மாரடைப்பு வராமல் தடுக்கும்... சில எளிய உடற்பயிற்சிகள்... கண்டிப்பா செய்யுங்க

How To Prevent Heart Attack: உடல் பயிற்சிகள், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, கட்டுப்படுத்தி, ரத்த அழுத்தத்தை சீராக்கி மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 8, 2025, 07:41 PM IST
  • நடைபயிற்சி உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
  • இதயத்தின் செயல் திறனை அதிகரிப்பதோடு, வளர்ச்சிதை மாற்றத்தையும் துரிதப்படுத்துகிறது.
  • எளிதான கார்டியோ வாஸ்குலர் உடற்பயிற்சி.
மாரடைப்பு வராமல் தடுக்கும்... சில எளிய உடற்பயிற்சிகள்... கண்டிப்பா செய்யுங்க

இன்றைய துரித கதியிலான வாழ்க்கை முறையில், முதியவர்களை விட, இளையவர்களை இதய நோய் அதிக அளவில் தாக்குகிறது. தினம் தினம், மாரடைப்பு காரணமாக இளைஞர்கள் உயிரிழக்கும் செய்திகளை நாம் செய்தித்தாள்கள் மூலமாகவும், நண்பர்கள் மூலமாகவும் கேட்கும் நிலை உள்ளது. இதனை தடுக்கும் வகையில், மாரடைப்பு வராமல் தடுக்க உதவும் சில உடற்பயிற்சிகள் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

Add Zee News as a Preferred Source

வேகமான நடைபயிற்சி (Brisk Walking)

பொதுவாகவே நடை பயிற்சி உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. அதிலும் பிரிஸ்க் வாக் எனப்படும் வேகமாக மேற்கொள்ளும் நடைப்பயிற்சி, அதிக அளவில் கொழுப்பை எரித்து கட்டுப்படுத்துகிறது. ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது. இது மிக எளிதான கார்டியோ வாஸ்குலர் உடற்பயிற்சி என்கின்றனர் நிபுணர்கள். வாரத்திற்கு ஐந்து முறையாவது 30 முதல் 45 நிமிடங்கள் வேகமாக நடைபயிற்சி மேற்கொள்வது, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

ஜாகிங் (Jogging)

ஜாகிங் எனப்படும் ஓடும் பயிற்சி, சிறந்த உடற்பயிற்சி. இது இதயத்தின் செயல் திறனை அதிகரிப்பதோடு, வளர்ச்சிதை மாற்றத்தையும் துரிதப்படுத்துகிறது. இதனால், உடல் பருமனும் குறையும். மிக அதிக அளவில் கொழுப்பை எரித்து, கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இது ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வாரத்திற்கு மூன்று முதல் நான்கு முறை வரை 20 முதல் 30 நிமிடங்கள் இந்த பயிற்சியை மேற்கொள்வது, மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க பெரிதும் உதவும்.

சைக்கிள் ஓட்டும் பயிற்சி (Cycling)

சைக்கிள் ஓட்டும் பயிற்சியில் இதயம் பலப்படுகிறது என்றும் இதய தசைகளுக்கான சிறந்த உடற்பயிற்சி இது என்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர். இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. வாரத்துக்கு இருமுறையாவது தினம் 30 நிமிடங்கள் இந்த பயிற்சியை மேற்கொள்வது, இதயத்தை வஜ்ரம் போல் வலுப்படுத்தும்.

யோகா மற்றும் பிராணாயாமம் (Yoga Exercises)

யோகா மற்றும் பிராணாயாமம் மன அழுத்தத்தை குறைக்கும் மிகச் சிறந்த பயிற்சி. இது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாது மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, மனச்சோர்வை நீக்கி உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியை கொடுக்கிறது. தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் வரை இதனை பயிற்சி செய்வதால், கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

மாரடைப்பை தவிர்ப்பதற்கான உணவு முறை (Healthy Diet To Prevent Heart Attack)

உடற்பயிற்சியுடன் சீரான உணவுப் பழக்கமும் இருதய ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது. பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், ஆரோக்கிய கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகள் ஆகியவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த தேவையான உணவுகள். அதோடு புகைபிடித்தல் மது அருந்துதல் போன்ற பழக்கத்தையும் தவிர்ப்பது அவசியம்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | வயிற்றுப் புண் முக்கிய அறிகுறிகள்..! சரி செய்வது எப்படி? முக்கிய தகவல்

மேலும் படிக்க | வெயிட் லாஸ் முதல் கொலஸ்ட்ரால் வரை... தினம் ஒரு கைப்பிடி முளைகட்டிய கொண்டைக்கடலை...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News