)
Weight Loss Tips: உடல் பருமன் என்பது இந்த காலத்தில் பலரிடம் காணப்படும் ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. இன்றைய அவசர உலகில் உள்ள ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக உடல் எடை மிக வேகமாக அதிகரித்து விடுகின்றது. ஆனால் இதை குறைப்பது மிக கடினமான ஒரு பணியாக இருக்கின்றது.
Belly Fat Reduction Tips
குறிப்பாக தொப்பை கொழுப்பு அதிகரிக்கத் தொடங்கினால், அதை மீண்டும் குறைப்பது பிரம்ம பிரயத்னமாகவே கருதப்படுகின்றது. மக்கள் தொப்பை கொழுப்பையும், உடல் எடையையும் குறைக்க பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். ஆனால், இந்த முயற்சிகளால் அனைவருக்கும் பலன் கிடைப்பதில்லை. சிலருக்கு இதனால் பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன. இந்த நிலையில், சில எளிய, இயற்கையான வழிகள் மூலமாகவும் நாம் உடல் எடையை குறைக்க முடியும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
வறுத்த, காரமான மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் எடை அதிகரிப்பதில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. ஆகையால், இப்படிப்பட்ட உணவுகளை தவிர்த்து, ஆரோக்கியமான, அதே சமயம் உடல் எடையை குறைக்கக்கூடிய உணவுகளை நமது தினசரி டயட்டில் சேர்த்துக் கொள்வது நல்லது.
Juice for Weight Loss: உடல் எடையை குறைக்கும் ஜூஸ்
ரசாயனங்கள் மற்றும் செயற்கை நிறங்கள், இனிப்பு ஆகியவை இல்லாமல், இயற்கையான முறையில் எடை குறைக்க விரும்பினால், பீட்ரூட், கேரட் மற்றும் கீரை கொண்டு தயாரிக்கப்படும் இந்த சாறை குடிக்கலாம். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள நச்சுகளை நீக்கி, உங்கள் செரிமானத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
இந்த ஜூசின் நன்மைகள் என்ன?
பீட்ரூட், கேரட் மற்றும் பசலைக் கீரை - இந்த மூன்றுமே ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. இவற்றில் கொழுப்பு இல்லை என்றே கூறலாம். இவற்றை உட்கொள்வதன் மூலம், உடலில் கூடுதல் கொழுப்பு சேராது, வயிறு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வுடன் இருக்கும். இதன் காரணமாக அவ்வப்போது பசி எடுக்காது. இதனால் நாம் தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது.
எலுமிச்சையைச் சேர்ப்பது இந்த சாற்றின் சுவையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், உடலில் இருந்து நச்சு கூறுகளையும் நீக்குகிறது. இதில் இருக்கும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது, சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
செரிமானத்தை மேம்படுத்தி ஆற்றலை அதிகரிக்கிறது
இந்த சாற்றை தொடர்ந்து உட்கொள்வது உங்கள் செரிமானத்தை மேம்படுத்துகிறது. பீட்ரூட்டில் உள்ள ஆண்டிஆக்சிடெண்டுகள் உடலை உள்ளிருந்து சுத்தம் செய்கின்றன. பசலைக் கீரையில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது உடலில் ஆற்றலைப் பராமரிக்க உதவுகிறது, சோர்வைத் தடுக்கிறது.
எடை இழப்புக்கு உதவும் ஆரோக்கியமான சாறு: இதை தயாரிப்பது எப்படி?
இந்த சாறு தயாரிப்பது மிகவும் எளிது. இதற்கு தேவையான பொருகள்:
- 1 நடுத்தர அளவிலான பீட்ரூட்
- 2 கேரட்
- ஒரு கப் கீரை
- அரை எலுமிச்சை
- ஒரு சிட்டிகை கருப்பு உப்பு
காய்கறிகளை நன்கு கழுவி, சிறிய துண்டுகளாக நறுக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். பின்னர் இந்தக் கலவையை வடிகட்டி, அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் கருப்பு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். உங்கள் எடை இழப்பு ஜூஸ் தயாராகிவிட்டது! இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் அல்லது காலை உணவோடு சேர்த்து உட்கொள்ளலாம்.
சில முக்கியமான விஷயங்கள்
வெறும் ஜூஸ் குடிப்பதால் எடை இழப்பில் அற்புதமான பலன்கள் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனுடன், ஆரோக்கியமான உணவு, எடல் செயல்பாடு ஆகியவையும் மிக அவசியமாகும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ