)
இன்றைய காலகட்டத்தில், நவீன வாழ்க்கை முறை காரணமாக முதியவர்களை விட இளையவர்களுக்கு அதிக அளவில், கொலஸ்ட்ரால், பிபி, இரத்த சர்க்கரை போன்ற பாதிப்புகள் அதிகம் இருப்பதைக் காணலாம். இளைஞர்கள் மாரடைப்பு காரணமாக இறக்கும் சம்பவங்களை அடிக்கடி கேள்விப்படுகிறோம். இதற்கு மிக முக்கிய காரணம் உடல் பருமன் மற்றும் உடல் உழைப்பு இல்லாத ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை.
ஜாகிங் என்னும் ஓடும் பயிற்சி
நடைப்பயிற்சி மிகச்சிறந்த உடற்பயிற்சி என்றாலும், சாதாரண உடல்நிலை கொண்டவர்கள் இளைஞர்கள், நடைபயிற்சியை விட ஜாகிங் என்னும் ஓடும் பயிற்சியை வழக்கமாக மேற்கொண்டால், மிகவும் நன்மை பெறலாம். இதனால், அதிக கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் பருமன் குறைவது மட்டுமின்றி, தசை ஆரோக்கியம் மேம்படும். நீரிழிவு ஆபத்து பெருமளவு குறையும். இதயம், கல்லீரல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அதற்கு அதிகம் அல்ல தினம் 30 நிமிட ஜாகிங் பயிற்சி போதும் என்கின்றனர் நிபுணர்கள்.
தினம் 30 நிமிட ஜாகிங் பயிற்சி செய்வதால் கிடைக்கும் வியக்கத்தக்க நன்மைகள்
1. ஜாகிங் பயிற்சி அதிக கலோரிகளை எரிக்கும் திறன் கொண்டதால், கொழுப்பு எரிக்கப்பட்டு உடல் எடை மிக விரைவாக குறையும். செரிமான ஆரோக்கியம் சிறப்பாக இருக்கவும் ஜாகிங் பயிற்சி உதவும்.
2. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், மாரடைப்பு போன்ற இதய நோய் அபாயத்தை குறைக்க ஜாக்கிங் என்னும் சிறந்த கார்டியோ வாஸ்குலர் பயிற்சி மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. தினமும் 30 நிமிட ஜாகிங் பயிற்சி, கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொழுப்பை எரிக்க பெரிதும் உதவும்.
3. உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த ஜாகிங் பயிற்சி உதவும். ரத்த நாளங்கள் விரிவடைவதால், ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் மாரடைப்பு பக்கவாதம் ஏற்படும் ஆபத்து பெருமளவு குறையும்.
4. ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் நோய் வராமல் ஜாகிங் தடுக்க உதவும். இதனால் மூட்டுகள் வலுவாவதுடன், முதுமை காரணமாக ஏற்படும் மூட்டு சார்ந்த பிரச்சனைகளும் தீரும்
5. உடல் முழுவதற்கும் ஆக்ஸிஜனை வழங்கி, ஆற்றலை அதிகரிக்கும் ஜாகிங் பயிற்சி, நுரையீரலையும் வலுப்படுத்தும் ஆற்றல் கொண்டது.
6. நாம் ஓடும் போது, உடலில் உள்ள அனைத்து தசைகளும் வேலை செய்கின்றன. இதனால், தினமும் ஜாகிங் பயிற்சி செய்வதால் தசைகள் வலுவாக இருக்கும்.
7. மன சோர்வு, மன அழுத்தம் விலக தினமும் ஜாகிங் பயிற்சி உதவும். ஜாகிங் பயிற்சி மூலம், மகிழ்ச்சி உணர்வை கொடுக்கும் ஹார்மோன்கள் உடலில் தூண்டப்படுவதால், நமது மனநிலை மேம்படுகிறது.
8. ஜாகிங் பயிற்சி மேற்கொள்வதால், உடலின் ஸ்டாமினா என்னும் வலிமையும், ஆற்றல் அளவும் அதிகரிப்பதால், சோர்வே இல்லாமல் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ