)
நீரிழிவு நோயாளிகள், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, டயட் தேர்வில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. ஏனென்றால் உணவு முறையால் தான் இரத்த சர்க்கரை அளவை சிறப்பாக நிர்வகிக்க முடியும். இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லை என்றால், இதயம், சிறுநீரகம் கண்கள் உள்ளிட்ட உடல் உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, தீவிர உடல் நல பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
நீரழிவு நோய் அல்லது சர்க்கரை நோய் என்பது, உடலில் இன்சுலின் சுரப்பு குறைவதாலோ, அல்லது உடல் இன்சுலின் சுரப்பை சரியாக பயன்படுத்த முடியாமல் போவதாலோ ஏற்படும் வளர்ச்சிதை மாற்ற உடல்நல பிரச்சனை. இதனை குணப்படுத்த முடியாது என்றாலும், உணவின் மூலம் சிறப்பாக கட்டுப்படுத்தலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு வகைகள் குறித்து, ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் (Health Tips), தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் இரவு உணவு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று, விளக்கியுள்ளார்.
நீரழிவு நோயாளிகளுக்கு இரவு உணவு திட்டம்
இரவு உணவில் தவறாமல் இடம்பெற வேண்டிய சாலட்
இரவு உணவை சாலடுடன் தொடங்குவது, நீரழிவு நோயால் களுக்கான சிறந்த உணவு பழக்கமாக இருக்கும் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்கு வெள்ளரி கேரட் வெங்காயம் ஆகியவை சிறந்த தேர்வாக இருக்கும்.
புரதச்சத்து நிறைந்த உணவுகள்
டயட்டில் புரதச்சத்து நிறைந்த உணவுகள் அதிக அளவில் இருக்க வேண்டும். குறைவான விலை ஜெமி குறியீடு உள்ள உணவுகள் தவறாமல் இடம்பெற வேண்டும். இதற்கு உணவில் பருப்பு, பன்னீர், சிறுதானிய உணவு ஆகியவை இருக்க வேண்டும். சாதம் மற்றும் கோதுமையின் அளவை குறைத்துக் கொண்டு, சிறு தானியங்களை அதற்கு பதிலாக சேர்ப்பது மிகவும் பலன் தரும்.
ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக விளங்கும் பச்சை காய்கறிகள்
இரவு உணவில் பச்சை காய்கறிகள் தவறாமல் இடம் பெற வேண்டும். உனக்கு பிடித்த ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம். புரோக்கொலி பீன்ஸ், வெண்டைக்காய், என எதுவாக இருந்தாலும், சாதம் மற்றும் கோதுமை உணவை குறைத்துக் கொண்டு, காய்கறிகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதோடு, சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்கு மிகவும் தேவையான நார்ச்சத்தும் கிடைக்கிறது.
உணவிற்குப் பின் குடிக்க வேண்டிய ஆரோக்கிய பானம்
உணவு உண்ட பின் படுக்கைக்கு செல்வதற்கு முன், சீரக நீர் அருந்துவது செரிமானத்தை மேம்படுத்தி, இரத்த சர்க்கரை அளவை பெருமளவு குறைக்க உதவும். சீரகத்தை வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு, அதனை வெந்நீரில் கலந்து குடிப்பது சிறந்த பழக்கமாக இருக்கும். இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க, செரிமானம் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம்.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் உடற்பயிற்சிகள்
தினமும் குறைந்தது அரை மணி நேர நடை பயிற்சி அல்லது உடற்பயிற்சி, சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அதோடு உணவு உண்ட பின், சிறிது தூரம் நடப்பது, செரிமானத்தை மேம்படுத்தி இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ