நீரிழிவு நோயை நிர்மூலமாக்கும்... சர்க்கரைக்கொல்லி என்னும் அற்புத மூலிகை...

Diabetes Control Herb: உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, மருந்துகள் சாப்பிடுவது அவசியம் என்றாலும், உணவு முறையின் மூலமும், எளிய வீட்டு வைத்தியத்தின் மூலமும் சிறப்பாக கட்டுப்படுத்தலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 15, 2025, 07:13 PM IST
  • நீரழிவு நோய்க்கான மூலிகை வைத்தியம்.
  • சிறுகுறிஞ்சான் என்னும் சர்க்கரை கொல்லி மூலிகை.
  • சிறுகுறிஞ்சான் மூலிகையின் பிற நன்மைகள்.
நீரிழிவு நோயை நிர்மூலமாக்கும்... சர்க்கரைக்கொல்லி என்னும் அற்புத மூலிகை...

இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, சர்க்கரை நோய் என்பது பொதுவான உடல்நல பிரச்சனையாக மாறிவிட்டது. இதற்கு ஆரோக்கியமற்ற உணவு பழக்கம், டென்ஷன் நிறைந்த வாழ்க்கை ஆகியவை முக்கிய காரணமாக உள்ளது. நீரழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம். இல்லையென்றால், சிறுநீரகம் கண், கணையம் உள்ளிட்ட உடல் உள்ளுறுப்புகள் பாதிக்கப்படும் அபாயம் உண்டு.

Add Zee News as a Preferred Source

நீரழிவு நோய்க்கான மூலிகை வைத்தியம்

உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, மருந்துகள் சாப்பிடுவது அவசியம் என்றாலும், உணவு முறையின் மூலமும், எளிய வீட்டு வைத்தியத்தின் மூலமும் சிறப்பாக கட்டுப்படுத்தலாம். இதனால் படிப்படியாக மருந்துகளின் அளவையும் குறைத்து விடலாம். அந்த வகையில், சிறுகுறிஞ்சான் அல்லது கோகிலம் என்ற மூலிகை, சர்க்கரை நோய்க்கு வரப்பிரசாதமாக உள்ளது. இது சர்க்கரைக்கொல்லி எனவும் அழைக்கப்படுகிறது. மருத்துவ குணம் நிறைந்த இந்த மூலிகை செடி, தென்னிந்தியா, மத்திய இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் வெப்ப மண்ட காடுகளில் இது அதிகம் காணப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்தில் (Health Tips) இது பயன்படுத்தப்படுகிறது என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நீரழிவு நோயின் டைப் 1 டைப் 2 ஆகிய இரண்டையும் குணப்படுத்தும்

சிறுகுறிஞ்சான் என்னும் சர்க்கரை கொல்லி மூலிகை, நீரிழிவு நோயின் இரண்டு வகைகளான டைப் 1 மற்றும் டைப் 2 இரண்டையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. கணையத்தில் உள்ள செல்களுக்கு புத்துயிர் கொடுத்து, இன்சுலின் சுரப்பை தூண்டுவதன் மூலம், ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. கசப்பு தன்மை கொண்ட சிறுகுறிஞ்சான் என்னும் சர்க்கரைக்கொல்லியில் உள்ள பிளவனாய்டுகள், நீரழிவு நோயை கட்டுப்படுத்துவதோடு மட்டுமின்றி உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை சரி செய்கிறது. இந்த மூலிகையின் இலைகளை காய வைத்து பொடி செய்து சூரணமாகவும் பயன்படுத்தலாம்.சிறுகுறிஞ்சான் இலை சிறிய அளவிலும், மிளகாய் இலையை போல கூர்மையான முனை கொண்டதாகவும் காணப்படும். ஆயுர்வேத கடைகளிலும், ஆன்லைன் தளங்களிலும் சிறுகுறிஞ்சான் அல்லது சர்க்கரைக்கொல்லி சூரணம் விற்கப்படுகிறது.

சிறுகுறிஞ்சான் மூலிகை பயன்படுத்துவதால் கிடைக்கும் பிற நன்மைகள்.

1. கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் திறன் கொண்டது.

2. சர்க்கரைக்கொல்லி கஷாயம் இருமலையும், காய்ச்சல் சளி பிரச்சனை கட்டுக்குள் கொண்டுவரும்.

3. நெஞ்சில் சேர்ந்திருக்கும் சளி கபத்தை வெளியேற்றி நுரையீரலை வலுப்படுத்தும் ஆற்றல் சர்க்கரை கொல்லிக்கு உண்டு.

4. சற்று மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வாக சர்க்கரைக்கொல்லி மூலிகை பயன்படுத்தலாம்.

5. நரம்புத் தளர்ச்சி பிரச்சனையை தீர்க்கவும் சிறுகுறிஞ்சான் இலையின் வேர்கள் உதவும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

மேலும் படிக்க | கொழுப்பு கரைய... தொப்பை காணாமல் போக... காலை முதல் இரவு வரை கடைபிடிக்க வேண்டிய பொன்னான விதிகள்

மேலும் படிக்க | மன அழுத்தம் முதல் உடல் சோர்வு வரை... தினம் இரவில் கிராம்பு சேர்த்த பால் அளிக்கும் நன்மைகள் பல

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News