Morning Food for Diabetes Control: நீரிழிவு நோயாளிகள் உணவில் அதிக கடுப்பாட்டுடன் இகருக்க வேண்டும். இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, சர்க்கரை நோயாளிகள் தங்கள் டயட்டில் ஆரோக்கியமான உணவைச் சேர்ப்பது மிக முக்கியம். பல நேரங்களில் காலையில் எழுந்ததும் சர்க்கரை அளவு அதிகரிக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், அதைக் கட்டுப்படுத்தாவிட்டால், வேறு பல பிரச்சினைகளும் அதிகரிக்கும்.
பல நேரங்களில் உயர் இரத்த அளவு இதயத்தையும் பாதிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், ஒருவர் இன்சுலின் எதிர்ப்பால் பாதிக்கப்பட்டிருந்தால், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க, காலை உணவில் ஆரோக்கியமான உணவைச் சேர்க்க வேண்டும். இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். மேலும், உடலின் ஆற்றலும் நிலைத்திருக்கும். இரத்த சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க காலையில் உட்கொள்ள வேண்டிய உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Lemon Water: வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை நீர்
காலையில் வெதுவெதுப்பான நீரில் சில துளிகள் எலுமிச்சை சாற்றைச் சேர்த்து குடிப்பது நல்லது. இருப்பினும், எலுமிச்சை சாறு சேர்க்கும்போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இது புளிப்பு சுவை கொண்டது. இதனால் ஒற்றைத் தலைவலி அல்லது சைனசிடிஸை ஏற்பட வாய்ப்புள்ளது. இது உங்கள் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இதன் மூலம் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் படிப்படியாக உடலை சுறுசுறுப்பாக மாற்றுகிறது. இது தவிர, நாள் முழுதும் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே உட்கொள்ளுங்கள்.
Fruits: பழங்களை உட்கொள்வது நல்லது
ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரிகளில் நார்ச்சத்து மற்றும் ஆண்டிஆக்சிடெண்டுகள் அதிகமாக உள்ளன. அவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இதனுடன், அவை ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும் உதவுகின்றன. இவற்றை உங்கள் காலை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
Green Smoothie: பச்சை ஸ்மூத்தி
காலையில் பசியைக் குறைக்க விரும்பினால், கீரை, வெள்ளரி மற்றும் புதினா போன்றவற்றை சேர்த்து தயாரிக்கப்பட்ட ஸ்மூத்திகளை உங்கள் உணவில் சேர்த்து வீட்டிலேயே ஆரோக்கியமான பானத்தை தயாரிக்கலாம். இதை குடித்து உங்கள் நாளைத் தொடங்கலாம். ஃப்ரெஷ்ஷாக அரைத்து குடிக்கும் பச்சை காய்கறிகள் சாறு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
Curd: தயிர்
இனிப்பு சேர்க்காத தயிரில் உள்ள புரோபயாடிக்குகள் குடல் ஆரோக்கியத்தையும் இன்சுலின் எதிர்ப்பையும் மேம்படுத்த புரதத்தை வழங்குகின்றன. வெற்று தயிர் சாப்பிடுவது உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கு போதுமான புரதத்தையும் நல்ல பாக்டீரியாவையும் வழங்கும். இது இன்சுலின் எதிர்ப்பை நிர்வகிக்க அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
Eggs: முட்டைகள்
முட்டையில் புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. இது உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. மேலும் இது வயிற்றுக்கு நிரம்பிய உணர்வை அளிக்கின்றது. ஆகையால் தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க |யூரிக் அமிலத்தின் 7 லேசான அறிகுறிகள்! ஆரம்பத்திலேயே கண்டுகொள்ளுங்கள்..
மேலும் படிக்க | மூலநோய் பிரச்சனையா... மலச்சிக்கலை ஏற்படுத்தும் இந்த உணவுகளுக்கு நோ சொல்லுங்க









