நீரிழிவு நோய், இரத்த அழுத்தம்: இரண்டையும் சேர்த்து அட்டாக் செய்யும் 5 சூப்பர் உணவுகள்

Foods for Diabetes Control, Blood Pressure: நீரிழிவு நோய் மற்றும் இரத்த அழுத்தம் இரண்டையும் கட்டுக்குள் வைக்க உதவும் சில எளிய உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 23, 2025, 04:36 PM IST
  • ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக பலர் நீரிழிவு நோய்க்கு ஆளாகி வருகின்றனர்.
  • ஆரோக்கியமான உணவுமுறை, வாழ்க்கை முறை, உடற்பயிற்சி ஆகியவை மிக அவசியம்.
  • சில எளிய, இயற்கையான வழிகளின் மூலம் இந்த பிரச்சனையை கட்டுக்குள் வைக்க முடியும்.
நீரிழிவு நோய், இரத்த அழுத்தம்: இரண்டையும் சேர்த்து அட்டாக் செய்யும் 5 சூப்பர் உணவுகள்

Foods for Diabetes Control, Blood Pressure: ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணமாக இந்நாட்களில் பலர் நீரிழிவு நோய்க்கு ஆளாகி வருகின்றனர். அதே போல் உயர் இரத்த அழுத்தமும் இன்றைய காலகட்டத்தில் பரவலாக அதிகரித்து வருகின்றது. இந்த இரு நோய்களால் மாரடைப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் இன்னும் பல தீவிர பிரச்சனைகள் உருவாகின்றன. ஆகையால், சுகர் மற்றும் இரத்த அழுத்த பிரச்சனையை கட்டுக்குள் வைப்பது மிக அவசியமாகும். 

Add Zee News as a Preferred Source

ஆரோக்கியமான உணவுமுறை, வாழ்க்கை முறை, உடற்பயிற்சி ஆகியவை மிக அவசியம். சில எளிய, இயற்கையான வழிகளின் மூலம் இந்த பிரச்சனையை கட்டுக்குள் வைக்க முடியும். நீரிழிவு நோய் மற்றும் இரத்த அழுத்தம் இரண்டையும் கட்டுக்குள் வைக்க உதவும் சில எளிய உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Hot Water:  வெந்நீர்

காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பது உடலுக்கு பல நன்மைகளைத் தருகிறது. இது உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. இது செரிமான அமைப்பை மேம்படுத்தி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. ஒரு கிளாஸ் வெந்நீரில் அரை எலுமிச்சையின் சாற்றைக் கலந்து குடிப்பதால் வைட்டமின் சி அளவு அதிகரிக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.

Fenugreek: ஊறவைத்த வெந்தயம்

வெந்தயம் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் மிகவும் சக்திவாய்ந்த மூலிகையாகும். ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் சேர்த்து உட்கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். வெந்தயத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து இரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சப்படுவதை மெதுவாக்குகிறது. இது இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கிறது. மேலும் இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.

Almond: ஊறவைத்த பாதாம்

5-6 பாதாம் பருப்புகளை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அவற்றை உரித்து, வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. பாதாமில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது. நார்ச்சத்து சர்க்கரை உறிஞ்சுதலை மெதுவாக்குகிறது. பாதாமில் உள்ள மெக்னீசியம் இரத்த நாளங்களை தளர்த்தி இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.

Amla: நெல்லிக்காய்

நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. காலையில் வெறும் வயிற்றில் 20-30 மில்லி நெல்லிக்காய் சாற்றைக் தண்ணீரில் கலந்து குடிப்பது மிகவும் நல்லது. நெல்லிக்காய் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் கணையத்தின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. வைட்டமின் சி இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இது தவிர, நெல்லிக்காயில் அதிக அளவில் ஆண்டிஆக்சிடெண்டுகள் உள்ளன. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

Triphala: திரிபலா பொடி

திரிபலா என்பது மூன்று மூலிகைகளின் கலவையாகும். ஒரு டீஸ்பூன் திரிபலா பவுடரை இரவு முழுவதும் வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். திரிபலா செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது, குடல் இயக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது. ஆரோக்கியமான செரிமான அமைப்பு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

மேலும் படிக்க | வெயிட் லாஸ் முதல் வலுவான தசை வரை... புரதச்சத்தை அள்ளி வழங்கும் சூப்பர் சைவ உணவுகள்

மேலும் படிக்க | குழந்தைகள் கண்ணாடி போடுவதை தவிர்க்க..இன்றே ‘இந்த’ பழங்களை சாப்பிட வையுங்கள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News