Superfoods for Diabetes Control: இன்றைய அவசர உலகில் மக்களை பாடாய் படுத்தும் வாழ்க்கை முறை நோய்களில் நீரிழிவு நோய் முக்கியமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக கோடை காலத்தில் நீரிழிவு நோயாளிகள் அதிக கவனத்துடன் இருப்பதே நல்லது. கோடையில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க சில குறிப்பிட்ட உணவுகள் உதவுகின்றன. இவை குளுக்கோஸ் அளவை நிர்வகிக்க உதவுவது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஆற்றல், நீரேற்றம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கவும் உதவுகின்றன.
உணவு நிபுணரும் சான்றளிக்கப்பட்ட நீரிழிவு கல்வியாளருமான டாக்டர் அர்ச்சனா பத்ரா, நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை அளிக்கும் சிறந்த ஏழு சூப்பர் உணவுகளைப் பற்றி கூறியுள்ளார். கோடை காலத்தில் இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் சில முக்கிய உணவு வகைகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Bitter Gourd: பாகற்காய்
பாகற்காயில் சரண்டின் மற்றும் பாலிபெட்டாய்ட் பி போன்ற ஊட்டச்சத்து சேர்மங்களின் இயற்கையான வளம் காணப்படுகிறது. இது இரத்த குளூக்கோஸ் அளவை குறைக்க உதவுவதால் இயற்கையான இன்சுலின் பூஸ்டர் என்றும் அழைக்கப்படுகின்றது.
Cucumber: வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் நிறைந்த ஒரு காயாகும். இது செரிமானத்தை மேம்படுத்தி சர்க்கரை அளவில் ஏற்படும் திடீர் அதிகரிப்பை தடுக்க உதவுகின்றது. இதில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளது. வெள்ளரிக்காயின் கிளைசெமிக் குறியீடு குறைவாக இருப்பதால் இது இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
Berries: பெர்ரி வகை பழங்கள்
பெர்ரி வகை பழங்களில் ஆண்டிஆக்சிடென்ட்கள், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிகமாக உள்ளன. இவை நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுவதோடு ஊட்டச்சத்தையும் அளிக்கின்றன. உடலுக்கு நீரேற்றும் அளிக்கவும் உடலை குளிர்விக்கவும் இவை உதவுகின்றன.
Bottle Gourd: சுரைக்காய்
சுரைக்காயின் கிளைசெமிக் குறியீடு மிகவும் குறைவு. இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும், உடல் எடையை குறைக்கவும் ஏற்ற காயாக இது பார்க்கப்படுகின்றது. கோடை காலத்தில் நச்சுக்களை நீக்கவும் இது உதவியாக இருக்கிறது.
Amla: நெல்லிக்காய்
நெல்லிக்காயில் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை ஆதரிக்கும் குரோமியம் உள்ளது. இதன் கிளைசெமிக் குறியீடு குறைவு. இதில் அதிக அளவு நார்ச்சத்தும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. நீரிழிவு நோயை கட்டுக்குள் வைப்பதுடன் இது வீக்கத்தை எதிர்த்து போராடவும் எடை மற்றும் கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது.
Spinach: கீரை வகைகள்
பாலக்கீரை, வெந்தயக்கீரை, கொத்தமல்லி போன்றவற்றில் கார்போஹைட்ரேட்கள் மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளன. இவை உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதோடு உடலுக்கு குளிர்ச்சியூட்டி, நீரேற்றத்தை வழங்கி, சர்க்கரை அளவையும் குறைக்கின்றன.
Fenugreek: வெந்தயம்
வெந்தயம் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ள மசாலாவாக பார்க்கப்படுகின்றது. வெந்தயத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. இரவு வெந்தயத்தை ஊற வைத்து காலையில் அதன் நீரை குடித்து வந்தால் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கலாம். மேலும் உணவு வகைகளில் வெந்தய பொடியை சேர்ப்பதும் ஆரோக்கியமானதாக கருதப்படுகின்றது.
நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க இந்த ஏழு சூப்பர் உணவுகள் உதவும் என்று டாக்டர் அர்ச்சனா பத்ரா கூறுகிறார். எனினும் இவற்றை மட்டுமே நம்பி இருக்க முடியாது என்றும் மருத்துவரின் கண்காணிப்பு, அவரது பரிந்துரையின் கீழ் அளிக்கப்படும் மருந்துகள், சமச்சீர் ஊட்டச்சத்து, உடற்பயிற்சி ஆகியவையும் முக்கியமாகும் என்றும் அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கல்லீரல் - சிறுநீரகம் இரண்டையும் டீடாக்ஸ் செய்யும்... ஆற்றல் கொண்ட சூப்பர் பழங்கள்
மேலும் படிக்க | Migraine: பாடாய் படுத்தும் ஒற்றைத் தலைவலி... காரணங்களும்... தீர்வைத் தரும் உணவுகளும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









