)
Breakfast for Weight Loss: உடல் பருமன் இந்த காலத்தில் பலரை பாடாய் படுத்தும் ஒரு பிரச்சனையாக உள்ளது. இது இன்னும் பல வித உடல் நல கோளாறுகளையும் ஏற்படுத்துகின்றது. மக்கள் தொப்பை கொழுப்பை கரைக்கவும் உடல் எடையை குறைக்கவும் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள்.
எனினும், சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். எடை இழப்பில் காலை உணவிற்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. எடை இழக்க சரியான உணவை உட்கொள்வது மிகவும் முக்கியம். ஆரோக்கியமான மற்றும் குறைந்த கலோரி காலை உணவை உட்கொண்டு நாளைத் தொடங்குவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், நாள் முழுவதும் நம்மை ஆற்றலோடு வைத்திருக்கும். எடை இழக்கும் எண்ணத்தில் உள்ளவர்கள் காலை உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆனால் குறைந்த கலோரிகள் கொண்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும். தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க உதவும் சில ஆரோக்கியமான காலை உணவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Oats: ஓட்ஸ்
ஓட்ஸில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரி அளவு குறைவாகவும் உள்ளது. இது வயிற்றை நீண்ட நேரம் நிரம்பிய உணர்வுடன் வைத்திருக்கும். ஓட்ஸில் உள்ள பீட்டா-குளுக்கன் நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி எடை இழப்பை ஊக்குவிக்கிறது. ஓட்ஸை தண்ணீரில் அல்லது குறைந்த கொழுப்புள்ள பாலில் சமைத்து, அதில் பழங்கள் அல்லது கொட்டைகள் சேர்த்து உட்கொள்ளலாம்.
Curd: தயிர்
தயிரில் அதிக புரதம் மற்றும் குறைந்த கலோரிகள் உள்ளன. இது எடை இழப்புக்கு ஒரு சிறந்த காலை உணவு விருப்பமாக அமைகிறது. இது செரிமானத்தை மேம்படுத்தி ஆரோக்கியமான குடல் பாக்டீரியாவை அதிகரிக்க உதவுகிறது.
Eggs: முட்டை
முட்டைகள் புரதத்தின் நல்ல மூலமாகும். காலை உணவுக்கு முட்டை வெள்ளை ஆம்லெட் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இதில் கலோரிகள் குறைவாக உள்ளது. மேலும் உடலுக்கு அத்தியாவசிய அமினோ அமிலங்களை இது வழங்குகிறது. குடை மிளகாய், கீரை, தக்காளி போன்ற காய்கறிகளைச் இதில் சேர்த்து இதை மேலும் ஆரோக்கியமாக்கலாம்.
Chia Seeds: சியா விதைகள்
சியா விதைகளில் நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அவை எடை இழப்புக்கு உதவியாக இருக்கும். சியா விதைகளை இரவு முழுவதும் தண்ணீரில் அல்லது குறைந்த கொழுப்புள்ள பாலில் ஊறவைத்தால் அவை ஜெல் போல மாறும். இதை காலை உணவாக சாப்பிடலாம். தேன், இலவங்கப்பட்டை மற்றும் சில பழங்களைச் சேர்த்து அதன் சுவையை அதிகரிக்கலாம்.
Sprouts:முளைகள்
முளைகளில் புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை எடை இழப்புக்கு உதவுகின்றன. இது லேசான காலை உணவாக கருதப்படுகின்றது. இதில் கலோர்கள் மிக குறைவாக இருக்கும். இது நீண்ட நேரம் வயிற்றை நிறம்பிய உணர்வுடன் வைக்கிறது. எலுமிச்சை மற்றும் லேசான மசாலாப் பொருட்களைச் சேர்த்து இதன் சுவையை அதிகரிக்கலாம்.
எடை இழக்க முயற்சிக்கும் நபர்கள் நிச்சயமாக இந்த குறைந்த கலோரி காலை உணவுகளை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இவை எடையை குறைத்து, உடற்தகுதியை ஆதரிப்பது மட்டுமல்லாமல், நாள் முழுவதும் உடலை வைத்திருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ