)
மாரடைப்பு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில், இதய ஆரோக்கியத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்பதை மறுக்க இயலாது. இதற்கு ஆரோக்கியமான வாழ்க்கையை கடைபிடிப்பதோடு, சிறந்த டயட் தேர்வும் அவசியம்.
முதியவர்களை விட இளையவர்கள் அதிக அளவில் இதய நோயால் பாதிக்கப்படும் நிலையில், மாரடைப்பை தடுக்கவும், கொலஸ்ட்ராலை எரிக்கவும், இதயத்தை வலுவாக வைத்திருக்கவும், உணவு முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். ஏனெனில் நமது ஆரோக்கியத்திற்கும், உணவு பழக்கத்திற்கும் நேரடி தொடர்பு உள்ளது என்பதை மறுக்க இயலாது.
சிறுதானியங்கள்
உணவில் செய்ய வேண்டிய முக்கிய மாற்றம், அரிசி கோதுமை பதிலாக சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வது. அதற்காக முற்றிலும் அரிசி கோதுமையை தவிர்க்க வேண்டும் என்பது அல்ல. அரிசி கோதுமையின் அளவை குறைத்துக் கொண்டு சிறு தானியங்களை உட்கொள்வதாகும். இதற்கு ராகி கம்பு, குதிரைவாலி, சாமை வரகு போன்ற சிறந்த சிறுதானியங்களில் தயாரிக்கப்பட்ட இட்லி பொங்கல் தோசை, கஞ்சி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் நிறைந்திருக்கும் புரதம் நார்ச்சத்து, வைட்டமின்கள் மினரல்கள் ஆகியவை, கொலஸ்ட்ராலை எரித்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். முக்கியமாக மைதாவை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
புரதம் நிறைந்த உணவுகள்
உடல் வளர்ச்சிக்கு ஆரோக்கியத்திற்கும் புரதம் மிக அவசியம். கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ராலை எரிப்பதில் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. புரத உணவை உட்கொள்ள, கொத்துக்கடலை, பீன்ஸ் வகை பருப்புகளான ராஜ்மா காராமணி போன்றவை, சோயா உணவுகள், சிக்கன், மீன் உணவுகள் முட்டை, தயிர் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நட்ஸ் மற்றும் விதைகள்
இதயம் ஆரோக்கியமாக இருக்க, நட்ஸ் மற்றும் விதைகள் மிகவும் உதவும். பாதாம் பருப்பு, வாதுமை பருப்பு, வேர்க்கடலை உள்ளிட்ட நட்ஸ் வகைகளும், சியா விதைகள் ஆளி விதைகள், பூசணி விதைகள் உள்ளிட்ட விதைகளும், இதை ஆரோக்கியத்திற்கு தேவையான ஹச் டி எல் என்னும் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. இதனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து பெருமளவு குறைகிறது.
இதயத்திற்கு இதமான சில எண்ணெய்கள்
எண்ணெய் சத்தும் உடலுக்கு அவசியம்தான். சில சமையல் எண்ணைகள் உடலில் ஆரோக்கிய கொழுப்புகளை அதிகரித்து, இதயம் மற்றும் எலும்புகள் உறுதியாக இருக்க உதவுகின்றன. இதில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், சுத்தமான பசு நெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவை அடங்கும். எனினும் இதனை அளவோடு உட்கொள்ள வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வாழ்க்கை முறை மாற்றங்கள், ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்கள், தவறாமல் செய்யும் உடற்பயிற்சி ஆகியவை, மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க உதவும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ