பாலில் வேகவைத்த பேரீட்சை பழம் சாப்பிடுவதன் நன்மைகள்

Health Tips : பாலில் வேக வைத்த பேரீச்சை பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள், பால், பேரீட்ச்சை பழம் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 

Written by - Karthikeyan Sekar | Last Updated : Apr 11, 2025, 10:03 AM IST
  • பேரீச்சம் பழத்தின் நன்மைகள்
  • பாலில் சேர்த்து சாப்பிட்டால் ஊட்டச்சத்து
  • யாரெல்லாம் இதை சாப்பிடக்கூடாது
பாலில் வேகவைத்த பேரீட்சை பழம் சாப்பிடுவதன் நன்மைகள்

Health Tips Dates and Milk : பேரீச்சை பழம் மற்றும் பால் இரண்டும் சத்தான உணவுகள். இவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிடும்போது அதிக ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. பாரம்பரிய மருத்துவ முறையில் பரிந்துரைக்கப்படும் உணவாகவும் இவை உள்ளன. பால் மற்றும் பேரீச்சை பழம் சேர்த்து சாப்பிடுவது உடல் வலுவை அதிகரிக்கும். ஏனென்றால், பாலில் கால்சியம், புரதம் உள்ளது. பேரீட்சையில் வைட்டமின் C, ஃபைபர், ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் உள்ளன. இரண்டும் சேர்ந்து எலும்புகள், தசைகள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.

Add Zee News as a Preferred Source

இரத்த சுத்திகரிப்பு - பேரீச்சையில் உள்ள ஃபோலிக் அமிலம் மற்றும் போட்டாசியம் இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது. பால் சேர்த்து சாப்பிடும்போது ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

ஜீரணத்திற்கு நல்லது - பேரீச்சையில் உள்ள நார்ச்சத்து மற்றும் பாலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் செரிமானத்தை மேம்படுத்துகின்றன. இதனால், மலச்சிக்கலை தடுக்கும். எடை குறைக்க உதவும். மெட்டபாலிசத்தை அதிகரிக்கும், கொழுப்பை குறைக்கும்.

தோல் பளபளப்பு - பேரீச்சையில் உள்ள வைட்டமின் C மற்றும் பாலில் உள்ள லாக்டிக் அமிலம் தோல் பளபளப்பை அதிகரிக்கும். இது உடல் வெப்பத்தை குறைக்கும்.

எப்படி செய்வது?

ஒரு பேரீச்சை பழத்தை தோல் நீக்கி, துண்டுகளாக்கவும். ஒரு கப் பாலில் (வேண்டுமானால் சூடான பால்) பேரீட்சை துண்டுகளை 5-10 நிமிடம் ஊறவைக்கவும். தேன் அல்லது ஏலக்காய் சேர்த்து சாப்பிடலாம்.

பேரீச்சை மற்றும் பால் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

பேரீச்சை பழம் அமிலத்தன்மை (அசிடிக்) கொண்டது, பால் அல்கலைன் தன்மை உடையத என்பதால் ஜீரண பிரச்சினை உள்ளவர்கள் இதனை சாப்பிடக்கூடாது. இரண்டும் சேர்ந்தால் ஜீரணக்கோளாறு, வயிற்றுப்போக்கு, அஜீரணம் ஏற்படலாம். வயிறு புண் (அல்சர்), GERD (எதிர்ப்பு அமில ஓட்டம்) உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். பாலில் உள்ள லாக்டோஸ் சர்க்கரையை ஜீரணிக்க முடியாதவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாயுவு, குமட்டல் ஏற்படும். குழந்தைகள் மற்றும் வயதானவர்களில் இது பொதுவானது.

பால் சளியை அதிகரிக்கும், பேரீச்சை குளிர்ச்சி தரும். இவை சேர்ந்தால் உடல் குளிர்ச்சி, தொண்டை பிரச்சினை ஏற்படலாம். பேரீட்சையில் இயற்கை சர்க்கரை (ஃபிரக்டோஸ்) அதிகம். இதனால் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது. மருத்துவரின் ஆலோசனை கட்டாயம் தேவை. 

மேலும் படிக்க | எடை ஏறாமல் இருக்க ராஷி கண்ணா செய்யும் விஷயம்! ஒரு நாளும் மிஸ் பண்ண மாட்டாராம்..

மேலும் படிக்க | 73 வயதிலும் இளமையாக இருக்கும் நடிகை!! தினமும் சாப்பிடும் ஒரே வறுத்த உணவு..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News