கிலிகாட்டும் வைட்டமின் டி குறைபாடு!! இந்த உணவுகள் மூலம் செய்யலாம்

Foods For Vitamin D Deficiency: வைட்டமின் டி கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும். இதில் குறைபாடு ஏற்பட்டால், அதை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும். இல்லையெனில் அதன் குறைபாடு பல நோய்களுக்கு வழிவகுக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 25, 2025, 05:31 PM IST
  • முட்டையின் மஞ்சள் கரு வைட்டமின் டி இன் நல்ல மூலமாகும்.
  • தினமும் முட்டை சாப்பிட்டால், உடலில் வைட்டமின் டி குறைபாட்டை ஈடுசெய்யலாம்.
  • சால்மன், டுனா, கானாங்கெளுத்தி மற்றும் மத்தி போன்ற மீன்களை உட்கொள்வதால், உடலில் வைட்டமின் டி குறைபாட்டை சரி செய்ய முடியும்.
கிலிகாட்டும் வைட்டமின் டி குறைபாடு!! இந்த உணவுகள் மூலம் செய்யலாம்

Foods For Vitamin D Deficiency: உடலின் சீரான செயல்பாட்டிற்கு பல வித வைட்டமின்கள் நமக்கு உதவுகின்றன. அவற்றில் வைட்டமின் டி முக்கியமான ஒன்றாகும். உங்கள் எலும்புகள் மற்றும் தசைகளில் பலவீனம் ஏற்பட்டால், அது உடலில் வைட்டமின்-டி குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். இந்த ஊட்டச்சத்து நமது உடலுக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் இதன் குறைபாடு எலும்பு முறிவுகளுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. 

Add Zee News as a Preferred Source

வைட்டமின் டி கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும். இதில் குறைபாடு ஏற்பட்டால், அதை உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும். இல்லையெனில் அதன் குறைபாடு பல நோய்களுக்கு வழிவகுக்கும். மேலும் இது உங்கள் மன ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். வைட்டமின் டி மன அழுத்த ஹார்மோன்களையும் கட்டுப்படுத்துகிறது. கூந்தல் உதிர்தல், பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி ஆகிய அனைத்தும் இந்த வைட்டமின் குறைபாட்டின் அறிகுறிகளாக பார்க்கப்படுகின்றன.

நிபுணர்கள் கூறுவது என்ன?

ஒவ்வொரு மனிதனின் உடலிலும் வைட்டமின் டி உகந்த அளவில் இருப்பது முக்கியம் என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் அதன் குறைபாடு ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும். இது எலும்புகள், பற்கள் மற்றும் தசைகளை வலுப்படுத்தும் ஒரு அத்தியாவசிய வைட்டமின் ஆகும். இதன் குறைபாட்டால், முதுகுவலி மற்றும் உடலில் பலவீனம் ஆகியவை ஏற்படலாம். இது தவிர, தூக்கப் பிரச்சினைகள் அல்லது மனச்சோர்வு ஆகியவையும் இந்த வைட்டமின் குறைபாட்டின் அறிகுறிகளாகும்.

வைட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள் இந்த உணவுகளை உட்கொள்ளலாம்

மீன்: சால்மன், டுனா, கானாங்கெளுத்தி மற்றும் மத்தி போன்ற மீன்களை உட்கொள்வதால், உடலில் வைட்டமின் டி குறைபாட்டை சரி செய்ய முடியும். அவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

முட்டைகள்: முட்டையின் மஞ்சள் கரு வைட்டமின் டி இன் நல்ல மூலமாகும். தினமும் முட்டை சாப்பிட்டால், உடலில் வைட்டமின் டி குறைபாட்டை ஈடுசெய்யலாம்.

பால் மற்றும் பால் பொருட்கள்: பால், தயிர் மற்றும் சீஸ் போன்ற பால் பொருட்களும் வைட்டமின் டி-யின் சிறந்த மூலங்களாகும். இந்த உணவுகளையும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 

காளான்: காளான்களை சாப்பிடுவதன் மூலம் உடலில் வைட்டமின் டி குறைபாட்டையும் சமாளிக்க முடியும். சைவ உணவு உண்பவர்களுக்கு இது ஒரு சிறந்த உணவு விருப்பமாக அமையும். வெயிலில் வளரும் இரண்டு வகையான காளான்களான மைடேக் மற்றும் போர்டபெல்லோவை சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் டி குறைபாட்டை விரைவாக குணப்படுத்த முடியும்.

செறிவூட்டப்பட்ட தானியங்கள்: இந்த தானியங்களில் வைட்டமின் டி நிறைந்துள்ளது. செறிவூட்டப்பட்ட தானியங்கள் வைட்டமின்களுடன் தாதுக்களின் மூலமாகவும் கருதப்படுகின்றன. இவற்றை நீங்கள் காலை உணவாக சாப்பிடலாம். இந்த தானியங்கள் உடலில் ஊட்டச்சத்து அளவை அதிகரிக்கின்றன.

சூரிய ஒளி: இந்த உணவுகளை தவிர சூரிய ஒளி, குறிப்பாக காலை சூரிய ஒளி, வைட்டமின் டி குறைபாட்டை சரி செய்ய உதவும்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | காலை உணவிற்கு அவல் உப்புமா சிறந்த தேர்வு.... உணவியல் நிபுணர்கள் அட்வைஸ்

மேலும் படிக்க | அளவுக்கு அதிகமானால் நெருப்பாய் மாறும் கருப்பு மிளகு: பயங்கர பக்க விளைவுகளின் லிஸ்ட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News