40+ வயதாகிவிட்டதா... மூட்டு வலி பிரச்சனை வராமல் இருக்க உணவில் சேர்க்க வேண்டியவை

Preventing Joint Pain & Osteoporosis: வயது ஏற ஏற எலும்புகள் படிப்படியாக வலுவை இழந்து அடர்த்தியை இழக்கின்றன. இதனால் மூட்டு வலியும், ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் நோய் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 28, 2025, 12:57 PM IST
  • எலும்புகள் தேய்மானம் அடைவதால், கடுமையான மூட்டு வலி ஏற்படும்.
  • வாழ்நாள் முழுவதும் மூட்டு வலி பிரச்சனை ஏதும் இல்லாமல் இருக்க செய்ய வேண்டியவை.
  • பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளது.
40+ வயதாகிவிட்டதா... மூட்டு வலி பிரச்சனை வராமல் இருக்க உணவில் சேர்க்க வேண்டியவை

இன்றைய காலகட்டத்தில் முதியவர்கள் மட்டுமல்ல இளையவர்கள் கூட சந்திக்கும் முக்கிய உடல்நல பிரச்சனைகளில் ஒன்று, மூட்டு வலி. வயது ஏற ஏற எலும்புகள் படிப்படியாக வலுவை இழந்து அடர்த்தியை இழக்கின்றன. இதனால் ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) என்னும் எலும்பு மெலிதல் நோய் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது. எலும்புகள் ஆரோக்கியமாக இருந்தால், முழங்கால் வலி, மூட்டு வலி பிரச்சனை ஆகியவை ஏற்படாது.

Add Zee News as a Preferred Source

எலும்புகள் தேய்மானம் அடைவதால், கடுமையான மூட்டு வலி உண்டாவதோடு, எலும்பு முறிவுகள் ஏற்படும் ஆபத்தும் அதிகரிக்கிறது. எனவே, எலும்பின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது என்பது இன்றியமையாததாகிறது. அதனால் 40+ வயதாகும் போதே, எலும்பு ஆரோக்கியத்தின் (Health Tips) மீது கவனம் செலுத்த வேண்டும். இதனால், வாழ்நாள் முழுவதும் மூட்டு வலி பிரச்சனை ஏதும் இல்லாமல் இருக்கலாம். 

ஆண்களை விட பெண்களுக்கு எலும்பு இழப்பு விகிதங்கள் அதிகம் இருப்பதன் காரணமாக, பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு முறிவுகள்  ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ளது. குறிப்பாக மாதவிடாய் நின்ற பிறகு ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும் போது, உடலில் கால்ஷியம் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே, 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வலுவான எலும்புகளை பராமரிப்பது மிகவும் முக்கியம். கால்சியம் நிறைந்த உணவு எலும்பு ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் எலும்பின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க  உதவும்  5 உணவுகள்  அறிந்து கொள்ளலாம்.

பச்சை காய்கறிகள் (Green Vegetables)

கீரை வகைகள் உள்ளிட்ட பச்சை காய்கறிகள் கால்சியத்தின் சிறந்த மூலமாகும். கூடுதலாக, இவற்றில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே ஆகியவை நிறைந்துள்ளன. அவை எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் அவசியமான பிற ஊட்டச்சத்துக்கள். 

பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ் (Pulses & Beans)

பருப்பு வகைகள் மற்றும் பீன்ஸ் வகைகள் புரதம் மற்றும் நார்ச்சத்து மற்றும் கால்சியத்தின் நல்ல மூலமாகும். உளுந்தம்பருப்பு, துவரம் பருப்பு, கிட்னி பீன்ஸ் என்னும் ராஜ்மா மற்றும் கொண்டைக்கடலை போன்ற பருப்பு வகைகளை உங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளலாம். நீங்கள் அவற்றை சூப், கூட்டு, பொரியலாக சமைத்து சாப்பிடலாம். கொண்டைக்கடலை, பாசி பருப்பு போன்றவற்றை முளை கட்டி சாப்பிடுவது மிகவும் நல்லது.

எள்ளு (Sesame Seeds)

எள் விதைகளில், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் கே ஆகியவை நிறைந்துள்ளது, இது எலும்பு ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று உணவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். எள்ளை வழக்கமாக சேர்க்க எள்ளு பொடி, எள்ளு மிளகாய் பொடி, எள்ளுருண்டை ஆகியவை சிறந்த தேர்வாக இருக்கும்.

பால் மற்றும் பால் பொருட்கள் (Milk Products)

பால், தயிர், பாலாடைக்கட்டி மற்றும் மோர் ஆகியவை கால்சியத்தின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும். அவற்றில் வைட்டமின் டி நிறைந்துள்ளது, இது உடல் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. தினமும் உங்கள் உணவில் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு பால் பொருட்கள் சேர்க்க முயற்சி செய்யுங்கள்.

சோயாபீன்ஸ் (Soyabean)

சோயாபீன்ஸ்  புரதம் மற்றும் கால்சியம் இரண்டின் நல்ல மூலமாகும். எனவே, எலும்புகள் வலுவாக இருக்க, உங்கள் உணவில் டோஃபு அல்லது சோயா பாலை சேர்த்துக்கொள்ளலாம்.

வைட்டமின் டி (Vitamin D)

கால்சியம் சத்து உடலில் முழுமையாக உறிஞ்சப்பட வைட்டமின் டி சத்து அவசியம். இதனை சூரிய ஒளியில் இருந்து பெறலாம். தினமும் குறைந்தது ஒரு அரை மணி நேரமாவது சூரிய ஒளி உடலில் பட்டால் வைட்டமின் டி சத்து கிடைக்கும். உணவைப் பொறுத்தவரை, முட்டையின் மஞ்சள் கரு, வைட்டமின் டி செறிவூட்டப்பட்ட உணவுகள் மற்றும் சால்மன் மற்றும் கானாங்கெளுத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன் உணவுகளில் வைட்டமின் டி சத்து நிறைந்துள்ளது.

உடற்யிற்சி (Exercise)

ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்க, டயட்டுடன் உடற்பயிற்சியும் அவசியம். நடனம், ஜாகிங் மற்றும் நடைபயிற்சி போன்ற எலும்பு வளர்ச்சியை மேம்படுத்தி வலுவாக்கும். தினமும் இல்லை என்றாலும், வாரத்தின் 5 நாட்களாவது குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் உங்களால் முடிந்த உடற்பயிற்சியில் ஈடுபட முயற்சிக்கவும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | சீரகம் முதல் ஏலக்காய் வரை... நலம் தரும் மசாலாக்களின் மருத்துவ பண்புகள்

மேலும் படிக்க | கை, கால்களில் தெரியும் இந்த புற்றுநோய் அறிகுறிகள்; புறக்கணிப்பது ஆபத்தானது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News