கோடையில் நோய்கள் வராமல் தடுக்க, வெப்பத்தை ஜெயிக்க இந்த 3 பானங்கள் உதவும்

Summer Health Tips: கோடை காலத்திற்கு குடிப்பதற்கு உகந்த, உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பானங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த பானங்களை குடிப்பதால் கோடைக்கால நோய்களைத் தடுக்கலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 30, 2025, 04:52 PM IST
  • கோடையில் நீர் மோர் உட்கொள்ளலாம்.
  • மோரில் புரோபயாடிக்குகள் நிறைந்துள்ளன.
  • நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்த தயிர் சாப்பிடுவது குடல் ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருக்கும்.
கோடையில் நோய்கள் வராமல் தடுக்க, வெப்பத்தை ஜெயிக்க இந்த 3 பானங்கள் உதவும்

Summer Health Tips: நாடு முழுவதும் இப்போது வெப்பம் அதிகமாகி வருகின்றது. சில பகுதிகளில் வெப்பநிலை 40 டிகிரியை எட்டியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், அஜீரணம், வயிற்றுப்போக்கு மற்றும் அமிலத்தன்மை போன்ற கோடைகால நோய்களின் ஆபத்து கணிசமாக அதிகரிக்கிறது. கோடையில் பித்த தோஷம் அதிகரிக்கிறது. இது நோய்களுக்கு மற்றொரு காரணமாகும். பித்தக் கோளாறு அதிகரிப்பதால், தோல் வெடிப்புகளும் ஏற்படுகின்றன. 

Add Zee News as a Preferred Source

இருப்பினும், இந்த பருவத்தில் மக்கள் பேக் செய்யப்பட்ட ஜூஸ்கள், குளிர் பானங்கள் மற்றும் ஸ்மூத்திகள் போன்றவற்றை அதிகம் குடிக்க விரும்புகிறார்கள். அவை நல்ல சுவை கொண்டவையாக இருந்தாலும், ஆரோக்கியத்திற்கு நல்லவை அல்ல. இந்த பானங்கள் அனைத்திலும் அதிக அளவு சர்க்கரை உள்ளது. கோடையில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை நம் உடலுக்கு இன்னும் அதிக தீங்கு விளைவிக்கிறது. கோடை காலத்திற்கு குடிப்பதற்கு உகந்த, உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பானங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த பானங்களை குடிப்பதால் கோடைக்கால நோய்களைத் தடுக்கலாம்.

1. டிடாக்ஸ் நீர்

கோடையில் வெப்பநிலை அதிகரிக்கும் போது, ​​சில நோய்களின் அபாயமும் அதிகரிக்கிறது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், கோடை நாட்களில் நாம் தினமும் நச்சு நீக்கும் தண்ணீரைக் குடிக்க வேண்டும். இதைச் செய்ய, நீங்கள் 1 மண் பானை எடுத்துக்கொள்ளவும். அதில் வெள்ளரிக்காய், பீட்ரூட், புதினா மற்றும் எலுமிச்சையுடன் சுத்தமான தண்ணீரைச் சேர்க்கலாம். நீங்கள் விரும்பினால், தர்பூசணி போன்ற பருவகால பழங்களையும் பயன்படுத்தலாம். இந்த தண்ணீரை இரவு முழுவதும் அல்லது 4-5 மணி நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும். இந்த பானத்தை பகலில் தண்ணீருக்கு பதிலாக இடைவிடாமல் குடிக்கவும். இது உடலை உள்ளிருந்து சுத்தமாக வைத்திருக்கும். மேலும் இதை குடிப்பதால் நீங்கள் குறைவான வெப்பத்தை உணர்வீர்கள்.

2. பீட்ரூட் மற்றும் மோர்

கோடையில் தயிரில் இருந்து தயாரிக்கப்பட்ட நீர் மோரையும் நாம் உட்கொள்ளலாம். மோரில் புரோபயாடிக்குகள் நிறைந்துள்ளன. நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்த தயிர் சாப்பிடுவது குடல் ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருக்கும். இதை தயாரிக்க, 2 தேக்கரண்டி தயிர், பாதி பீட்ரூட் மற்றும் கருப்பு உப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் போட்டு அரைத்து பானம் தயாரிக்கவும். நீங்கள் விரும்பினால், அதனுடன் லேசாக வறுத்த சீரகப் பொடியையும் சேர்க்கலாம். இந்த பானத்தை குடிப்பதால் கோடை காலத்தில் மோசமடையும் செரிமான சக்தி அதிகரிக்கிறது. எலும்புகள் மற்றும் தசைகள் பலமடைகின்றன. பீட்ரூட் உடலில் உள்ள இரத்தக் குறைபாட்டை நீக்குகிறது. இதனால் சருமம் சுத்தமாகிறது, நோய் எதிர்ப்பு சக்தியும் வலுவடைகிறது.

3 இளநீர்

இளநீர் உடலை நீரேற்றமாக வைத்திருக்கிறது. இது மட்டுமின்றி, இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது. மேலும், இளநீரை தினமும் குடித்து வந்தால் எடை இழப்புக்கும் அது உதவும். இளநீர் குடிப்பது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இது இரத்த அழுத்தத்தையும் சீராக்குகிறது. உடலில் பலவீனம் இருந்தால் இளநீரை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். இது உடலுக்கு புத்ய்துணர்ச்சி அளிக்கின்றது. அதில் பல ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், உடல் தொடர்பான பலவீனத்தை உடனடியாக நீக்குவதில் இளநீர் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பொது இடங்களில் ஏப்பம் வந்தால்? தயங்க வேண்டாம்..உடனே இந்த தீர்வை முயற்சிக்கவும்!

மேலும் படிக்க | சுகர் லெவலை சுலபமா குறைக்க இந்த 5 பழக்கங்கள் உதவும்: ட்ரை பண்ணி பாருங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News