)
Breakfast For Cholesterol Control: இன்றைய அவசர உலகில் மக்களை பல வித நோய்கள் ஆட்கொள்கின்றன. இவற்றில் அதிக கொலஸ்ட்ரால் முக்கியமான ஒன்றாக உள்ளது. கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த மக்கள் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். எனினும், பல எளிய, இயற்கையான வழிகளிலும் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம். நமது தினசரி வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறையில் ஆரோக்கியமான விஷயங்களை சேர்ப்பது இதற்கு மிக அவசியம்.
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதில் நாம் உட்கொள்ளும் உணவிற்கு முக்கிய பங்கு உள்ளது. எந்த உணவுகள் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும், எந்த உணவுகள் இதை குறைக்கும் என்ற புரிதல் கண்டிப்பாக அனைவருக்கும் இருக்க வேண்டும். நாம் உண்ணும் உணவில் காலை உணவிற்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. ஆரோக்கியமான காலை உணவை உட்கொள்வது ஒரு சிறந்த பழக்கமாக பார்க்கப்படுகின்றது. இதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை நல்ல நிலையில் வைத்திருக்க முடியும்.
பலர் வேலை அவசரத்தில் காலை உணவைத் தவிர்க்கிறார்கள், இது சரியல்ல. காலையில் அலுவலகம் செல்வதற்கு முன் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். இதன் தாக்கம் கொலஸ்ட்ரால் அளவிலும் தெரியும். ஆரோக்கியமான காலை உணவு இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும். அதேசமயம் காலை உணவைத் தவிர்ப்பது லிப்போபுரோட்டீன் (LDL) ஐ அதிகரிக்கும். மேலும் இதனால் உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற கடுமையான நோய்களுக்கும் நாம் ஆளாக நேரிடலாம். கொழுப்பைக் குறைக்க உதவும் சில சிறந்த காலை உணவுகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஓட்ஸ் (Oats): ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து இருப்பதால், காலை உணவில் இதை சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். இது உங்கள் செரிமான அமைப்பில் எல்டிஎல் கொழுப்பை பிணைத்து, உங்கள் உடலில் இருந்து அதை அகற்ற உதவுகிறது. அதனுடன் நறுக்கிய ஆப்பிள், பேரிக்காய் அல்லது சில ராஸ்பெர்ரி அல்லது ஸ்ட்ராபெர்ரிகளைச் சேர்க்கலாம். இதைச் செய்வது நார்ச்சத்தை அதிகரிக்கும்.
ஆரஞ்சு (Orange): ஆரஞ்சு மிகவும் பொதுவான ஒரு பழம். அதன் சாறு வைட்டமின் சி நிறைந்த ஆதாரமாகக் கருதப்படுகிறது. இந்த பழத்தின் சுளைகளை அதன் மெல்லிய நார்களுடன் சாப்பிடுவது நல்லது. இதனால் உங்களுக்கு அதிக நார்ச்சத்து கிடைக்கும், கெட்ட கொழுப்பும் குறையும். ஆரஞ்சு பழத்தின் சாறும் அதிக நன்மைகளை அளிக்கும்.
ஸ்மோக்ட் சால்மன் (Smoked Salmon): சால்மன் மீன் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் வளமான மூலமாகும். இவை ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நல்ல கொழுப்பை அதிகரித்து இரத்தத்தில் உள்ள ட்ரைகிளிசரைடுகளின் எண்ணிக்கையைக் குறைக்கும். தக்காளி, கேப்பர்கள் மற்றும் எள் போன்ற பிற டாப்பிங்ஸுடன் ஸ்மோக்ட் சால்மனை காலை உணவாக உட்கொள்ளலாம். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
முட்டை வெள்ளைக்கரு (Egg White): ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவைத் தேடுக்க வேண்டுமானால், முட்டையின் வெள்ளைக்கருவை நிச்சயமாக உட்கொள்ளலாம். ஏனெனில் இது கொழுப்பை அதிகரிக்காமல் அதிக அளவு புரதச்சத்தையும் வழங்குகிறது. இது மாரடைப்பு அபாயத்தை பெருமளவில் குறைக்கிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ