Kitchen Spinces For Cholesterol Control: இன்றைய அவசர உலகில் அதிகரித்து வரும் வாழ்க்கை முறை நோய்களில் அதிக கொலஸ்ட்ரால் ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. கொலஸ்ட்ரால் என்பது நரம்புகளில் படிந்துவிடும் ஒரு ஒட்டும் பொருளாகும். இதன் காரணமாக இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகின்றது.
கொலஸ்ட்ரால் இரண்டு வகையில் உள்ளது. ஒன்று கெட்ட கொலஸ்ட்ரால், ஒன்று நல்ல கொலஸ்ட்ரால். இருப்பினும் கொலஸ்ட்ரால் அளவு உடலில் குறைவாகவே இருக்க வேண்டும். உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும் போது, அதிகமான உடல்நலப் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்தால், இதய நோய்களுக்கான ஆபத்து அதிகரிக்கிறது.
நரம்புகளில் அடைப்பு ஏற்படுவதால், இது மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தையும் ஏற்படுத்தும். கெட்ட கொழுப்பைக் குறைக்க பல வித வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தலாம். நமது சமையலறையில் நாம் பயன்படுத்தும் மசாலாக்களே இதில் நமக்கு உதவும். அத்தகைய மசாலாப் பொருட்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Home Remedies to Control Cholesterol: கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவும் வீட்டு வைத்தியங்கள்
Black Pepper: கருப்பு மிளகு
கருப்பு மிளகு உடலில் கொழுப்பின் அளவை குறைக்க உதவும். இதில் பைப்பரின் எனப்படும் ஒரு சேர்மம் உள்ளது. ஒரு சிட்டிகை கருப்பு மிளகை தேனுடன் கலந்து சாப்பிடுவது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும்.
Turmeric: மஞ்சள்
மஞ்சளில் குர்குமின் என்ற கலவை உள்ளது. இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இது கெட்ட கொழுப்பைக் குறைப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும். தினசரி நாம் செய்யும் சமையல், பால், தேநீர் ஆகியவற்றில் மஞ்சளை சேர்க்கலாம்.
Cinnamon: இலவங்கப்பட்டை
நரம்புகளில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்பைக் குறைக்க இலவங்கப்பட்டையை பயன்படுத்தலாம். கொழுப்பை குறைக்க ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதை உட்கொள்வது இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
Fenugreek: வெந்தயம்
வெந்தயத்தை தினமும் உட்கொண்டு நரம்புகளில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்பைக் குறைக்கலாம். இது நரம்புகளை சுத்தம் செய்து இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, அதன் தண்ணீரைக் காலையில் உட்கொள்ளலாம். வெந்தயத்தை முளைக்கச் செய்தும் சாப்பிடலாம்.
Ajwain: ஓமம்
கெட்ட கொழுப்பைக் குறைக்க, ஓமம் நீர் மிகவும் நல்லதாக கருதப்படுகின்றது. ஓம விதைகளில் உள்ள மருத்துவ குணங்கள் கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவுகின்றன.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | DengiAll: டெங்கு நோயை ஒழித்துக் கட்ட... டெங்கிஆல் தடுப்பூசியை தயாரிக்கிறது இந்தியா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









