பழங்கள் ஊட்டச்சத்தின் களஞ்சியங்கள் என்பதை மாற்றுக் கருத்து இருக்க இயலாது. பல்வேறு வகை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பேரீச்சம்பழம், பல்வேறு வகையில் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கக் கூடிய சூப்பர் புட் தான். எனினும் பேரீச்சம்பழம், அனைவரது உடலுக்கும் ஒத்துக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிலருக்கு அதனை சாப்பிடுவதால் பிரச்சினைகள் உண்டாகலாம்.
பேரீச்சம் பழத்தில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் பற்றியும், அதனால் கிடைக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகள் பற்றியும், அதே சமயத்தில் பேரீச்சம் பழத்தினை யாரெல்லாம் எச்சரிக்கையுடன் சாப்பிட வேண்டும் (Health Tips) என்பதையும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பேரீச்சம் பழத்தில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள்
பேரீச்சம் பழத்தில் இரும்புச்சத்து, வைட்டமின் பி6, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.
பேரீச்சம் பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
1. நார்ச்சத்து நிறைந்துள்ளதால் மலச்சிக்கலுக்கு நிவாரணம் அளிக்கிறது
2. இரும்புச்சத்து அதிகம் காணப்படுவதால், ரத்த சோகை உள்ளவர்களுக்கு அருமருந்தாக இருக்கும்.
3. பேரீச்சம்பழம் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, சரும ஆரோக்கியம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உடலுக்கு ஆற்றலை அள்ளி வழங்குகிறது.
4. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பேரீச்சம்பழம் உதவும். இதில் உள்ள இரும்புச் சத்தும் நார்ச்சத்தும் இதற்கு காரணம்.
5. மூட்டு வலி இருப்பவர்கள் இந்த பழத்தை வழக்கமாக சாப்பிடுவதால், எலும்புகள் வலுப்பெற்று, வலியிலிருந்து படிப்படியாக நிவாரணம் பெற உதவும்.
பேரீச்சம்பழம் பக்க விளைவுகள்
கீழ்க்கண்ட உடல் நலப் பிரச்சனை இருப்பவர்கள் பேரீச்சம் பழத்தை சாப்பிடும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
நீரழிவு நோயாளிகள்
சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய பழங்களில் பேரீச்சம் பழமும் அடங்கும். ஏனெனில் இதில் இயற்கை சர்க்கரை அதிகம் உள்ளது. உங்கள் உடல் நிலையை பொறுத்து எந்த அளவில் பேரீச்சம்பழம் சாப்பிடலாம் என்பதை மருத்துவரிடம் கலந்தாலோசித்து பின்னர் சாப்பிடுவது நல்லது.
சிறுநீரகப் பிரச்சனை
சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள் பேரீச்சம் பழத்தை அளவோடு சாப்பிட வேண்டும். இதில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், சிறுநீரக நோயாளிகளின் பிரச்சனையை இது அதிகரிக்க கூடும்.
வயிற்றுப்போக்கு
பேரீச்சம்பழம் மலமிளக்கியாக செயல்படுவதால், வயிற்றுப் போக்கால் அவதிப்படுபவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது. இதனால் அவர்களது பிரச்சனை அதிகரிக்க கூடும்.
உடல் பருமன்
உடல் பருமன் இருப்பவர்கள் பேரீச்சம் பழத்தை அளவோடு உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இதழ் இயற்கை சர்க்கரையும், கலோரிகளும் அதிகம் உள்ளது. இதனை அளவிற்க்கு அதிகமாக சாப்பிடுவதால், உங்கள் எடை இழப்பு முயற்சிகள் தேவையான பலனை கொடுக்காமல் போகலாம்.
அலர்ஜி
சிலருக்கு பேரீச்சம்பழம் அலர்ஜியை ஏற்படுத்தலாம். எனவே அலர்ஜி பிரச்சனை இருப்பவர்கள் பேரீச்சம் பழத்தை தவிர்க்க வேண்டும். இதனால் சருமத்தில் அரிப்பு, சருமம் சிவத்தல், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | வெள்ளை எள் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









