)
Weight Loss Tips: உடல் பருமன் இன்றைய காலகட்டத்தில் பலரை பாடாய் படுத்தும் பிரச்சனையாக உள்ளது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை மூறை மற்றும் உணவுமுறை காரணமாக பலர் பல வித பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். இதில் உடல் பருமனும் முக்கியமான ஒரு பிரச்சனையாக உள்ளது.
குறிப்பாக, தொப்பை கொழுப்பு (Belly Fat) வேகமாக அதிகரித்து விடுகிறது, ஆனால், அதை குறைப்பது அத்தனை எளிதல்ல. பலர் பல வழிகளில் உடல் எடையை குறைக்க முயற்சி செய்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள். சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். எனினும், சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம்.
குறிப்பாக, குளிர் காலங்களில் உடல் எடை வேகமாக அதிகரித்து விடுகின்றது. இந்த நேரங்களில் சூரிய ஒளி குறைவாக இருப்பதால், உடலில் வைட்டமின் டி குறைபாடு ஏற்படுவதாகவும், இதன் காரணமாக உடலின் வளர்சிதை மாற்றமும் பாதிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். சில சிறிய விஷயங்களில் கவனம் செலுத்தினால், குளிர் காலங்களில் உடல் எடையை எளிதாக கட்டுக்குள் வைக்கலாம். இவற்றின் மூலம் தொப்பை கொழுப்பை குறைத்து, உடல் எடையை குறைப்பது மட்டுமல்லாமல், உடலை ஃபிட்டாகவும் வைக்கலாம்.
Water: எடை இழப்பு நீர்
காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் வெந்நீர், சீரகத் தண்ணீர், தேன், எலுமிச்சை நீர் அல்லது சியா விதை நீர் குடிப்பது உடல் எடையை குறைக்க பெரிய வழியில் உதவும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நீர் அனைத்தும் எடையைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். இவை கொழுப்பை எரிக்க உதவுகின்றன. காலையில் இந்த எடை இழப்பு பானங்களை குடித்த பிறகு, அரை மணி நேரம் எதையும் சாப்பிடவோ அல்லது குடிக்கவோ கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
Exercise: உடற்பயிற்சி
குளிர்காலத்தில், படுக்கையில் இருந்து எழுந்திருக்கக்கூட மனமிருக்காது. இப்படிப்பட்ட நேரத்தில் உடற்பயிற்சி செய்வது ஒரு பெரிய பணியாகத் தெரியும் வாய்ப்புள்ளது. ஆனால், குளிர் காலங்களிலும் காலையில் குறைந்தது 30 நிமிடங்களாவது நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகாசனம் போன்று ஏதாவது ஒரு உடல் செயல்பாட்டில் ஈடுபட வேண்டும். இது அதிக அளவில் நன்மை பயக்கும்.
Food: உணவின் அளவு
உடல் எடையை குறைக்க உணவின் அளவில் கட்டுப்பாடுகள் அவசியம் என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். மூன்று வேளை அதிக அளவில் உணவை உட்கொள்வதை விட, அவ்வப்போது சிறிது சிறிதாக உணவை உட்கொள்ளலாம். இது நீண்ட நேரம் வயிற்றுக்கு நிரம்பிய உணர்வை அளிக்கும். இதன் மூலம், தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது.
Balanced Food: சமச்சீர் உணவு
காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என மூன்று வேளைகளிலும் சமச்சீர் உணவை உட்கொள்ள வேண்டும். உணவில் போதுமான அளவு நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமின்கள், இரும்புச்சத்து ஆகியவை இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
Fruits, Vegetables: காய்கள், பழங்கள்
குளிர்காலத்தில் எடை மற்றும் தொப்பை கொழுப்பைக் கட்டுப்படுத்த, பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும். அவற்றின் கலோரி அளவு மிக குறைவு, நார்ச்சத்து அதிகம். ஆகையால் இவை எடை இழப்பில் பெரிதும் உதவுகின்றன.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ