)
Uric Acid Control Tips: நம் உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால், அது மூட்டுவலி, கீல்வாதம் மற்றும் சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். யூரிக் அமிலம் பிரச்சனையை நாம் சரியான நேரத்தில் கட்டுப்படுத்தாவிட்டால், அது படிப்படியாக அதிகரிக்கத் தொடங்குகிறது. இந்த பிரச்சனை பொதுவாக நமது வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால் ஏற்படுகிறது. இது எலும்புகளுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும். யூரிக் அமிலத்தைக் குறைப்பதற்கான எளிய வழிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
யூரில் அமிலத்தை குறைக்க உதவும் 5 இயற்கையான, எளிய வழிகள்:
1. Lemon: எலுமிச்சை நீர்
எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது யூரிக் அமிலத்தை உடைத்து உடலில் இருந்து அகற்ற உதவுகிறது. யூரிக் அமில நோயாளிகள் தினமும் காலையில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சையை பிழிந்து குடிக்க வேண்டும். இது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
2. Apple Cider Vinegar: ஆப்பிள் சைடர் வினிகர்
ஆப்பிள் சைடர் வினிகர் உடலில் உள்ள நச்சுகளை நீக்க உதவுகிறது. மேலும் உடலில் அதிகரித்த யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தவும் இது உதவுகிறது. ஒருவருக்கு மிக அதிக யூரிக் அமில பிரச்சனை இருந்தால், அவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை ஒரு கிளாஸ் தண்ணீரில் 1-2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து குடிக்க வேண்டும்.
3. Water: போதுமான அளவு தண்ணீர்
யூரிக் அமிலம் உள்ள நோயாளிகள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இது சிறுநீரகத்தை சுத்தமாக வைத்திருக்கவும், சிறுநீர் வழியாக யூரிக் அமிலத்தை வெளியேற்றவும் உதவுகிறது. யூரிக் அமில நோயாளிகள் தினமும் குறைந்தது 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.
4. Low Purine Foods: குறைந்த அளவு பியூரின் உள்ள உணவுகள்
சிவப்பு இறைச்சி, கடல் உணவு மற்றும் பீர் போன்ற பியூரின்கள் நிறைந்த உணவுகள் யூரிக் அமிலத்தை அதிகரிக்கும். யூரிக் அமில நோயாளிகள் இந்த உணவுகளைத் தவிர்த்து, பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றும் முழு தானியங்களை தங்கள் உணவில் சேர்க்க வேண்டும்.
5. Amla: நெல்லிக்காய் நன்மை பயக்கும்
வைட்டமின்-சி நிறைந்த நெல்லிக்காயை சாப்பிடுவதன் மூலமும் யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்தலாம். நெல்லிக்காய் சாப்பிடுவது சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதை உட்கொள்ள, யூரிக் அமில நோயாளிகள் நெல்லிக்காய் சாறு, சட்டினி அல்லது ஜாம் செய்து சாப்பிடலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ