3 ஆண்டுகளில் 56 கிலோ எடை குறைத்த பெண்.. அப்படி என்ன செய்தார்?

weight loss journey: பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர் 3 ஆண்டுகளில் சுமார் 56 கிலோ எடையை குறைத்தது கவனத்தை ஈர்த்துள்ளது. 

Written by - R Balaji | Last Updated : Apr 7, 2025, 04:54 PM IST
  • 3 ஆண்டுகளில் 56 கிலோ எடையை குறைத்த பெண்
  • பெங்களூரை சேர்ந்த ருத்வி ஷா இது குறித்தான பதிவை பதிவிட்டுள்ளார்
3 ஆண்டுகளில் 56 கிலோ எடை குறைத்த பெண்.. அப்படி என்ன செய்தார்?

பெங்களூரை சேர்ந்தவர் தொழிலதிபர் ருத்வி ஷா. இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் 126 கிலோ உடல் எடை இருந்துள்ளார். இந்த நிலையில், அவர் 3 ஆண்டுகளில் 56 கிலோ எடை குறைத்து தற்போது 70 கிலோவாக உள்ளார். இது எப்படி சாத்தியமானத் என்பதை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் இவர் பதிவிட்டுள்ளார். 

Add Zee News as a Preferred Source

அதில், 3.5 வருட நிலைத்தன்மை அதிசயங்களை செய்யும். நான் கடந்த 2021 அக்டோபரில் 126.5 கிலோவாக இருந்தேன். தற்போது 69.7 கிலோவாக இருக்கிறேன். இதன்படி நான் 56 கிலோக்கு அதிகமாக குறைத்துள்ளேன் என தெரிவித்தார். மேலும், தனது உடற்பயிற்சி முறையை நினைவு கூர்ந்த அவர், வலிமை பயிற்சி, பளு தூக்குதல் மற்றும் கார்டியோ ஆகியவற்றின் கவலையை கொண்ட ஒன்றைத் தேர்ந்தெடுத்ததாக வெளிப்படுத்தினார். 

அவரது பதிவு எக்ஸ் பக்கத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்றுள்ளது. அவரது இந்த கடுமையான உழைப்பிற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர், அருமை! உங்களுக்கு அதிக சக்தி கொழுப்பு அழகானது என நீங்கள் நம்பாமல், உங்கள் ஆரோக்கியத்தின் உச்சத்தை அடைய முயற்சிகளை எடுத்தது மிகவும் நல்லது. உங்களது இந்த முயற்சி லட்சக்கணக்கானோரை ஊக்குவிக்கும் என பதிவிட்டிருந்தார். 

மேலும் படிங்க: 56 கிலோ எடையை சாதாரணமாக குறைத்த பெண்.. அப்படி என்ன செய்தார்? 

உடற்பயிற்சி முறையில் எப்படி நிலையாக இருப்பது? 

உடல் எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சி முறை மட்டும் போதாது. அதோடு ஒழுக்கம், திட்டமிடல் மற்றும் உந்துதல் தேவை. நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள் என்பதை முதலில் வரையறுக்கவும். அதாவது எடை இழப்பு, தசை அதிகரிப்பு சகிப்புத்தன்மை போன்றவை. அதற்கான குறுகிய மற்றும் நீண்ட கால உடற்பயிற்சி இலக்குகளை அமைக்கவும். உடற்பயிற்சிகளுக்கான குறிப்பிட்ட நாட்கள் மற்றும் நேரங்களை தேர்ந்தெடுத்து அவற்றை கடைப்பிடிக்கவும். உடற்பயிற்சியை தவிர்க்க முடியாத ஒரு முக்கியமான சந்திப்பாக முதலில் நீங்கள் கருதுங்கள். 

உடற்பயிற்சியை ஊக்குவிக்க ஒரு நண்பருடன் சேர்ந்து செய்யுங்கள் அல்லது ஒரு பயிற்சியாளரை நியமிக்கவும். அதாவது உங்களை ஊக்குவிக்கக்கூடிய ஒருவருடன் உங்கள் இலக்குகளை பகிர்ந்து கொள்ளுங்கள். அதேபோல் உடற்பயிற்சி செய்யும்போது பாடல்களை கேளுங்கள். அது உங்களை ஊக்குவிக்கும். மேலும், உடற்பயிற்சியை உங்கள் பழக்கவழக்கங்களில் ஒன்றாக மாற்ற சில வாரங்கள் சீராக பின்பற்றுங்கள். அதை ஒரு வேலையாக கருதாமல், உங்கள் வாழ்க்கை முறையாக நினைத்துக்கொள்ளுங்கள். 

உணவுமுறைகளில் கவனம் தேவை

எடை குறைப்பு இலக்கை நியமிக்கும் முன் உடற்பயிற்சி அட்டவணை தயார் செய்யும் போது உங்கள் உணவின் அட்டவணையையும் தயார் செய்து கொள்ளவும். நல்ல புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். பேக்கிங் பொருட்களை தவிர்க்க வேண்டும். அதேபோல் வெளியில் சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு வீட்டில் சமைப்பதை சாப்பிடுங்கள். உடல் எடை குறைக்க உடற்பயிற்சி மட்டும் போதாது நல்ல உணவுமுறை அமைதியான மனநிலைமை ஆகியவையும் முக்கியம்.  

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் எம்மா ஹூக்கர் என்பவரின் தனிப்பட்ட அனுபவமாகும். இதனை பின்பற்றும் முன்னர் உரிய மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிங்க: ஜிம்மிற்கு போகாமல் 3 மாதத்தில் 19 கிலோ எடை குறைப்பு.. சாத்தியமானது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News