ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நடை பயிற்சி மிக முக்கியம். அந்த வகையில் இரவு உணவு சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் நடை பயிற்சியில் ஈடுபடுவது பல்வேறு உடல்நல பிரச்சனைகளையும் நோய்களையும் தவிர்க்க உதவும்.
இரவு உணவுக்கு பிறகு எவ்வளவு நேரம் நடக்கலாம்?
இரவு உணவு சாப்பிட்டபின், குறைந்தது 30 நிமிடங்களாவது நடக்க வேண்டும் என்று உணர்வியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். அதனை படிப்படியாக 45 நிமிடங்களாக, அதிகரிப்பதன் மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அடையலாம். எனினும் இரவு நேர நடை பயிற்சியில், அதிவேகத்தில் நடப்பது நல்லதல்ல. மெதுவான சீரான வேகத்தில் நடப்பது சிறந்தது என்கின்றனர் நிபுணர்கள்.
இரவில் டின்னருக்கு பின் அரை மணி நேரம் நடப்பதால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள்
1. நடைப்பயிற்சி அதிக அளவிலான கலோரிகளை எரித்து, உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும்.
2. இரவு உணவிற்குப்பின் நடப்பதால் ரத்த ஓட்டம் மேம்படுவதோடு, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்துகளை பெருமளவு குறைக்கும்.
3. நீரழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, டின்னருக்கு பின் நடக்க வேண்டியது மிக அவசியம். ஏனெனில் இதில் இன்சுலின் உணர்ந்திறனை அதிகரிக்கிறது.
4. நடைப்பயிற்சி உடலில் ஹாப்பி ஹார்மோன்களை வெளியிடுகிறது. இதனால் மன அழுத்தம், சோர்வு பதற்றம் ஆகியவை பெரும் அளவு குறைகிறது. இது மனதை அமைதியாகவும் ஒருமுகப்படுத்தியும் வைத்துக்கொள்ள உதவும்.
5. நடை பயிற்சி எலும்புகளை வலுவாக்க உதவும். இதனால் மூட்டு வலி, கை கால் வலிகள், முழங்கால் வலி ஆகியவற்றுக்கு குட் பை சொல்லலாம். எலும்பு மெலிதல் என்னும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் வருவதை தடுக்க தினமும் நடை பயிற்சி செய்வது உதவும்.
6. நடைப்பயிற்சி உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படுத்துகிறது. இதனால் சளி, காய்ச்சல் போன்ற பருவ கால நோய்களை தவிர்க்கலாம். தொற்றுநோய் பரவலில் இருந்தும் உடலை காத்துக் கொள்ளலாம்.
7. செரிமான பிரச்சனைகளுக்கு குட் பை சொல்ல, இரவு உணவிற்குப்பின் நடக்க வேண்டும். அஜீரணம் நெஞ்சு எரிச்சல், மலச்சிக்கல் போன்ற வியாதிகளில் இருந்து முழுமையாக விடுதலை பெறலாம்.
8. இரவு உணவிற்குப்பின் அரை மணி நேரம் நடப்பதால், தூக்கமின்மை பிரச்சனை என்பதே இருக்காது. என்ன தூக்கம் கிடைப்பதால், அடுத்த நாளை புத்துணர்ச்சியுடன் தொடக்கலாம்.
9. மூளை சுறுசுறுப்பாக இயங்க, இரவு நேர நடை பயிற்சி உதவும். நினைவாற்றல் மனதெளிவு கவனம் செலுத்தும் அவற்றை அதிகரிக்க, இரவு நேர வாக்கிங் மிக அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.
10. இரவு உணவை பொதுவாக இரவு ஏழரை மணிக்குள் சாப்பிட்டு விடுவது நல்லது. சாப்பிட்ட பிறகு, குறைந்தது அரை மணி நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக்கி கொண்டால், உடல் மற்றும் மனநலம் மேம்பட்டு, உங்கள் ஆற்றல் அளவு மிகவும் அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ மருத்துவ நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், குடும்ப மருத்துவர் அல்லது மருத்துவ நிபுணரை அணுகி ஆலோசனை பெறும் படி கேட்டுக் கொள்கிறோம். எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | உடல் பருமனை எரிக்க உதவும்... சூப்பர்புட் இவை தான்... கட்டாயம் சேருங்க
மேலும் படிக்க | மக்கானா சூப்பர்புட் தான்... ஆனால், இந்த பிரச்சனை இருந்தால் வேண்டாமே...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









