Weight Loss Journey: உடல் பருமனுடன் இருப்பவர்களில் பலரும் தற்போது, ஆரோக்கியமான வாழ்க்கைக்காக உடல் எடை குறைப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள் எனலாம். குறிப்பாக சமூக வலைதள பிரபலங்கள் பலரும் கூட அவர்களின் உடல் எடை குறைப்பு குறித்து தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர் எனலாம்.
Weight Loss Journey: 56 கிலோவை பெண்?
அந்த வகையில், பெங்களூருவில் பணியாற்றும் பெண் ஒருவர் தனது தீவிரமான உடல் எடை குறைப்பு பயணம் குறித்து அனுபவத்தை அவரது X தளத்தில் சமீபத்தில் பகிர்ந்திருந்தார். அதாவது மூன்று ஆண்டுகள் அவர் கடுமையாக முயற்சித்து செய்து உடல் எடையை குறைத்தது குறித்து பதிவிட்டிருந்தார்.
3.5 years of consistency can do wonders!
I was at 126.5 kgs in Oct 2021, and now at 69.7kgs( checked 2 days back). Down by more than 56 KGS!!
Started with simple and stuck to it. Consistently putting in exercise, choosing strength training and weightlifting with cardio and… pic.twitter.com/6Mi0qEKTSl
— Rutvi Shah (@Rutvi_9) March 31, 2025
ருத்வி ஷா என்ற அந்த பெண் அவரது X பதவில் உடல் பருமனோடு இருந்த புகைப்படத்தையும் உடல் எடையை குறைத்த பின்னர் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். மேலும், சுமார் மூன்று ஆண்டுகளில் 126 கிலோவில் இருந்து தற்போது 56 கிலோவை குறைத்திருக்கிறேன் என தனது உடல் எடை குறைப்பு பயணம் குறித்து அதில் பேசியிருந்தார்.
மேலும் படிக்க | Weight Loss Journey: 37 கிலோ எடை குறைத்த பெண் நிபுணர்.. அப்படி என்ன செய்தார்?
Weight Loss Journey: ருத்வி ஷா செய்தது என்ன?
நிதானமாக இருப்பதும், தொடர்ச்சியாக செயல்படுவதும்தான் உடல் எடையை குறைக்க தனக்கு உதவின என்கிறார். இதுகுறித்து அவர் மார்ச் 31ஆம் தேதி அன்று தனது X பதிவில்,"3.5 ஆண்டுகள் தொடர்ச்சியாக செயல்படுவது நிச்சயம் அற்புதத்தை உண்டாக்கும். கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நான் 126.5 கிலோவில் இருந்தேன். தற்போது 69.7 கிலோவுக்கு (இரண்டு நாள்களுக்கு முன் பார்த்தது) வந்துள்ளேன். 56 கிலோவுக்கும் மேல் குறைத்துள்ளேன்.
மிக எளிமையாக ஆரம்பித்தேன், அதை விடாப்பிடியாக பிடித்துக்கொண்டேன். தொடர்ச்சியாக ஒருநாள் விடாமல் உடற்பயிற்சியில் ஈடுபடுவது, Strength டிரெய்னிங் மற்றும் கார்டியோ உடன் எடை தூக்குதல், நல்ல ஊட்டச்சத்தை உட்கொண்டேன்" என குறிப்பிட்டிருந்தார். மேலும், அந்த பதிவில் கடைசியாக, இந்த உடல் எடை குறைப்பு பயணத்தைப் பற்றி மேலும் எழுத வேண்டும் என்றாலோ அல்லது யாராவது உடல் எடையை குறைக்க சிரமப்பட்டால் அவர்களுக்கு உதவ விரும்புகிறேன். என் வாழ்நாள் முழுவதும் உடல் பருமனால் போராடி வருகிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.
Weight Loss Journey: நெட்டிசன்கள் பதில்
சமூக வலைதளங்களில் இவருக்கு பலரும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். "மிகவும் சக்திவாய்ந்த கதை இது, ருத்வி! ஆரோக்கியமே முதன்மையானது. நம் தலைமுறையினர் அதை சரியாக புரிந்துகொள்ள மறுக்கிறார்களோ என எனக்கு தோன்றுகிறது"என பதிவர் குறிப்பிட்டிருந்தார்.
மற்றொரு பதிவர்,"உங்களுக்கு வாழ்த்துகள், ருத்வி. சரியாக சொன்னீர்கள். எளிமையான மாற்றத்தை தொடங்கி, அதை நீண்ட காலத்திற்கு பின்பற்றுவதே உங்கள் வாழ்வின் எந்த பகுதியை மாற்றுவதற்கும் சரியான ஒன்றாகும். இதை வாசிக்கும் அனைவரின் கவனத்திற்கு, எளிமை என்பது எளிதான விஷயம் அல்ல. தினந்தோறும் நீங்கள் சிரத்தை எடுக்க வேண்டும்..." என குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,"அருமை... 'உடல் பருமனுடன் இருப்பது அழகானது' என்ற கதையாடலை நீங்கள் ஏற்றுக்கொள்ளாமல், உங்கள் ஆரோக்கியத்தின் உச்சத்தை அடைய முயற்சிகள் எடுத்தது மிகவும் நல்லது. உங்களின் முயற்சி ஆயிரக்கணக்கானோருக்கு ஊக்கமளிக்கட்டும்" என்றார்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் ருத்வி ஷாவின் தனிப்பட்ட அனுபவம் ஆகும். இதனை பின்பற்றும் முன் உரிய மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை)
மேலும் படிக்க | நல்ல உணவுமுறையால் 18 கிலோவை குறைத்த பிரபலம்... அவர் செய்தது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









