நோயற்ற வாழ்வுக்கு... காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் ஊற வைத்த வெந்தயம்

வெந்தயத்தை சரியான அளவிலும், சரியான முறையிலும் தொடர்ந்து எடுத்துக் கொண்டால், பல உடல்நல பிரச்சனைகளை சமாளிக்கலாம். மருத்துவ குணங்கள் நிறைந்த வெந்தய விதைகளின் சில அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 26, 2025, 05:13 PM IST
  • இன்சுலின் சுரப்பை தூண்டும் ஆற்றல் கொண்ட உணவு.
  • வெந்தயத்தை உட்கொள்ளும் சரியான முறை.
  • மருத்துவ குணங்கள் நிறைந்த வெந்தயம்
நோயற்ற வாழ்வுக்கு... காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் ஊற வைத்த வெந்தயம்

ஆயுர்வேதத்தில் வெந்தயத்திற்கு முக்கிய இடம் உண்டு. இதில் நிறைந்துள்ள எண்ணற்ற மருத்துவ பண்புகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் பல நோய்களுக்கு மருந்தாக அமைகிறது. புரதம், நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் வெந்தயத்தில் காணப்படுகின்றன. 

Add Zee News as a Preferred Source

வெந்தயத்தை சரியான அளவிலும், சரியான முறையிலும் தொடர்ந்து எடுத்துக் கொண்டால், பல உடல்நல பிரச்சனைகளை சமாளிக்கலாம். மருத்துவ குணங்கள் நிறைந்த வெந்தய விதைகளின் சில அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

வெந்தயத்தை உட்கொள்ளும் சரியான முறை

வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என ஆயிர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. உங்கள் உடலை வலுவாக வைத்திருக்க, ஊறவைத்த வெந்தயத்தை உட்கொள்ள வேண்டும். இரவில் தூங்கும் முன், ஒரு கிளாஸ் தண்ணீரில் 1 ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து,  ஊறவிடுங்கள். இப்போது மறுநாள் காலையில் வெந்தயத்தை தண்ணீருடன் சாப்பிடலாம்.

இன்சுலின் சுரப்பை தூண்டும் ஆற்றல் கொண்ட உணவு

வெந்தயத்தை முளை கட்டி சாப்பிடுவதால், நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம். வெந்தயம் உடலில் இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும் என்பதால், இதனை தினசரி சேர்த்துக் கொண்டால் நீரிழிவு நோயை சிறப்பாக கட்டுப்படுத்தலாம். 

கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த உதவும் உணவு

வெந்தயம் கொழுப்பை எரிக்கும் ஆற்றல் கொண்டது. தமனிகளில் சேரும் கெட்ட கொழுப்பையும் எரிக்கிறது. இது கெட்ட கொலஸ்ட்ராலை எரித்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, மாரடைப்பை அபாயத்தை பெருமளவு தடுக்கும். இதன் காரணமாக இதய ஆரோக்கியம் மேம்படும். இதய நோய் அபாயம் குறையும். 

குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் உணவு

வெந்தயத்தில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களும் உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட, வெந்தயத்தை தினமும் உங்கள் டயட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள். 

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் உணவு

உங்கள் எடை இழப்பு முயற்சியை எளிதாக்க உங்கள் உணவுத் திட்டத்தில் வெந்தயத்தை சேர்க்க வேண்டும். ஊறவைத்த வெந்தயத்தை உட்கொள்வதன் மூலம், உங்கள் உடலின் வளர்சிதை மாற்றம் என்னும் மெட்டபாலிஸம் அதிகரிக்கும். இதன் மூலம் உங்கள் எடை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தலாம். வெந்தயம் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, உங்கள் சருமம் மற்றும் உங்கள் கூந்தலையும் இளமையாக வைத்திருக்க உதவும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | மாதவிடாய்க்குப் பிறகு எந்த நாட்களில் கருத்தரிப்பு வாய்ப்பு அதிகம்? பாதுகாப்பான நாட்கள் எவை?

மேலும் படிக்க | ஏழைகளின் ஆப்பிள் என்னும் பேரிக்காய்... குறைத்து மதிப்பிடாதீங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News