Thyroid Home Remedies: தைராய்டு பிரச்சனையை கட்டுகுள் வைத்து, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும் சில உண்வுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Thyroid Home Remedies: பொதுவாக 30 வயதுக்கு பிறகு பலரிடம் காணப்படும் பிரச்சனைகளில் தைராய்டு பிரச்சனையும் முக்கியமான ஒன்றாக உள்ளது. எனினும், இன்றைய மோசமான வாழ்க்கை முறையால், இது அனைத்து வயதினரையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது.
தைராய்டு என்றால் என்ன?
தைராய்டு என்பது கழுத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய சுரப்பி ஆகும். இது உடலின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துகிறது. ஆனால் இந்த சுரப்பி சரியாக செயல்படாதபோது, ஹார்மோன்களின் சமநிலை பாதிக்கப்படுகின்றது. இதனால் எடை அதிகரிப்பு அல்லது இழப்பு, முடி உதிர்தல் மற்றும் மனநிலை மாற்றங்கள் போன்ற கடுமையான பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.
தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள், அதை கட்டுக்குள் வைத்திருக்க, உணவில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். தைராய்டு பிரச்சனையை கட்டுகுள் வைத்து, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும் சில உண்வுகளை பற்றி இந்த பதிவில் காணலாம். காலையில் இவற்றை உட்கொண்டால் அது தைராய்டு நோயாளிகளுக்கு அதிக நன்மை பயக்கும்.
தைராய்டு நோயாளிகளுக்கான சிறந்த காலை உணவுகள்:
வெதுவெதுப்பான நீர் குடிக்கவும்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீர் குடிப்பது தைராய்டு பிரச்சனையைச் சமாளிக்க ஒரு சிறந்த வழியாகும். இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இது வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துவதோடு தைராய்டை கட்டுப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது.
தனியா நீர் குடிக்கவும்
தனியா நீர், அதாவது மல்லி விதைகளின் நீர் குடிப்பது தைராய்ட் பிரச்சனைக்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது தைராய்டு சுரப்பியின் சரியான செயல்பாட்டிற்கு உதவும்.
ஊறவைத்த பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகள்
தைராய்டு பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற, ஊறவைத்த பாதாம் மற்றும் அக்ரூட் பருப்புகளை உட்கொள்ளலாம். இவை செலினியத்தின் நல்ல மூலமாகும். இவை தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவும். ஒவ்வொரு நாளும் 4-6 ஊறவைத்த பாதாம் மற்றும் வால்நட்ஸ்களை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
சியா விதைகள் மற்றும் ஆளி விதைகள்
சியா விதைகள் மற்றும் ஆளி விதைகள் தைராய்டைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். அவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளன. அவை செரிமானத்தை சீராக வைத்து தைராய்டால் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவும்.
புரதம் நிறைந்த பொருட்கள்
தைராய்டு நோயாளிகளுக்கு புரதம் மிகவும் முக்கியமானது. ஆகையால், முட்டை, முளைகள் அல்லது ஓட்ஸ் போன்ற புரதம் நிறைந்த பொருட்களை உணவில் சேர்ப்பது நல்லது. இது நாள் முழுவதும் உடலையும் மனதையும் உற்சாகமாக வைத்திருக்கிறது, மேலும் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது.
யோகா மற்றும் பிராணயாமம்
இந்த உண்வௌகளிய தவிர, யோகா மற்றும் பிராணயாமத்தின் உதவியுடநும் தைராய்டு பிரச்சனைகளை கட்டுப்படுத்தலாம். தினமும் சர்வாங்காசனம், ஹலாசனம், கபாலபதி மற்றும் அனுலோம்-விலோம் மற்றும் மத்ஸ்யாசனம் போன்ற யோகா மற்றும் பிராணயாமங்களைச் செய்யலாம். இவை தைராய்டைக் குறைத்து மன அழுத்தத்தையும் குறைக்கின்றன.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ