இன்றைய மோசமான உணவு பழக்கம் காரணமாக கொலஸ்ட்ரால் பிரச்சனை இப்போது சகஜமாகிவிட்டது. கொலஸ்ட்ரால் என்பது கல்லீரலில் இருந்து வெளியேறும் மெழுகு போன்ற பொருள். எண்ணெயில் பொரித்த உணவுகள், முட்டை, இறைச்சி, அதிக கொழுப்புள்ள பால் அல்லது பால் பொருட்கள் ஆகியவற்றை அளவிற்கு அதிகமாக சாப்பிடும் போது, உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது. வெளி உணவுகளில் ஆரோக்கியமற்ற எண்ணெய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனை உட்கொள்வதால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது. அதேசமயம் பாமாயில் போன்ற எண்ணெய்களில் காணப்படும் நிறைவுற்ற கொழுப்பு உடலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும். எனவே, அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் உணவுக்கு எண்ணெயை மிகவும் கவனமாக தேர்வு செய்ய வேண்டும்.
கொலஸ்ட்ரால் உடல் செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால் அவை சரியான அளவில் இருப்பது முக்கியம். அதிகப்படியான எண்ணெய் உணவு, வெளி உணவு, குறைவான உடற்பயிற்சி மற்றும் மோசமான வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது. இதனால் நரம்புகளில் அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். அத்தகைய நிலை மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும்.
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும், நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும் உதவும் எண்ணெய் பயன்படுத்த வேண்டும். எனினும் அவையும் அளவிற்கு மிஞ்சாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, உணவில் பயன்படுத்தப்படும் எண்ணெயில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். உடலில் அதிகரித்த கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் ஆரோக்கியமான சமையல் எண்ணெய்கள் பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
நல்லலெண்ணெய்
எள் எண்ணெய் என்னும் நல்லலெண்ணெய் இதயத்திற்கு இதமானது சாப்பிடுவது நன்மை பயக்கும். நல்லெண்ணெயில் நிறைவுறாத கொழுப்புகள், பாலிஅன்சாச்சுரேட்டட் மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன. அவை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். 1 டீஸ்பூன் எள் எண்ணெயில் 5 கிராமுக்கு மேல் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு, 2 கிராம் நல்ல கொழுப்பு உள்ளது.
தேங்காய் எண்ணெய்
தென்னிந்தியாவில், சமையலுக்கு தேங்காய் எண்ணெய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெயில் சமைத்த உணவு இதயத்திற்கு இதமானது. கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் தேங்காய் எண்ணெய் நல்லது. தேங்காய் எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவு செரிமான அமைப்பையும், மூளை ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. கூடுதலாக, இது உணவின் சுவையையும் கூட்டுகிறது.
கடலை எண்ணெய்
கடலை எண்ணெய் மிகவும் நல்லது. இந்த எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்தலாம். கடலை எண்ணெய் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கவும், கெட்ட கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது. கடலை எண்ணெய் இதயத்திற்கும் நல்லது என்று கருதப்படுகிறது. வறுக்கவும் பயன்படுத்தலாம்.
கடுகு எண்ணெய்
வட இந்திய உணவுகளில் கடுகு எண்ணெய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கடுகு எண்ணெயில் ஆரோக்கியமான கொழுப்புகளான, மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. இவை இரண்டும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடியவை. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. கடுகு எண்ணெய் இதயத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெயில் இருப்பது நல்ல கொலஸ்ட்ரால். எனவே, ஆலிவ் எண்ணெய் ஆரோக்கியமான எண்ணெயாகக் கருதப்படுகிறது. இதில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. ஆலிவ் எண்ணெய் குறைந்த தீயில் சமைப்பதற்கு ஏற்றதாக கருதப்படுகிறது. சாலட் மற்றும் பாஸ்தா போன்றவற்றை டாப்பிங் செய்வதற்கு இதைப் பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க | மாரடைப்பு வராமல் தடுக்கும்... சில எளிய உடற்பயிற்சிகள்... கண்டிப்பா செய்யுங்க
சியா விதை எண்ணெய்
சியா விதை எண்ணெய் கூட இதயத்திற்கு நல்லது. இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. சியா விதை எண்ணெயை சால்ட் டிரஸ்ஸிங்கிற்கு பயன்படுத்தலாம்.
வெண்ணெய் எண்ணெய்
அவகேடோ எண்ணெய் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பின் நல்ல மூலமாகும். அவகேடோ எண்ணெய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. இந்த எண்ணெயை சாப்பிடுவது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. இது சாலட் ட்ரெஸ்ஸிங்கிற்கு பயன்படுத்தப்படலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | உடல் எடையைக் குறைக்க எதற்காக உணவை விட...கலோரிகளை குறைக்கச் சொல்கின்றனர் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ