LDL கொலஸ்ட்ராலை எரித்து... மாரடைப்பை தடுக்க... டயட்டில் அடிக்கடி சேர்க்க வேண்டியவை

Foods To Prevent Heart Attack: மாரடைப்பினால் முதுமையில் இருப்பவர்களை விட, இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க உதவும் உணவு வகைகளை பற்றி இந்தப் பதிவில் அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 19, 2025, 01:45 PM IST
  • பழங்கள் அனைத்துமே ஊட்டச்சத்துக்கள் அள்ளிக் கொடுக்கும் அற்புத உணவுகள்.
  • LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ரால் மாரடைப்பு ஏற்படுவதற்கான மிக முக்கிய காரணம்.
  • கொலஸ்ட்ரால் அளவிற்கு அதிகமாகும் போது, இதய தமனிகளில் அடைப்பை ஏற்படுத்துகிறது.
LDL கொலஸ்ட்ராலை எரித்து... மாரடைப்பை தடுக்க... டயட்டில் அடிக்கடி சேர்க்க வேண்டியவை

இன்றைய காலகட்டத்தில், மாரடைப்பு என்பது, முதியவர்களை விட, இளையவர்களை தான் அதிகம் பாதிக்கிறது. தினம் தோறும், மாரடைப்பினால் இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது, கவலைக்குரிய விஷயம். அதிலும் குழந்தைகள் கூட மாரடைப்பினால் இரக்கம் செய்தியை நாம் அடிக்கடி கேட்கிறோம். இதற்கு மோசமான உணவு பழக்கம் முக்கிய காரணமாக உள்ள நிலையில், மாரடைப்பு வராமல் தடுக்க உதவும் சில உணவுகளை பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

மாரடைப்பு ஏற்படுவதற்கான மிக முக்கிய காரணம், உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பது தான். கொலஸ்ட்ரால் ஓரளவுக்கு உடலுக்கு தேவை என்றாலும், அது அளவிற்கு அதிகமாகும் போது, இதய தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தி, இதயத்திற்கான ரத்த ஓட்டத்தை பாதித்து, மாரடைப்பை உண்டாக்குகிறது. கொலஸ்ட்ராலில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று உடலுக்கு தேவையான HDL என்னும் நல்ல கொலஸ்ட்ரால். மற்றொன்று இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும், LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ரால்.

நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதன் மூலம் இதயத்தை ஆரோக்கியமாக (Health Tips) வைத்துக் கொள்ளலாம். இதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை தினமும் அல்லது அடிக்கடி டயட்டில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

முழு தானியங்கள்

ஆரோக்கிய நன்மைகள் பல கொண்ட முழு தானியங்களில், நார்ச்சத்து மட்டும் அல்லாது, வைட்டமின் பி உள்ளிட்ட பிற வைட்டமின்கள், அத்தியாவசிய தாதுக்கள் ஆகியவை அடங்கியுள்ளன. இவை கெட்ட கொலஸ்ட்ராலை எரித்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. எனவே காலையில், மைதாவினால் ஆன பிரட் பாஸ்தா போன்றவற்றை சாப்பிடாமல், முழு தானிய உணவுகளை சாப்பிட ஆரம்பிப்பது நல்லது.

ஃப்ரெஷ் பழங்கள்

பழங்கள் அனைத்துமே ஊட்டச்சத்துக்கள் அள்ளிக் கொடுக்கும் அற்புத உணவுகள். பொதுவாக அனைத்து பழங்களிலும், அந்தோசையனின் எனப்படும் ஆக்ஸிஜனேற்றம் நிறைந்திருக்கும். இது உடல் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது. இதய நோய் ஏற்பட இந்த இரண்டும் மிக முக்கிய காரணிகள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பழங்களில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி, எல்டிஎல் என்னும் கெட்ட கொழுப்பை எரிக்க முக்கிய பங்கு வகிக்கிறது. பழங்களின் ஆரோக்கிய நலனை முழுமையாக பெற அவற்றை ஜூஸாக அல்லாமல், முழுமையாக சாப்பிட வேண்டும்.

நட்ஸ் மற்றும் விதைகள்

பாதாம் பருப்பு, வாதுமை பருப்பு உள்ளிட்ட நட்ஸ் வகைகள் மற்றும் பூசணி விதைகள், சியா விதைகள் உள்ளிட்ட விதை வகைகள் அனைத்துமே நார்ச்சத்து மற்றும் நிறைவுறா கொழுப்பு நிறைந்தவை.. இவை இரண்டும் HDL என்னும் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து LDL என்னும் கெட்ட கொலஸ்ட்ராலை எரிக்க உதவுகிறது. அதேபோன்று நல்லெண்ணெய் தேங்காய் எண்ணெய் ஆலிவ் எண்ணெய் போன்ற எண்ணெய் வகைகள், இதயத்திற்கு உகந்த மோனோஸசேச்சுரேடட் கொழுப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளை வழங்குகிறது. மேலும் இவை அனைத்தும் உடல் பருமனை குறைக்கவும் உதவுகின்றன.

பச்சை இலை காய்கறிகள்

காய்கறிகளில் உள்ள வைட்டமின்கள் தாதுக்கள் மற்றும் நைட்ரேட்டுகள், இதய தமனிகளின் செயல்பாட்டை மேம்படுத்தி ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. அதேபோன்று பச்சை நிற காய்கறிகளும் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள் கனிம சத்துக்கள் ஆகிய அனைத்தையும் அள்ளி வழங்குகின்றன.

மீன் உணவுகள்

மீன் உணவுகள் அதிலும் கடல் மீன்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த ஆதாரங்களாக கருதப்படுகின்றன. இவை கொலஸ்ட்ரால் மட்டுமல்லாது, மாலடைப்பை ஏற்படுத்தும் அளவையும் குறைக்க உதவுகின்றன. மீன் உணவுகளை அடிக்கடி உட்கொள்வது, உடல் வீக்கத்தை குறைத்து, ஒழுங்கற்ற இதய துடிப்பை சீர் செய்து, மாரடைப்பை தடுக்க பெரிதும் உதவுகிறது.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | வெயிட் லாஸ் முதல் வலுவான தசை வரை... புரதச்சத்தை அள்ளி வழங்கும் சூப்பர் சைவ உணவுகள்

மேலும் படிக்க | குழந்தைகள் கண்ணாடி போடுவதை தவிர்க்க..இன்றே ‘இந்த’ பழங்களை சாப்பிட வையுங்கள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News