தானங்களில் மிகச்சிறந்த தானங்களில் ஒன்றான ரத்ததானம் உயிரை காக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. விபத்தில் காயமடைந்தவர்கள், அறுவை சிகிச்சை பெற்ற நோயாளிகள், கடுமையான நோயுடன் போராடுபவர்கள் ஆகியவர்களுக்கு உயிர் கொடுக்க ரத்ததானம் மிகவும் உதவும்.
கொடுப்பவர் உயிரையும் பெறுபவர் உயிரையும் காக்கும் இரத்ததானம்
இரத்த தானம் பெறுபவர் உயிரை மட்டுமல்ல, கொடுப்பவர் உயிரையும் காப்பாற்றும் என்று அறிந்து கொண்டால் நீங்கள் நிச்சயம் ஆச்சரியம் அடைவீர்கள். புற்றுநோய் வருவதை தடுப்பது முதல் இதய ஆரோக்கியம் வரை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வியக்கத்தக்க பலன்களை இரத்த தானம் வழங்கும் என்கின்றன ஆராய்ச்சிகள். லண்டனைச் சேர்ந்த பிரான்சிஸ் க்ரிக் அமைப்பு நடத்திய ஆராய்ச்சியில், இந்த ஆச்சரியமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
அடிக்கடி இரத்த தானம் வழங்குவதால் கிடைக்கும் வியக்கத்தக்க நன்மைகள்
அடிக்கடி இரத்த தானம் வழங்குபவர்கள் மற்றும் மிகக் குறைந்த அளவில் ரத்த தானம் வழங்கியவர்கள் ஆகிய இரு தரப்பினரிடம் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில், அடிக்கடி இரத்ததானம் வழங்குபவர்களுக்கு, ரத்தப் புற்றுநோய் மற்றும் ரத்தம் சார்ந்த குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்பு வியக்கத்தக்க அளவில் குறைந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மாரடைப்பு அபாயத்தை தடுக்கும் ரத்ததானம்
அடிக்கடி ரத்த தானம் வழங்குவதால், புதிய ரத்தம் ஊறி, ரத்தத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. அதோடு இது இதய ஆரோக்கியத்தையும் பெருமளவு அதிகரிக்கிறது. இதயத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு ரத்தம் கெட்டியாக இருப்பது முக்கிய காரணமாக உள்ளது என்கின்றனர் நிபுணர்கள். ரத்தம் மிகவும் கெட்டியாக இருந்தால், ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, மூளையில் ரத்தம் உறைதல், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் பெருமளவு அதிகரிக்கின்றன. அடிக்கடி ரத்த தானம் வழங்குவதன் மூலம், ரத்தம் புத்துணர்வு பெற்று, கெட்டியாவது தடுக்கப்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ரத்த தானம்
அடிக்கடி இரத்த தானம் கொடுப்பது, இரும்புச்சத்து அளவை அதிகரித்து, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து, வீக்கத்தை கட்டுப்படுத்தி, இதய ஆரோக்கிய மேம்பட உதவுகிறது. மேலும் அடிக்கடி ரத்ததானம் செய்வது, ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என்கின்றனர் மருத்துவர்கள்.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் இரத்த தானம்
அடிக்கடி ரத்த தானம் கொடுப்பதால், உடலில் இன்சுலின் உணர்திறன் மேம்பட்டு, நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும் என்று ஆரம்ப கட்ட ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. எனினும் ரத்த தானம் கொடுப்பதால் மட்டும், நீரழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நீரிழிவு நோயாளிகளுக்கு உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மிக அவசியம். ரத்ததானம், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் கூடுதல் பாதுகாப்பு எனலாம்.
இரத்த தானத்திற்கு முந்தைய பரிசோதனை
ரத்த தானம் கொடுக்க நமது உடல் நிலை ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பது முக்கியம். ஹீமோகுளோபின் அளவு, ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு ஆகிய பரிசோதனைக்கு பிறகு, ரத்த தானம் கொடுக்க அனுமதி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | அதிகாலை திடீரென தூக்கம் கலைகிறதா? ஆய்வில் தெரியவந்த அதிர்ச்சிகரமான உண்மை
மேலும் படிக்க | மூளை முதல் இதயம் வரை... வியக்க வைக்கும் பலன்களைத் தரும் ப்ரோக்கோலி
மேலும் படிக்க | குறட்டையால் அவதிப்படுகிறீர்களா? இதை மட்டும் செய்யுங்கள்.. உடனடி தீர்வு கிடைக்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









