மூளை முதல் இதயம் வரை... வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை நீர் செய்யும் மேஜிக்

Cinnamon Water Benefits : இலவங்கப்பட்டை மசாலாவின் ஆரோக்கிய நலன்கள் மற்றும் மருத்துவ பண்புகள் பற்றி ஆயுர்வேதத்தில்  குறிப்பிடப்பட்டுள்ளன. இலவங்கப்பட்டை தினமும் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 2, 2025, 10:53 AM IST
  • காலையில் வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.
  • இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி மாரடைப்பு அபாயத்தை குறைக்கும் மசாலா.
  • இலவங்கப்பட்டை நீரை உட்கொள்ளும் சரியான முறை.
மூளை முதல் இதயம் வரை... வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை நீர் செய்யும் மேஜிக்

சமையலுக்கு சுவையும் மணமும் சேர்க்க, உணவில் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான மசாலாக்களில் ஒன்றுதான் இலவங்கப்பட்டை. தென்னிந்திய மற்றும் மேற்கிந்திய பகுதிகளில் அதிகம் விளையும் இலவங்கப்பட்டை ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. இலவங்கப்பட்டை மசாலாவின் ஆரோக்கிய நலன்கள் மற்றும் மருத்துவ பண்புகள் பற்றி ஆயுர்வேதத்தில்  குறிப்பிடப்பட்டுள்ளன. இலவங்கப்பட்டை தினமும் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

Add Zee News as a Preferred Source

சாதாரண சளி காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் முதல், மூளை, இதய நோய்கள் வரை பல நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது இலவங்கபட்டை. கொழுப்பை எரிக்கும்  ஆற்றல் கொண்ட இலவங்க பட்டை, உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. இலவங்கப்பட்டை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்களை பற்றி இந்த கட்டுரையில் அறிந்து கொள்ளலாம்

உங்கள் சமையலறையில் இருக்கும் இலவங்கப்பட்டை, உணவிற்கு சுவையும் மணமும் சேர்க்கும் ஒரு மசாலா மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் அற்புத மருந்து. இலவங்கப்பட்டையை தண்ணீரில் கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், பல உடல்நல பிரச்சனைகள் குணமாகும். இது உங்கள் ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், எடையைக் குறைக்கவும் உதவுகிறது. 

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் ஒழுங்கற்ற உணவுப் பழக்கவழக்கங்களால், பெரும்பாலான மக்கள் இரத்த சர்க்கரை, உடல் பருமன் மற்றும் செரிமான பிரச்சனைகளால் சிரமப்படுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், தினமும் காலையில் இலவங்கப்பட்டை தண்ணீரைக் குடிப்பதால், உங்கள் உடல் உள்ளிருந்து வலுப்படுகிறது மற்றும் உங்களை உற்சாகமாக உணர வைக்கிறது. இதன் அளப்பரிய நன்மைகளைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.

காலையில் வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மசாலா

உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மூளை ஆரோக்கியத்திற்கும் இலவங்கப்பட்டை பெரிதும் உதவும். ஏனெனில் இதில் நினைவாற்றலை மேம்படுத்தும் திறன் உண்டு. அதோடு மன அழுத்தம், கவலை, பதற்றம் ஆகியவற்றையும் போக்கி மனதை அமைதிப்படுத்தும் மருத்துவ குணம் இதில் உண்டு.

ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும் உணவு

இன்றைய பிஸியான வாழ்க்கையில், ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனை மிகவும் பொதுவானதாகிவிட்டது. குறிப்பாக பெண்களிடையே பிசிஓடி, தைராய்டு மற்றும் மாதவிடாய் ஒழுங்கற்ற பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. இலவங்கப்பட்டை நீர் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தி, இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்கிறது.

சர்க்கரை நோய்க்கு அருமருந்தாகும் மசாலா

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, இரத்த சர்க்கரை அளவை இயற்கையாகவே கட்டுக்குள் வைக்க, இலவங்கப்பட்டை நீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள பயோஆக்டிவ் கலவைகள் இரத்த சர்க்கரையை சீராக வைத்து இன்சுலின் செயல்திறனை மேம்படுத்துகிறது. இதை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், டைப்-2 நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த பலன் கிடைக்கும்.

உடல் கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்ட உணவு

உடல் எடை அதிக உள்ளவர்களுக்கு, இலவங்கப்பட்டை தண்ணீர் ஒரு அருமர்நுதாக இருக்கும். இது வளர்சிதை மாற்றத்தை தூண்டி, உடல் கலோரிகளை விரைவாக எரிக்க அனுமதிக்கிறது. இது தவிர, இது பசியையும் கட்டுப்படுத்துகிறது, இதனால் அடிக்கடி சாப்பிடும் நிலையை தவிர்த்து, கலோரிகளை பெரிதும் குறைக்கலாம்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி மாரடைப்பு அபாயத்தை குறைக்கும் மசாலா

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் திறன் லவங்கப்பட்டைக்கு உண்டு. இதன் மூலம் உடலில் சேரும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கலாம். இதய தமனிகளில் சேரும் கொழுப்பை எரித்து, மாரடைப்பு பக்கவாதம் போன்ற அபாயத்தை இது தடுக்கிறது

செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் மசாலா

அடிக்கடி வாயு, மலச்சிக்கல் அல்லது அமிலத்தன்மை பிரச்சனையை சந்திப்பவர்கள், இலவங்கப்பட்டை நீர்  எடுத்துக் கொள்வதால், செரிமானம் சீராகும். இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வயிற்று பிரச்சனைகளை நீக்கி செரிமானத்தை மேம்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அற்புத உணவு

தற்போது மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற காரணங்களால் சளி, தொற்று நோய்கள் ஏற்படுவது சகஜம். இலவங்கப்பட்டை நீரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது உடலை உள்ளே இருந்து பலப்படுத்துகிறது மற்றும் நோய்களிலிருந்து பாதுகாப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.

இலவங்கப்பட்டை நீரை  உட்கொள்ளும் சரியான முறை

ஒரு கிளாஸ் தண்ணீரில் அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் அல்லது ஒரு சிறிய துண்டு இலவங்கப்பட்டை சேர்க்கவும். குறைந்த தீயில் 5-10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும், வடிகட்டி குடிக்கவும். சிறந்த பலன்களை பெற, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | பெண்களே உஷார்.. தோள்பட்டையில் ஓவர் வலியா? அப்போ ஹார்ட் அட்டாக் ஆ இருக்கலாம்

மேலும் படிக்க | தினம் வெறும் வயிற்றில் 4 - 5 துளசி இலைகள் போதும்... உச்சி முதல் பாதம் வரை அருமருந்து

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News