கொலஸ்ட்ரால் முதல் வெயிட் லாஸ் வரை... சியா விதைகளில் புதைந்திருக்கும் எக்கச்சக்க நன்மைகள்

சியா விதைகள், திருநீற்றுப்பச்சிலை விதைகள் எனவும் அழைக்கப்படுகிறது. இனிப்பு சுவை கொண்ட இந்த விதைகள் நமக்கு கிடைத்திருக்கும் பொக்கிஷம் எனலாம். சூப்பர் ஃபுட் என்று அழைக்க தேவையான அனைத்து அம்சங்களும் இதில் உள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 18, 2025, 04:21 PM IST
  • சியா விதைகளின் எண்ணற்ற நன்மைகள்.
  • சிறந்த வெயிட் லாஸ் உணவு.
  • தூக்கமின்மைக்கு தீர்வைத் தரும் சியா விதை.
கொலஸ்ட்ரால் முதல் வெயிட் லாஸ் வரை... சியா விதைகளில் புதைந்திருக்கும் எக்கச்சக்க நன்மைகள்

Chia Seeds Benefits: கருப்பு நிறத்தில் மிகச் சிறிய அளவில் இருக்கும் சியா விதைகள், திருநீற்றுப்பச்சிலை விதைகள் எனவும் அழைக்கப்படுகிறது. இனிப்பு சுவை கொண்ட இந்த விதைகள் நமக்கு கிடைத்திருக்கும் பொக்கிஷம் எனலாம். சூப்பர் ஃபுட் என்று அழைக்க தேவையான அனைத்து அம்சங்களும் இதில் உள்ளது. 

Add Zee News as a Preferred Source

சியா விதைகளின் எண்ணற்ற நன்மைகள்

ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமான சியா விதைகளில், கால்சியம், மெக்னீசியம், நார்ச்சத்து, அமினோ அமிலங்கள் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை பல வகைகளில் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு

சியா விதைகளில், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் திறன் உள்ளது. ஏனெனில் இதில் உள்ள நார்ச்சத்து கொழுப்பை கரைக்கும். மேலும் இதில் உள்ள ஒமேகா-3 என்னும்   ஆரோக்கிய கொழுப்பு அமிலம் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவு

பாலை விட அதிக கால்சியம் சத்து கொண்ட சியா விதைகள், எலும்புகளை வஜ்ரம் போல் வலுவாக உதவுகிறது. இதனை அடிக்கடி சேர்த்துக் கொள்வதால், ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் நோய், மூட்டு வலி, முழங்கால் வலி உள்ளிட்ட பிரச்சனைகளை தவிர்க்கலாம். வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை, அனைவரும் சாப்பிடலாம். இதனால் குழந்தைகளுக்கு எலும்பு வளர்ச்சி, பற்கள் வளர்ச்சிஆகியவை சிறப்பாக இருக்கும்.

சிறந்து வெயிட் லாஸ் உணவு

சியா விதைகள் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இதில் உள்ள நார்ச்சத்து கொழுப்பை எரிப்பதோடு, வளர்ச்சிதை மாற்றத்தை தோண்டி, செரிமானத்தை மேம்படுத்தி, உடல் எடை குறைய உதவுகிறது. மேலும் இதனை உண்பதால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.

தூக்கமின்மைக்கு தீர்வைத் தரும் சியா விதை

சியா விதைகளில் உள்ள ட்ரிப்டோன் என்னும் அமினோ அமிலம், உடலில் செரடோனின் மற்றும் மெலடோனின் உற்பத்திக்கு உதவுகிறது. இரவில் நாங்கள் தூக்கம் கிடைக்க இவை இரண்டும் முக்கியம். மன அழுத்தத்தை போக்கவும் இவை அவசியம். எனவே மனம் அமைதிபடவும், நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெறவும், சியா விதைகளை கண்டிப்பாக உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

சிறந்த டீடாக்ஸ் உணவு

விதைகளில் உள்ள ஆக்ஸிஜனேற்ற மற்றும்  அழற்சி எதிர்ப்பு பண்புகள், உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும், கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தி, உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் அழுக்குகளை வெளியேற்றவும் உதவுகிறது. இதனால் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறுகிறது.

இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்கும் உணவு

சியா விதைகளின் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக உள்ளதால், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

சியா விதைகளை சாப்பிடும் சரியான முறை

சியா விதைகளை அப்படியே சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். மேலும், இதன் ஊட்டச்சத்து பலன்களை முழுமையாக பெற இதனை, தண்ணீர், பால் அல்லது தயிரில் ஊறவைத்து தான் சாப்பிட வேண்டும். ஊறவைப்பதன் மூலம், அவை ஜெல் போன்ற தன்மையைப் பெறுகின்றன. எனவே, ஜீரணிக்க எளிதாகிறது.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | அதிகாலை திடீரென தூக்கம் கலைகிறதா? ஆய்வில் தெரியவந்த அதிர்ச்சிகரமான உண்மை

மேலும் படிக்க | மூளை முதல் இதயம் வரை... வியக்க வைக்கும் பலன்களைத் தரும் ப்ரோக்கோலி

மேலும் படிக்க | குறட்டையால் அவதிப்படுகிறீர்களா? இதை மட்டும் செய்யுங்கள்.. உடனடி தீர்வு கிடைக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News