கெட்ட கொலஸ்ட்ராலை வேகமாய் குறைக்க உதவும் 4 பெஸ்ட் உணவுகள்: கண்டிப்பா சாப்பிடுங்க

Cholesterol Control Tips: உடலில் கெட்ட கொழுப்பை வேகமாக கரைத்து, கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க உதவும் சில எளிய உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 1, 2025, 04:59 PM IST
  • நெல்லிக்காயில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது.
  • இது கெட்ட கொழுப்பை உடலில் இருந்து அகற்ற உதவுகிறது.
  • இது மன அழுத்தத்தைக் குறைப்பதிலும் உதவியாக இருக்கும்.
கெட்ட கொலஸ்ட்ராலை வேகமாய் குறைக்க உதவும் 4 பெஸ்ட் உணவுகள்: கண்டிப்பா சாப்பிடுங்க

Foods For Cholesterol Control: இன்றைய நவீன உலகில் பலர் பல வித வாழ்க்கை முறை நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் உயர் கொலஸ்ட்ராலும் முக்கியமான ஒன்றாக உள்ளது. ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் வாழ்கைமுறை ஆகியவை கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.

Add Zee News as a Preferred Source

உடலில் இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உள்ளது: நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால். நல்ல கொழுப்பு உடலின் வளர்சிதை மாற்றத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. இது பல நோய்களிலிருந்து நாம் விடுபடவும் உதவுகிறது. ஆனால், கொழுப்பு அதிகமானால், அது கடுமையான நோய்களை ஏற்படுத்தும்.

கொலஸ்ட்ரால் என்பது எந்த வயதினரையும் பாதிக்கக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனையாகும். மோசமான உணவுப் பழக்கவழக்கங்களாலும், மாறிவரும் வாழ்க்கை முறையாலும், இந்தப் பிரச்சனை அதிகரித்து வருகிறது. ஆரோக்கியமற்ற, துரித, பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது கொழுப்பை அதிகரிக்கும் வாய்ப்புகளை அதிகப்படுத்தும். 

உடலுக்கு கொலஸ்ட்ரால் அவசியம், ஆனால் அது அதிகமானால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும். பல எளிய, இயற்கையான வழிகளில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தலாம். உடலில் கெட்ட கொழுப்பை வேகமாக கரைத்து, கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க உதவும் சில எளிய உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் ஆரோக்கியமான 5 உணவுகள்:

Oats: ஓட்ஸ்

ஓட்ஸ் கரையக்கூடிய நார்ச்சத்தின் சிறந்த மூலமாக கருதப்படுகின்றது. இது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இதில் பீட்டா குளுக்கோன் உள்ளது, இது குடல்களை சுத்தம் செய்ய உதவுகிறது. இது செரிமானத்தை சீராக வைத்திருக்கும். கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு ஓட்ஸ் ஒரு நல்ல காலை உணவாக கருதப்படுகின்றது. அதனுடன் நறுக்கிய ஆப்பிள், பேரிக்காய் அல்லது சில ராஸ்பெர்ரி அல்லது ஸ்ட்ராபெர்ரிகளைச் சேர்க்கலாம்.

Avocado: அவகேடோ

அவகேடோ பழங்கள் ஆரோக்கியமான கொழுப்புகளின் நல்ல மூலமாகும். இவை கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகின்றன.

Nuts: கொட்டைகள்

அக்ரூட் பருப்புகள், பாதாம், வேர்க்கடலை போன்ற கொட்டைகள் மற்றும் ஆளி விதைகள் மற்றும் சியா விதைகள் போன்ற விதைகளில் நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளன. அவை கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.

Fruits, Vegetables: பழங்கள் மற்றும் காய்கறிகள்

பழங்கள் மற்றும் காய்கறிகளில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன.

Amla: நெல்லிக்காய்

நெல்லிக்காயில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இது கெட்ட கொழுப்பை பிணைத்து உடலில் இருந்து அகற்ற உதவுகிறது. இது மன அழுத்தத்தைக் குறைப்பதிலும் உதவியாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பெண்களே உஷார்.. தோள்பட்டையில் ஓவர் வலியா? அப்போ ஹார்ட் அட்டாக் ஆ இருக்கலாம்

மேலும் படிக்க | தினம் வெறும் வயிற்றில் 4 - 5 துளசி இலைகள் போதும்... உச்சி முதல் பாதம் வரை அருமருந்து

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News