மந்தமான மூளையும் புத்துணர்ச்சி பெறும்... நினைவாற்றலை பெருக்கும் சில அற்புத மூலிகைகள்

உடலை கட்டுப்படுத்தும் மூளை, ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தால் தான், பிட்டாக இருக்க முடியும். மன அழுத்தம், முதுமை, ஊட்டச்சத்து குறைபாடு, உடல் நலக் கோளாறுகள் உள்ளிட்ட பல காரணங்களால், மூளை மற்றும் நரம்பியல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு.

Last Updated : Mar 22, 2025, 06:12 PM IST
  • நினைவகம் மற்றும் நரம்பியல் ஆரோக்கியத்தை வலுப்படுத்த உதவும் சில மூலிகைகள்.
  • மூளையின் செயல் திறனை மேம்படுத்தும் துளசி
  • மறதி பிரச்சினையை நீக்கும் ஆற்றல் கொண்ட மூலிகை.
மந்தமான மூளையும் புத்துணர்ச்சி பெறும்... நினைவாற்றலை பெருக்கும் சில அற்புத மூலிகைகள்

உடலை கட்டுப்படுத்தும் மூளை, ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தால் தான், பிட்டாக இருக்க முடியும். மன அழுத்தம், முதுமை, ஊட்டச்சத்து குறைபாடு, உடல் நலக் கோளாறுகள் உள்ளிட்ட பல காரணங்களால், மூளை மற்றும் நரம்பியல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் வாய்ப்பு உண்டு.

Add Zee News as a Preferred Source

நமது உடலுக்கு சோர்வு ஏற்படுவதைப் போல, மூளைக்கும் சோர்வு ஏற்படலாம். இதற்கு முன்னர் கூறியது போல, பதற்றம், எரிச்சல், கோபம், தனிமை உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கலாம். மந்தமான மூளையை சுறுசுறுப்பாக ஆக்க, சில ஆயுர்வேத மூலிகைகள் பெரிதும் உதவும் என்கின்றனர், மருத்துவர்கள். இவை மூளைக்கு புத்துணர்ச்சி அளித்து சுறுசுறுப்பாக உதவும். நினைவாற்றலை அதிகரிக்கவும் இந்த மூலிகைகள் உதவும்.

முதுமையில் அல்சைமர் போன்ற மூளை சார்ந்த நோய்கள் வராமல் இருக்கவும், மறதி நோய் பாதிக்கப்படாமல் இருக்கவும், நினைவகம் மற்றும் நரம்பியல் ஆரோக்கியத்தை (Health Tips) வலுப்படுத்த உதவும் சில மூலிகை வகைகளை அறிந்து கொள்ளலாம்.

துளசி

இந்து மதத்தில் துளசி தெய்வமாக வணங்கப்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. துளசியின் மகிமையை அறிந்து தான், நமது முன்னோர்கள் துளசிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என நினைக்கத் தோன்றுகிறது. துளசி மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மிகச்சிறந்த மூலிகை. நினைவாற்றலை பெருக்கி,  மூளையின் செயல் திறனை மேம்படுத்தும் துளசியை தினமும் உட்கொண்டால், மந்தமான மூளை கூட சுறுசுறுப்பாக வேலை செய்யும்.

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்தது. உணவிற்கு நறுமணத்தையும், சுவையையும் அள்ளிக் கொடுக்கும் இலவங்கப்பட்டை, நினைவாற்றலை மேம்படுத்தும் அற்புத மருந்து என்கின்றனர், ஆயுர்வேத நிபுணர்கள். 

அஸ்வகந்தா

அஸ்வகந்தா என்னும் அற்புத மூலிகையில், மூளைக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. இதனை சரியான அளவில், சரியா உட்கொண்டால், மூளையின் சக்தி பல மடங்கு அதிகரிக்கலாம். மன அழுத்தத்தை போக்கும் ஆற்றலும் இந்த மூலிகைக்கு உண்டு. நரம்புகளை தளர்த்தி, தூக்கமின்மை பிரச்சனையை நீக்கி, நிம்மதியான தூக்கத்தைப் பெற இந்த மூலிகை உதவுகிறது.

மஞ்சள்

மஞ்சளில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள குர்குமின் என்னும் கலவை, மூளை ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது. ஞாபக சக்தி அதிகரிக்க, மறதி நோய் ஆபத்தை பெருமளவு குறைக்க, மஞ்சள் பெரிதும் உதவும். இரவில் மிளகு மஞ்சள் சேர்த்த பால் அருந்துவது மிகவும் பலன் தரும். மஞ்சள் உடன் மிளகு சேரும் போது, அதன் ஆரோக்கிய நலன்களை முழுவதுமாக பெறலாம்.

பிராமி

பிராமி என்ற மூலிகை, மறதி பிரச்சினையை நீக்கும் ஆற்றல் கொண்டது. ஆயுர்வேதத்தில், மன அழுத்தத்திற்கான மருந்தாக பிராமி மூலிகை பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மன பதற்றத்தை போக்கி, அறிவாற்றலை பெருக்கும், இதற்கு இருப்பதால், மூளை ஆற்றலை மேம்படுத்தும் அற்புத மூலிகை இது எனலாம்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | Blood Sugar and Blood Pressure: வயதிற்கு ஏற்ப இந்த அளவுகள் எவ்வளவு இருக்க வேண்டும் தெரியுமா?

மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க... இந்த 4 'குறுக்கு வழிகள்' - ஆரோக்கியம் சிறக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News