் குழந்தைக்கு கப்பில் உணவை கொடுக்கத் தொடங்குங்கள். மேலும் 12 முதல் 18 மாதம் இருக்கும் குழந்தைகளுக்கு பாட்டிலில் பாலூட்டுவதை தவிர்க்கவும்.
3. குழந்தையின் பற்கள் மற்றும் ஈறுகளை தினமும் சுத்தம் செய்யுங்கள்:
குழந்தையின் ஈறுகளை கட்டாயம் தினமும் சுத்தமான ஈரமான துணியால் துடைக்கவும். மேலும் பற்கள் வரத் தொடங்கியவுடன் குழந்தைகளுக்கு மென்மையான பல் துலக்குதல் மற்றும் பற்பசையைப் பயன்படுத்தி ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வைக்கவும்.
4. ஆரோக்கியமான உணவுப் பழக்கம்
குழந்தைகளுக்கு கட்டாயம் சீரான உணவுப் பழக்கத்தை பழக்கப்படுத்தவும். மேலும் பழச்சாறுகளுக்கு பதிலாக முடிந்த வரை முழுப் பழங்களையும் கொடுக்கவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | தொடர்ந்து 15 நாட்கள் கற்றாழை ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
மேலும் படிக்க | சுகர் லெவலை சூப்பராய் குறைக்க உதவும் 7 பெஸ்ட் வழிகள்: ட்ரை பண்ணி பாருங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ