)
இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோய் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறி வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இரத்த சர்க்கரை அளவைப் பற்றி சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லை என்றால், அது உடலின் பல பாகங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, நீங்கள் மருந்துடன் இயற்கையான முறையைப் பின்பற்ற விரும்பினால், இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவியாக இருக்கும்.
நமது பண்டைய மருத்துவ முறைகளான சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதத்தில் பலவிதமான கடுமையான நோய்களுக்கு கூட இயற்கை முறையில் தீர்வை அளிக்கிறது. பிரபல ஆயுர்வேத மருத்துவர் சலீம் ஜைதி தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், 3 பொருட்களை மட்டுமே கொண்டு தயாரிக்கப்படும் ஒரு பொடியைப் பற்றி அவர் கூறியுள்ளார். இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த மிகவும் உதவியாக இருக்கும். இந்த 3 பொருட்கள் என்ன என்பதையும், ஆயுர்வேத மருந்து பொடியை தயார் செய்யும் எளிய முறை பற்றியும், அந்த பொடி உங்களுக்கு எவ்வாறு நன்மை பயக்கும் (Health Tips) என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பொடி
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் ஆயுர்வேத மருந்து பொடியை தயாரிக்க, உங்களுக்கு நாவல் பழ விதைகள், பாகற்காய் விதைகள் மற்றும் சிறு குறிஞ்சான் இலை ஆகியவை தேவைப்படும்.
ஆயுர்வேத மருந்து பொடியை தயார் செய்யும் முறை
மேலே குறிப்பிட்டுள்ள மூன்று பொருட்களையும் சம அளவில் எடுத்து, நன்கு உலர்த்தி, பின்னர் அரைக்கவும். இதனை நன்றாக பொடி செய்து அதை காற்று புகாத கொள்கலனில் வைக்கவும். இதைச் செய்வதன் மூலம், உங்கள் பொடி இப்போது பயன்படுத்த தயாராக இருக்கும்.
ஆயுர்வேத மருந்து பொடியை உட்கொள்ளும் முறை
டாக்டர் ஜைதி இந்த பொடியை ஒரு நாளைக்கு இரண்டு முறை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கிறார். மதிய உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் ஒரு ஸ்பூன் பொடியையும், இரவு உணவிற்கு அரை மணி நேரத்திற்கு முன் ஒரு ஸ்பூன் பொடியையும் சிறிது வெதுவெதுப்பான தண்ணீருடன் எடுத்துக் கொள்ளுங்கள் என கூறுகிறார்
ஆயுர்வேத பொடியில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்
நாவல்பழ விதை
நாவல்பழ விதை நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது. இதன் விதையில் ஜாம்போலின் என்ற ஒரு தனிமம் உள்ளது. இது உடலில் இன்சுலினை சுரக்க செய்து, உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்க அனுமதிக்காது. அந்த வகையில் இந்த பொடி இயற்கையாகவே இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது.
பாகற்காய் விதைகள்
பாற்காய் நிச்சயமாக கசப்பானது தான். ஆனால், இரத்த சர்க்கரைக்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் சரண்டின் மற்றும் பாலிபெப்டைட்-பி என்ற தனிமங்கள் உள்ளன, அவை இன்சுலின் போல செயல்பட்டு இரத்த சர்க்கரையை குறைக்கின்றன.
சிறுகுறிஞ்சான் இலை
சிறுகுறிஞ்சான், என்பது ஒரு ஆயுர்வேத மருந்தாகும். இது சர்க்கரை கொல்லி என்றும் அழைக்கப்படுகிறது. இதன் சுவை இனிப்புகளுக்கான விருப்பத்தையும் குறைக்கிறது மற்றும் கணையத்தை ஆக்டிவேட் செய்து இயற்கையாகவே இன்சுலின் உற்பத்தி செய்யத் தூண்டுகிறது.
மேலே குறிப்பிட்டுள்ள முறையில், இந்தப் பொடியை உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும். டாக்டர் ஜைதி கூறுகையில், நீங்கள் இந்த மருந்தை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த பெரிதும் உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ