நீரழிவு நோயாளிகள் தங்கள் உணவு பழக்க வழக்க வழக்கங்களில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதில் டயட் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சுகர் லெவல் வீட்டுக்குள் இல்லாமல் இருந்தால், கண்கள், சிறுநீரகம், இதயம் ஆகிய உறுப்புகள் பாதிக்கப்படும் ஆபத்து அதிகரிக்கும்.
இரத்த சர்க்கரை நோய் உள்ளவர்கள், பழங்களை அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பது பொதுவாக கூறப்படும் அறிவுரையாகும். ஆனால் பழங்களில் இருப்பது, குளுக்கோஸ் அல்ல, ப்ரூட்ஸ் என்பதால், பழங்களை சாப்பிடலாம் என்றும் சிலர் கூறி வருகின்றனர். எனினும் ஊட்டச்சத்து நிபுணர்கள், அதிக இனிப்பு சுவை கொண்ட பழங்களை தவிர்க்குமாறு கூறுகின்றனர். அதேசமயம், சில பழங்களை எடுத்துக் கொள்வது, நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவும்.
நீரழிவு நோயாளிகள் தயக்கம் இன்றி சாப்பிடக்கூடிய சில சூப்பர் பழங்கள்
நாவல் பழம்
இரத்த சர்க்கரை நோய் உள்ளவர்கள் தயக்கம் இன்றி சாப்பிடக்கூடிய பழங்களில் முதலிடம் வகிப்பது நாவல் பழம் எனலாம். இதில் உள்ள சத்துக்கள் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த மிகவும். நாவல் பழ விதைகளின் பொடி கூட, நீரிழிவு நோயை நிர்மூலமாக்கும் ஆற்றல் கொண்டது.
கொய்யா பழம்
கொய்யா பழத்தில் நார்ச்சத்து மட்டுமல்லாது, பொட்டாசியம், வைட்டமின் சி இரும்பு சத்து ஆகியவை அதிகம் காணப்படுகின்றன. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் பண்புகள் இதில் காணப்படுவதால், சர்க்கரை நோயாளிகள் இதனை தாராளமாக சாப்பிடலாம்.
பேரிக்காய்
பேரிக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதோடு, இதில் காணப்படும் என்சைங்கள் செரிமானத்தை வலுப்படுத்துகின்றன. ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க, செரிமான ஆரோக்கிய மிகவும் முக்கியம்.
ஆப்பிள்
ஆப்பிள் பழத்தில் உள்ள, பெக்டின் என்ற நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் வைட்டமின் சி, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பல வகைகளில் உதவுகிறது. மேலும் இதில் கலோரிகளும் மிகவும் குறைவு. வயிறு நிறைந்த உணர்வைத் தருவதால், பசியை கட்டுப்படுத்தவும் உதவும்.
பப்பாளி பழம்
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும், சிறந்த பழங்களில் பப்பாளியும் ஒன்று. இதில் உள்ள நார்ச்சத்து, செரிமானப் பிரச்சனைகளை போக்கி, கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.
ஆரஞ்சு பழம்
ஆரஞ்ச பழத்தில் உள்ள வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, கொழுப்பை எரிக்கவும் உதவும்.நீரிழிவு நோயாளிகள் இதனை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் இது பசியை குறைக்கும் ஆற்றல் கொண்டது.
கிவி பழம்
கிவி பழத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும். மேலும் இது ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும் ஆற்றல் கொண்ட இதை, சர்க்கரை நோயாளிகள் தாராளமாக சாப்பிடலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது).
மேலும் படிக்க | சியா விதை சூப்பர்ஃபுட் தான்... ஆனால் சரியான முறையில் சாப்பிடவில்லை என்றால் ஆபத்து
மேலும் படிக்க | கோடையில் யூரிக் அமில பிரச்சனைக்கு முடிவு கட்ட இதை மட்டும் செய்யுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









