Hibiscus Tea Benefits: அழகில் சிறந்த செம்பருத்தி மலரை, பல நோய்களிய இயற்கையாக குணமாக்க வீட்டு வைத்தியமாக எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும், அதில் மறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகளையும், இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

இன்றைய துரித கதியிலான வாழ்க்கை முறையில், மோசமான உணவுப் பழக்கம் மற்றும் உடல் உழைப்பு இல்லாத நிலை ஆகியவை சேர்ந்து கொண்டு, உடல் ஆரோக்கியத்தை பலவகையில் பாதித்து வருகிறது. எனினும் இதில் ஆறுதல் தரும் விஷயம் என்னவென்றால், ஆரோக்கியமான உணவு பழக்கம் குறித்த முக்கியத்துவத்தை போது பலர் அறிந்து வருகின்றனர்.
நமது உடலை நோய் நெருங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், நோய்கள் ஏற்பட்டாலும் அதனை இயற்கையான முறையில் குணப்படுத்த வேண்டும் என்றும் பலர் விரும்புகின்றனர். மருத்துவ குணம் நிறைந்த உணவுகள் மற்றும் மூலிகைகள் ஆகியவற்றை பயன்படுத்தவே பலர் விரும்புகின்றனர். அந்த வகையில் எளிதில் கிடைக்கும் செம்பருத்தி மலர் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. ஆன்மீகத்தில் அதிக முக்கியத்துவம் கொண்ட இந்த மலர், பல வகைகளில் சிறந்த வீட்டு வைத்தியமாக (Health Tips) பயன்படுத்தலாம் என்பதை தெரிந்து கொண்டால் ஆச்சரியம் ஏற்படலாம்.
அழகில் சிறந்த செம்பருத்தி மலரை, பல நோய்களை இயற்கையாக குணமாக்க வீட்டு வைத்தியமாக எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும், அதில் மறைந்துள்ள ஆரோக்கிய நன்மைகளையும், இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
செம்பருத்தி மலரில் ஒளிந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள்
நீரழிவு நோய்க்கு மருந்தாகும் செம்பருத்தி
சர்க்கரை நோய் உள்ளவர்கள், சுகர் லெவலை கட்டுக்குள் வைத்துக்கொள்ள, செம்பருத்தி பூ உதவும். வெறும் வயிற்றில் செம்பருத்தி டீ அருந்துவது பலன் தரும். இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள், உடலின் இன்சுலின் உணர் திறனை அதிகரிக்கின்றன.
உயர் ரத்த அழுத்தத்திற்கு முடிவு கட்டும் செம்பருத்தி
உயர் ரத்த அழுத்தம் மிகவும் ஆபத்தானது. மாரடைப்பு பக்கவாதம் போன்ற உடல் நல பிரச்சனைகள் ஏற்பட இது முக்கிய காரணமாக அமைகிறது. செம்பருத்தி தேநீர் அருந்துவது, ஐ பி பி யை கட்டுப்படுத்த உதவும். இதய தமனிகளை தளர்த்தி, ரத்த ஓட்டத்தை மேம்படச் செய்யும் என்பதால், இதனை அருந்துவது நல்ல பலன் கொடுக்கும்.
பருமனை குறைக்க உதவும் செம்பருத்தி டீ
செம்பருத்தி கொழுப்பை எரிக்கும் ஆற்றலைக் கொண்டது. இதய தமனிகளில் சேர்ந்திருக்கும் எல்டிஎல் கொலஸ்ட்ரால் என்னும் கெட்ட கொழுப்பை எரித்து இதய நோய் அண்டாமல் பாதுகாக்கிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் செம்பருத்தி மிக முக்கிய பங்கை வகிக்கும் என்று பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
புற்றுநோயை எதிர்த்து போராட செம்பருத்தி
செம்பருத்தி பூவில், புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்க உதவும் கூறுகள் உள்ளதாக பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன. புற்றுநோய் சிகிச்சையில் கீமோதெரபி மூலம் கிடைக்கும் பலன்களை மேம்படுத்த செம்பருத்தி உதவும்.
செம்பருத்தி பூவை எடுத்துக் கொள்ளும் எளிய முறை
செம்பருத்திப் பூக்களை தயாரித்து அருந்துவது நல்லது. செம்பருத்தி பூக்களை நன்றாக உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு, தினமும் சிறிதளவு வெதுவெதுப்பான நீரில் கலந்து அருந்தலாம். அல்லது செம்பருத்தி பூ மொட்டுகளை நான் நிறைந்து நின்று சாப்பிடலாம். உங்களுக்கேற்ற ஒரு வழிமுறையை தேர்ந்தெடுத்து, தொடர்ந்து அருந்தி வருவது நல்ல பலனை கொடுக்கும் என்கின்றனர் ஆயுர்வேத நிபுணர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ