Why It Is Not Good To Heat Food Again and Again: மிகவும் முக்கியமான விஷயம் மற்றும் சிறிது டேஞ்சரான ஒரு விஷயம் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். நாம் தினமும் உணவை சமைத்து தான் உட்கொள்கிறோம். முந்தைய காலத்தில், அன்று சமைத்த உணவை அன்றே சாப்பிட்டு முடித்து விடுவார்கள். ஒவ்வொரு நாளும் பிரெஷ்ஷான உணவை சாப்பிட்டு வந்தார்கள். ஆனால் எப்போதிருந்து குளிர்சாதன பெட்டி வந்ததோ, அப்போதிருந்தே சமைத்த உணவை பிரிட்ஜில் வைத்து ஒன்று, இரண்டு அல்லது மூன்று நாள் கழித்து சாப்பிடுகிற பழக்கம் அதிகரித்து உள்ளது. சில நேரங்களில் சில உணவுகளை ஒரு வாரம் கூட வைத்து சாப்பிடக்கூடிய பழக்கமும் இருக்கிறது.
உணவை மீண்டும் சூடாக்குவது ஏன் பாதுகாப்பற்றது?
குளிர்சாதன பெட்டியில் வைத்து, அதை மீண்டும் சாப்பிடுவதை ஒட்டுமொத்தமாக குறை சொல்லமுடியாது. அதற்காக அனைத்து உணவுகளையும் பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் சில உணவுகளை பிரிட்ஜில் வைத்துவிட்டு திரும்ப எடுத்து சூடுபடுத்தி சாப்பிடும் போது, அது விஷமாக மாறும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆனால் சாப்பிட்டதும் விஷமாக மாறி இவை உயிரை எடுக்காது. ஸ்லோ பாய்சன் போல கொஞ்சம் கொஞ்சமாக உடலில் விஷத்தை சேர்ந்து நமது ஆயுளை இவை குறைக்கலாம். மேலும் இவை தேவையில்லாத பல உடல் பிரச்சனைகள் மற்றும் நோய்களை ஏற்படுத்தலாம்.
மீண்டும் சூடாக்கக் கூடாத உணவுகள் பட்டியல்
குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிடக் கூடாத உணவுகள் என்ன? அடிக்கடி சூடுப்படுத்தி சாப்பிடக்கூடாத உணவுகள் எவை? அதனால் ஏற்படும் நன்மை மற்றும் தீங்குகள் என்ன? இந்த விஷயங்களை பற்றி இங்கே காணலாம்.
கேரட், முள்ளங்கி, கீரை
நைட்ரேட் நிறைந்த காய்கறிகளான கேரட், முள்ளங்கி, கீரை என இந்த மூன்று உணவுப் பொருட்களை திரும்ப சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. இந்த உணவுகளில் நைட்ரேட்ஸ் அதிகமாக இருப்பதால், திரும்ப சூடு பண்ணும்போது, அது விஷமாக மாறுவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அதேபோல கீரையில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. இரும்புச்சத்து நிறைந்த எந்த உணவு பொருளையும் திரும்ப சூடுபடுத்தி சாப்பிடும் போது, கண்டிப்பாக அது உடலில் பிரச்சனைகளை உருவாக்கும்.
சோறு
திரும்ப சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத உணவுகளில் சோறும் ஒன்று. பொதுவாக புழுங்கல் அரிசி, பச்சரிசி என எதுவாக இருந்தாலும் சாதத்தை வடித்துதான் சாப்பிடுறோம். சிலர் காலை அல்லது மத்தியம் வடித்த சாதத்தை இரவில் சாப்பிடும் போது வடித்த சாதத்தை திரும்ப சூடுபடுத்தி சாப்பிடுவார்கள். அப்படி சூடுபடுத்தும் போது சாதத்தில் இருக்கும் பேஸ்லெஸ் பாக்டீரியா ஒரு வகையான கெமிக்கல்சை உருவாக்குகின்றது. இது விசமாக மாற வாய்ப்பு உள்ளது.
முட்டை
பொதுவாக முட்டையில் நைட்ரஜன் அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் முட்டை மிகச்சிறந்த புரோட்டீன் உணவு என்பதும் அனைவருக்கும் தெரியும். புரோட்டீன் அதிகமாக இருக்கும் உணவை சமைத்து சாப்பிட்டால் அதில் இருக்கும் அமினோ ஆசிட் உடைந்து நமக்கு கிடைக்கக்கூடிய சத்து கிடைக்காமல் போகிறது என சுகாதார நிபுணர்கள் கூறுவார்கள். அவற்றை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால், அந்த உணவு கண்டிப்பாக விஷமாக தான் மாறும்.
சிக்கன்
பலர் விரும்பி சாப்பிடும் உணவுகளில் சிக்கனுக்கு தனி இடம் உண்டு. அதுவும் அசைவ பிரியர்களுக்கு இது முதல் சாய்ஸ் என்றே கூறலாம். பச்சை சிக்கனை வாங்கி பிரிட்ஜில் வைத்து சில நாட்கள் கழித்து சாப்பிடும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. அதுவே தவறு தான். அதில் சமைத்த சிக்கனை பிரிட்ஜில் வைத்து திரும்ப சூடுபடுத்தி சாப்பிடும்போது அது பாய்சனாக மாறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதுவும் சிக்கனில் புரோட்டீன் அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடல் உணவுகள்
கடல் உணவுகளை ஒரு முறை சமைத்துவிட்டு, பின் மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. இந்த கடல் உணவுகளில் உள்ள புரோட்டீன் விஷமாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கடல் உணவுகள் சிலருக்கு ஓவ்வாமையையும் உண்டு பண்ணும். இதை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துதி சாப்பிடும் போது இன்னும் அந்த பிரச்சனை அதிகமாக வாய்ப்பு இருக்கிறது.
சூடுபடுத்தி சாப்பிடும் உணவுகள் குறித்து எச்சரிக்கை
இந்த ஐந்து வகையான உணவுகளை எப்படி சாப்பிடுவது என்பதை அறிந்துக்கொண்டு இருப்பீர்கள். இந்த உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபத்தி சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மீண்டும் மீண்டும் பிரிட்ஜில் வைத்து, மைக்ரோ ஓவன், அடுப்பில் சூடுபடுத்தி சாப்பிட்டு நோயை பெற்றுக் கொள்ளாதீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க - கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக உள்ளவர்கள் இந்த 5 சூப்பர்ஃபுட்களை சாப்பிட்டால் போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









