Breakfast For Diabetes: நீரிழிவு நோயாளிகள் உணவில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும். இவர்கள் சமச்சீர் உணவை எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம். உணவுமுறை சரியாக இருந்தால், சாப்பிட்ட உடனேயே இரத்த சர்க்கரை அதிகரிக்கும் அபாயம் இருக்காது. நாளை சரியான உணவுமுறையுடன் தொடங்கினால், நாள் முழுதும் உற்சாகத்துடன் கழியும். நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களைப் பற்றி குறிப்பாக கவனம் செலுத்த வேண்டும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற காலை உணவுகள்
காலை உணவில் அதிக நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். காலை உணவில் புரதச்சத்தும் சரியான அளவில் இருக்க வேண்டும். மேலும் ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருக்கும் ஆரோக்கியமான கொழுப்புகளும் அதில் இருக்க வேண்டும். உணவில் சர்க்கரை இல்லாமல் இருக்க வேண்டும் அல்லது சர்க்கரை குறைவாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டியது அவசியம். நீரிழிவு நோயாளிகள் உட்கொள்ளக்கூடிய 5 சிறந்த காலை உணவுகள் பற்றி இங்கே காணலாம். இவை இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க அனுமதிக்காது, இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.
Best Breakfast For Diabetic Patients: நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற காலை உணவுகள்
ஓட்ஸ்
நீரிழிவு நோயாளிகள் ஓட்ஸ் சாப்பிட்டு தங்கள் காலைப் பொழுதைத் தொடங்கலாம். நீரிழிவு நோய்க்கு நன்மை பயக்கும் அதிக நார்ச்சத்துள்ள காலை உணவாக ஓட்ஸ் உள்ளது. ஓட்ஸை ப்ளூபெர்ரிகள், உலர் பழங்கள் மற்றும் விதைகளைளுடன் சேர்த்து சாப்பிடலாம். அல்லது உப்பு சேர்த்தும் இதை உட்கொள்ளலாம்.
முட்டைகள்
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற காலை உணவுகளில் முட்டை முக்கியமானது. புரதச்சத்து நிறைந்த முட்டைகள் காலை உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்ததாக இருக்கும். முட்டைகளில் உள்ள உயர்தர புரதம் இரத்த சர்க்கரை அளவை நிலைப்படுத்த உதவுகிறது. இதைச் சாப்பிடுவதன் மூலம் வயிறு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வுடன் இருக்கும். காலை உணவாக வேகவைத்த முட்டைகளை சாப்பிடலாம்.
தயிர் மற்றும் முளைத்த பயறு
நீரிழிவு நோயாளிகள் காலையில் முளைகட்டிய பயறு மற்றும் தயிர் சாப்பிடுவதும் நன்மை பயக்கும். இது அதிக புரதம் மற்றும் அதிக நார்ச்சத்து நிறைந்த காலை உணவாகும். இது ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருக்கிறது. முளைகளுடன் வெவ்வேறு காய்கறிகளைச் சேர்த்து சாலட் செய்து உட்கொள்ளலாம். அதனுடன் தயிரையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
ராகி தோசை
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த ராகி தோசையைச் செய்து சாப்பிடலாம். ராகியில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இது இரத்த சர்க்கரையை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். ராகியில் சிறிது அரிசி மாவு கலந்து தோசை தயாரிக்கலாம். தோசை மாவில் துருவிய இஞ்சியைச் சேர்த்து, சுவை நன்றாக இருக்க சிறிது கறிவேப்பிலையையும் சேர்க்கவும். ராகி தோசையை சாம்பார் அல்லது சட்னியுடன் சாப்பிடலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஒரே சமையல் எண்ணெய் பலமுறை பயன்படுத்துவாரா? இந்த ஆபத்து உங்களை நெருங்கிவிடும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









